கணித சாஸ்திரம்
பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான சகாதேவன் சாஸ்திரத்தில் வல்லவர். அவர் இயற்றிய இந்த சாஸ்திரம்
பவந க்ருஹம்,க்ருஹ அலங்காரம்,ஸவநம்,வர்ணமாலிகம்,போன்ற ஸாஸ்த்ரங்களுக்கு கணித்ஙகள்
நாம் வாழும் இது தமிழ்நாடாகும்,
இது பாரத நாட்டில் ஒரு அங்கம்
பாரத நாடு ஜம்புத்வீபத்தில்(ஆசியாகண்டத்தில்)அடக்கம்,
இது ஏழு கண்டத்தில்ஒன்று,
ஏழு கண்டங்கள் இப்பூமண்டலத்தில் அடக்கம்,
இப்பூமண்டலம் சூர்ய குடும்பத்தில் அடக்கம்,
இச்சூர்ய குடும்பம் சிற்றண்டத்தில் ஒன்று,
ஒரு சிற்றண்டம் நூற்றெட்டு சூர்ய குடும்பத்தைக்கொண்டது,
ஒரு சிற்றண்டமானது பேரண்டத்தில் அடக்கம்,
ஒரு பேரண்டத்தில் ஆயிரத்தெட்டு சிற்றண்டங்கள் உள்ளன,
நூற்றெட்டு பேரண்டங்கள் ஒரு வில்வ பழம்,
நூற்றெட்டு வில்வ பழங்கள் ஒரு வில்வ மரத்தில் அடக்கம்,
நூற்றெட்டு வில்வ மரம் ஒரு புவநம்,
இது போல் புவநங்கள் மூன்று,
அதைத்தாண்டி உட்பாழ்,
அதன்மேல் உள்வெளிப்பாழ்,
அதன் மேல் வெளிஉட்பாழ்,
அதன் மேல் வெளிபாழ்,
அதன் மேல் உள்ஒளிப்பாழ்,
அதன் மேல்வெளி ஒளி பாழ்,
அதன் மேல் மனோன்மணி,
அதன் மேல் தமர்
இதுவே அண்ட அமைப்பாகும்
ஒரு சிற்றண்டத்தில் பூமிகள் = 108
ஒரு பேறண்டத்தில் பூமிகள் = 1008 X 108 = 108864
ஒரு வில்வ பழத்தில் பூமிகள் =108864 X 108 = 11757312
ஒரு வில்வ மரத்தில் பூமிகள் =11757312 X 108 = 1269789696
ஒரு புவநத்திற்கு பூமிகள் =1269789696 X 108 = 137137287168
மூன்று புவனத்திற்கு பூமிகள் = 137137287168 X 3 = 411411861504
நாறபத்தோராயிரத்து நூற்று நாற்பத்தொரு கோடியே பதினெட்டு லக்ஷத்தி அறுபத்தோராயிரத்து ஐநூற்று நான்கு பூமிகளாகும்.
எல்லா பூமிகளிலும் ஜீவராசிகள் உண்டு
ஜீவராசிகள் பிறந்த நாளை சுத்த தினமாக மாற்றி அதை எந்த கிரகத்தை கணிதம் செய்யவெண்டுமோ அந்த கிரகத்தின் பகணங்களால் பெருக்கி குவாசரத்தால் வகுத்துவந்த ஈவு பகணாதி கிரக மத்திமமாகும்
சக்ர கலைகளை கிரக பகணங்களால் பெருக்கி குவாசரத்தால் வகுத்துவந்த ஈவு கிரக மத்திய கலாதி கதிகளாகும்.
கிரக மத்திய கதியை தேசாந்தர யோஜனையால் பெருக்கி ஸ்புட பூபரிதியால் வகுத்து வந்த ஈவு பூர்வ பச்சிம தேச ருண தன கலாதிகளாகும்.
சிருஷ்டியாதியாக சென்ற வருடங்களை கிரக மந்தோச்சங்களால் பெருக்கி
சகஸ்ரகுணித யுகரவி பகணங்களால் வகுத்து வந்த ஈவு பகணாதி கிரக மந்தோச்சங்களாகும்.
சிருஷ்டியாதியாக சென்ற வருடங்களை கிரக பாத பகணங்களால் பெருக்கி சகஸ்ரகுணித யுகரவி பகணங்களால் வகுத்து வந்த ஈவு பகணாதி கிரக பாதங்களாகும்.
கலியுகம் கழிந்த வருடத்தை சக்ரகலாஷ்ட்த்தை கழித்து கிரக பீஜ பல பகணங்களால் பெருக்கி பீஜ பல குவாசரத்தால் வகுத்து வந்த ஈவு சூர்யன்,செவ்வாய்,புதன்,சனி, இவர்களுக்கு தனமும் மற்ற கிரகங்களுக்கு ருணமுமான கலாதிகளாகும்.
ஈவு தள்ளி மீதியை முறையே 12,30,60 ஆல் பெருக்கி முன் தொகைக்கு வகுத்து வந்த ஈவு இராசி பாகை கலை விகலைகளாகும்.
இது போல் நக்ஷத்ர மண்டல ஒட்டம்,சிற்றண்ட ஓட்டம், பேறண்ட ஓட்டம்,புவன சலனம்,போன்ற கணிதங்கள்,சகாதேவன் சாஸ்திரத்தில் இருக்கிறது மிகவும் பய பக்தியுடன் ஸாஸ்திரத்தை பாதுகாத்தும் வருகிறேன்
No comments:
Post a Comment