Pages

எந்தெந்த திதியில் வெற்றி கிட்டும்

 

எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும் 

 

                                                                                                                                           திதி- என்றால் என்ன?

சந்திரனின் சஞ்சாரத்தை அடிப்படையாகக் கொண்டது - திதி

சாந்திர மாதம்; 29 நாள் 12 மணி 44 நிமிடங்கள் கொண்டது ஒரு சாந்திர மாதம் (Lunar Month).

சாந்திர வருடம்; இப்படி பன்னிரண்டு சாந்திர மாதங்கள் கொண்டது ஒரு சாந்திர வருடம் (Lunar year).

இது 354 நாட்கள் கொண்டது. ஒரு சாந்திர மாதத்தின் இருபத்து ஒன்பதரை நாட்கள் சொச்சத்துக்குள் முப்பது திதிகள் அடங்கி நிற்கும்.

கிருஷ்ண பட்சம்; சந்திரன் பூமியைச்சுற்றி வரும்பொழுது அது தேய்ந்து வருகின்ற காலம் தேய்பிறைக் காலமாகும். இது அமாவாசையில் (New Moon) முடிவுறும். இதை கிருஷ்ண பட்சம் என்பர்.

சுக்ல பட்சம்; சந்திரன் பூமியைச்சுற்றி வரும்பொழுது அது வளர்ந்து வருகின்ற காலம் வளர்பிறைக் காலமாகும். இது பௌர்ணமி என்னும் முழுநிலவில் முடிவுறும். இதை சுக்ல பட்சம் என்பர்.

வளர் பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும், தேய்பிறைக்காலத்தில் பதினைந்து திதிகளும் வருகின்றன. இந்தப்பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை அமாவாசையும் பௌர்ணமியும் மாதமொரு முறை மாறி மாறி வந்து போகின்றன.

. அமாவாசை - நிலவில்லாத நாள். இன்று நிலவுக்கு ஒரு கலை.

1. பிரதமை - முதாலம் பிறை. இன்று நிலவுக்கு இரண்டு கலைகள் உள்ளன.
2. துதியை - இரண்டாம் பிறை. இன்று நிலவுக்கு மூன்று கலைகள். துவி என்பது இரண்டு என்று பொருள் படும்.   இதில் இருந்துதான் துவிச்சக்கர வண்டி, துவைதம் போன்ற சொற்கள் வந்தன. அத்துவைதம் என்றால் இரண்டு அல்லாதது என்று பொருள்.
3. திருதியை- மூன்றாம் பிறை. இன்று நிலவுக்கு நான்கு கலைகள். திரி என்ற சொல் மூன்று என்று பொருள்படும்.   திரிபுரம் என்பது முப்புரங்களான மூன்று நகரங்களைக் குறிக்கும். திரிநேத்ரன் என்றால் முக்கண்ணன் என்று சிவனைக் குறிக்கும்.
4. சதுர்த்தி- நாலாம் பிறை. இன்று நிலவுக்கு ஐந்து கலைகள். சதுர் என்றால் நான்கு என்று பொருள். சதுரம் என்றால் நான்கு பக்கங்கள் உள்ளது என்று பொருள். சதுர்முகன் என்றால் நான்கு முகங்களை உடைய பிரம்மாவைக் குறிக்கும். 'சுக்லாம் பரதரம்' என்ற பிள்ளையார் மந்திரத்தில் வருகின்ற சதுர்ப்புஜம் என்பது பிள்ளையாரின் நான்கு தோள்களைக் குறிக்கும். சதுர்யுகம் என்பது கிருதயுகம், திரேதா யுகம், துவாபர யுகம், கலியுகம் என்ற நான்கு யுகங்களினதும் கூட்டாகும்.
5. பஞ்சமி-ஐந்தாம் பிறை. இன்று நிலவுக்கு ஆறு கலைகள். பஞ்ச என்றால் ஐந்து என்று பொருள்.  . பஞ்சாட்சரம் என்பது சைவத்தின் ந-ம-சி-வா-ய என்ற ஐந்து எழுத்து மந்திரத்தைக் குறிக்கும். பஞ்ச பூதங்கள் என்பது நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்னும் ஐந்து பௌதிகப் பேரலகுகளைக குறிக்கும். பஞ்சாங்கம் என்பது ஒவ்வொரு நாளுக்கும் உரிய வாரம், திதி, நட்சத்திரம், யோகம், கரணம் ஆகிய ஐந்து அங்கங்களை உடைய வானியல் கணிப்பைக் குறிக்கும்.
6. ஷஷ்டி-ஆறாம் பிறை. இன்று நிலவுக்கு ஏழு கலைகள். ஷ என்றால் ஆறு என்று பொருள்.  வந்தது.ஷண்முகன் என்பது ஆறு முகங்களுடைய முருகனைக் குறிக்கும். ஷடாட்சரம் என்பது முருகனின் ச-ர-வ-ண-ப-வ என்ற ஆறு எழுத்து மந்திரமாகும்..
7. ஸப்தமி-ஏழாம் பிறை. இன்று நிலவுக்கு எட்டு கலைகள். ஸப்த என்றால் ஏழு என்று பொருள்.  . ஸப்த ரிஷிகள் என்பது ஏழு முனிவர்களைக் குறிக்கும்.
8. அட்டமி-எட்டாம் பிறை. இன்று நிலவுக்கு ஒன்பது கலைகள்.  . அட்டம் என்றால் எட்டு என்று பொருள். அட்டலட்சுமி என்றால் எட்டு இலட்சுமிகளைக் குறிக்கும். அட்ட திக்குகள் என்றால் கிழக்கு, தென் கிழக்கு, தெற்கு, தென் மேற்கு, மேற்கு, வட மேற்கு, வடக்கு, வடகிழக்கு என்னும் எட்டுத் திக்குகளைக் குறிக்கும். அட்டதிக்குப் பாலகர்கள் என்றால் முறையே இந்த எட்டு திக்குகளுக்கும் உரிய இந்திரன். அக்கினி, இயமன், நிருதன், வருணன், வாயு, குபேரன், ஈசானன் எட்டு திக்குத்தெய்வங்களையும் குறிக்கும். ' அருணன் இந்திரன் திசை அணுகினான்' என்றால் சூரியனின் சாரதியாகிய அருணன் இந்திரனுக்குரிய கிழக்குத் திசையை அணுகினான் என்று பொருள். இந்த வரி திருவாசகத்தின் திருப்பள்ளி எழுச்சியில் வருகின்றது.
9. நவமி- ஒன்பாதம் பிறை. நிலவுக்கு பத்து கலைகள். நவம் என்றால் ஒன்பது.  . நவராத்திரி என்றால் ஒன்பது இரவுகளைக்குறிக்கும். நவதானியம் என்றால் ஒன்பது தானியங்களைக் குறிக்கும். நவக்கிரகம் என்பது ஒன்பது கிரகங்களைக் குறிக்கும்.
10. தசமி- பத்தாம் பிறை. இன்று நிலவுக்கு பதினொரு கலைகள். தசம் என்றால் பத்து. கணிதத்தில் தசமத்தை அறிமுகப்படுத்தியவர்கள் இந்துக்களே. இதை ஆங்கிலத்தில் Decimal என்று கூறுகிறார்கள். தசகாரியம் என்பது ஆத்மீகப்பாதையிலுள்ள பத்துப்படிநிலைகளைக் குறிக்கும். தசரா என்று நமது நவராத்திரியை வட இந்தியாவில் பத்து நாட் கொண்டாட்டமாகக் கொண்டாடுவர். 'தக்க தசமதி தாயொடு தான்படும் துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும்' - திருவாசகம். இங்கு தசமதி என்பது பத்து மாதங்கள். இது தாயின் வயிற்றில் நாம் இருந்த காலத்தைக் குறிக்கின்றது.
11. ஏகாதசி- பதினோராம் பிறை. இன்று நிலவுக்கு பன்னிரண்டு கலைகள். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். ஏகம் என்றால் ஒன்று. ஏகாதசி என்றால் பத்தும் ஒன்றும் சேர்ந்த பதினொன்று.
12. துவாதசி- பன்னிரண்டாம் பிறை. இன்று நிலவுக்கு பதின்மூன்று கலைகள். துவி என்றால் இரண்டு என்று பார்த்தோம். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். துவாதசி என்பது பத்தும் இரண்டும் சேர்ந்த பன்னிரண்டைக் குறிக்கும்.
13. திரயோதசி-பதின்மூன்றாம் பிறை. இன்று நிலவுக்குப் பதினான்கு கலைகள். திரி என்றால் மூன்று என்று பார்த்தோம். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். திரயோதசி என்பது பத்தும் மூன்றும் சேர்ந்த பதின்மூன்றைக் குறிக்கும்.
14. சதுர்த்தசி- பதினான்காம் பிறை. இன்று நிலவுக்குப் பதினைந்து கலைகள். சதுர் என்றால் நான்கு என்று பார்த்தோம். தசம் என்றால் பத்து என்று பார்த்தோம். சதுர்த்தசி என்பது பத்தும் நான்கும் சேர்ந்த பதினான்கைக் குறிக்கும்.
15. பௌர்ணமி- பூரண நிலவு. இன்று பூரண நிலவுக்கு கலைகள் பதினாறு. அமாவசையில் இருந்து ஒவொரு கலைகளாக வளர்ந்து இன்று பதினாறு கலைகள் கொண்ட பூரண நிலவாகப் பரிணமிக்கின்றது. .
இந்த திதிகளை பௌர்ணமி- பூரண நிலவு நாள் துவங்கி அமாவாசை - நிலவில்லாத நாள் வரை உள்ள தேய்பிறைக்காலத்தில் கிருஷ்ண பட்ச திதிகள் என்றும், அமாவாசை - நிலவில்லாத நாள் துவங்கி பௌர்ணமி- பூரண நிலவு நாள் வரை உள்ள வளர்பிறை காலத்தில் சுக்ல பட்ச திதிகள் என்றும் அழைக்கிறோம். ஆக மொத்தம் திதிகள் முப்பது.                                                                                                                                                                                                                                             நற்பலன் தரும் திதிகள்:

ஞாயிறு-அஷ்டமி, திங்கள்-நவமி, செவ்வாய்-சஷ்டி, புதன்-திரிதியை; வியாழன்-ஏகாதசி, வெள்ளி-திரயோதசி, சனி-சதுர்த்தசி திதி.  இத்தகைய நாட்களில் வரும் திதிகளில் எந்த ஒரு நல்ல காரியம் செய்தாலும் அது வெற்றியே கிட்டும்.

சுபகாரியங்களுக்குக் கூடாத திதிகள்:

ஞாயிறு-சதுர்த்தசி, திங்கள்-சஷ்டி, செவ்வாய்-சப்தமி, புதன்-துவிதியை, வியாழன்-அஷ்டமி, வெள்ளி-நவமி, சனி-சப்தமி மேற்கூறியபடி குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட்ட திதிகள் வரும்போது அந்த நாட்களில் நற்காரியங்கள் செய்வதை தவிர்ப்பது  அவசியம். ஏனெனில் அன்று செய்யப்படும் நற்காரியங்கள் பலன் அளிக்காது. வளர்பிறை, தேய்பிறை ஆகிய காலங்களில் சில திதிகளுக்கு இரண்டு கண்கள் உண்டு. இத்திதிகளில் நற்காரியங்கள் செய்தால் நலந்தரும்.                                                                                                                                                                          
                                                                                                                                                                                                                                                                                                     .எந்த திதிகளில் பிறந்தவர்கள் கடவுளுக்கு என்ன படைத்து வணங்கலாம் என்று பார்ப்போம்                                                                                                                                                                                                                                                                                     .
• பிரதமை அன்று பிறந்தவர்கள் கடவுளுக்கு நெய் படைத்து வழிபட வேண்டும்.

• துவிதியை அன்று பிறந்தவர்கள் சர்க்கரை படைத்து வழிபடலாம்.

• திருதியை அன்று பிறந்தவர்கள் பால் படைத்து வழிபட வேண்டும்.

• சதுர்த்தி அன்று பிறந்தவர்கள் பட்சணம் படைத்து வழிபடலாம்.

• பஞ்சமி அன்று பிறந்தவர்கள் வாழைப்பழம் படைத்து வழிபட வேண்டும்.

• சஷ்டி அன்று பிறந்தவர்கள் தேன் படைத்து வழிபட வேண்டும்.

• சப்தமி அன்று பிறந்தவர்கள் வெள்ளம் படைத்து வழிபட வேண்டும்

• அஷ்டமி அன்று பிறந்தவர்கள் தேங்காய் படைத்து வழிபடலாம்.

• நவமி அன்று பிறந்தவர்கள் நெற்பொறி படைத்து வழிபடலாம்.

• தசமி அன்று பிறந்தவர்கள் கருப்பு எள் படைத்து வழிபட வேண்டும்.

• ஏகாதசி அன்று பிறந்தவர்கள் தயிர் படைத்து வழிபட வேண்டும்.

• துவாதசி அன்று பிறந்தவர்கள் அவல் படைத்து வழிபட வேண்டும்.

• திரயோதசி அன்று பிறந்தவர்கள் கடலை படைத்து வழிபடலாம்.

• சதுர்த்தி அன்று பிறந்தவர்கள் சத்துமாவு படைத்து வழிபட வேண்டும்.

• பௌர்ணமி / அமாவாசை அன்று பிறந்தவர்கள் பாயாசம் படைத்து வழிபட வேண்டும்.

இவ்வாறு நீங்கள் பிறந்த திதிகளில் உங்கள் இஷ்ட தெய்வத்துக்கு இதனை படைத்து வணங்கினால் துன்பத்திலிருந்து விடுபட்டு செல்வ செழிப்புடன் வாழலாம்.   எந்த திதியில் என்ன‌ காரியங்கள் செய்யலாம் ?



*எந்தெந்த திதியில் என்னென்ன காரியங்கள் செய்தால் வெற்றி கிட்டும்

 1.பிரதமை் திதி:
அதிபதி:
அக்னி பகவான்
பிரதமை திதியில் செய்யத்தக்க காரியம்:
உலோகம், மரம் இவைகளில் சிற்ப வேலைகள் பாய் முடைதல் படுக்கைக்கு சித்திர வேலை செய்தல் போன்றதும் ஆயுதம் கத்தி போன்றது செய்யவும்*

2. துதியை திதி:
அதிபதி:
துவஷ்டா தேவதை
துதியை திதியில் செய்யத் தக்க காரியம்:
விவாஹம், யாத்திரை, தேவதா பிரதிஷ்டை, ஆபரணம் தயாரித்தல், நற்கார்யம் வீடு கட்டுதல் நல்லது!

3. திருதியை திதி:
அதிபதி:
பார்வதி
திருதியை திதியில் செய்யத்தக்க காரியம்:
வீடு கட்டுதல, கிரஹ பிரவேஷம், பெண் சேர்க்கை ,பார்வதி தேவதை என்பதால் கிரஹ பிரவேஷம் ,பெண் சேர்க்கை & பார்த்தல் போன்றதுக்கு உகந்ததிதி ஆகும்!

4. சதுர்த்தி திதி:
அதிபதி:
கஜநாதன் [விநாயகர்]
சதுர்த்தி திதியில் செய்யத்தக்க காரியம்:
வதம் செய்தல், மந்திரகட்டு, தெய்வகார்யம் மட்டும் செய்யவும் சதுர்த்தி திதியில் நற்காரியம் செய்ய ஒரு மாதத்தில் பின்னமாகும், [சங்கடகர சதுர்த்தி இதற்கு விதிவிலக்கு ஞாயிறு அன்று வரும் சதுர்த்தி திதி இதற்கு விதி விலக்கு ]

5. பஞ்சமி திதி:
அதிபதி:
சர்ப்பம்
பஞ்சமி திதியில் செய்யத் தக்க காரியம்:
இத்திதியில் செய்யும் கார்யம் நிலைத்து நிற்கும் என்பது ஐதீகம் அனைத்து விஷயத்துக்கும் எடுத்து கொள்ளலாம் !
6. சஷ்டி திதி:
அதிபதி:
முருகன்
சஷ்டி திதியில் செய்யத் தக்க காரியம்:
வேலைக்கு சேர, பசுமாடு வாங்க, வீடு வாங்க, வாகனம் வாங்க, மருந்து தயாரிக்க நன்று, நன்மையும் தீமையும் சரி பாதி என்பது பொது கணக்கு!

7. சப்தமி திதி:
அதிபதி:
சூரியன்
சப்தமிதிதியில் செய்யத் தக்க காரியம்:
வீடுகட்ட, உபநயனம், விவாஹம், தேவதா பிரதிஸ்டை, இடம் மாற்ற ம், விவசாயம், துவிதியை, திருதியை பஞ்சமி திதியில் சொல்லப் பட்ட விஷயம் மற்றும் பொதுவாக முன்னோர் கர்மாக்களை செய்ய உகந்தது இத்திதி!
8. அஷ்டமி திதி:
அதிபதி:
சிவபெருமான்
அஷ்டமிதிதியில் செய்யத்தக்க காரியம்:
யுத்தம், தான்யம், வாஸ்து, சிற்பம், ரத்தினம், ஆபரணம், கிரையம் செய்ய மற்றும் கோவில் பூஜைக்கு உகந்த திதி இது!

9. நவமி திதி:
அதிபதி:
பாராசக்தி
நவமிதிதியில் செய்யத்தக்க காரியம்:
பகைவரை சிறைபிடிக்க பகைவரை அழிக்க, நண்பர்களுக்குள் போதம் உண்டாக்க அதிக தோசம் உள்ள திதி அல்ல இது!

10. தசமி திதி:
அதிபதி
ஆதிசேஷன்
தசமி திதியில் செய்யத் தக்க காரியம்:
தர்மகார்யம் செய்யவும், நாகதேவனுக்கு ராகுகேது பரிகாரம் செய்யவும், சரீரம் ஆரோக்கிய முயற்சி, மங்களகரமான காரியம், ஜலம், முக்கியஸ் தரை சந்திக்க உகந்தது இந்த திதி !

11. ஏகாதசி திதி:
அதிபதி:
தர்ம தேவதை
ஏகாதசி திதியில் செய்யத் தக்க காரியம்:
பொதுவாக உபவாசம் இருக்க உகந்தது இந்த திதி, விவாஹம், விவசாயம், ஆபரணம், வாஸ்து சாந்தி, சிற்பம் ஆகியவைகளை செய்யலாம்!

12. துவாதசி திதி:
அதிபதி:
விஷ்ணு
துவாதசி திதியில் செய்யத் தக்க காரியம்:
விருந்துண்ண தனம், தான்யம் சம்பாதிப்பது, சுபசெலவுகள், தர்ம காரியம், நிலையுள்ள நிலையில்லா அனைத்தும் செய்யலாம். [திருவோணம் இணையும் துவாதசி மட்டும் ஆகாது]

13. திரயோதசி திதி:
அதிபதி:
மன்மதன்
திரயோதசி திதியில் செய்யத் தக்க காரியம்:
அனைத்தும் செளபாக்கியமான மங்களகரமான காரியம், நாட்டியம், ஆபரணம், வாகன பயிற்சி & நீண்ட கால திரு மண தடை இருக்கும் வரன் இந்த திதியில் பெண் பார்க்க திருமணம் சீக்கிரம் கைகூடும், திருமண தடையை நீக்கும் பரிஹாரம் செய்ய உகந்த திதி ஆகும்!

14. சதுர்தசி திதி:
அதிபதி:
கலிபுருஷன்
சதுர்தசி திதியில் செய்யத்தக்க காரியம்:
பல் சீரமைத்தல்,தைலம் தேய்க்க, யாத்திரை
– வளர்பிறையில் நாம் நாராயணனை வணங்கி வர வேண்டும்!
-தேய்பிறையில் சிவபெருமானை வணங்கி வரவேண்டும்!

-வளர்பிறை எனும் சுக்கில பட்ஷத்தில் மட்டும் சுபகார்யம் செய்யலாம் தேய்பிறையில் சுபகாரியம் தவிர்க்க வேண் டும்.
அமாவாசைக்கு முதல் நாளில், நம் முன்னோர் மற்றும் இறந்தவர்களுக்குண்டான காரியம் மட்டும் செய்யவும்!

பௌர்ணமியில் செய்ய தக்கவை: கடவுள் வழிபாடு மட்டும் செய்யவும், யாகம் , மங்களகரமான கார்யம், புஷ்டி தரும். மருந்துண்ணல் , திருமண நிச்சயம், தேவதா பிரதிஷ்டை போன்றதை செய்யலாம்                                                                                                                                                                                                                                            .                                                                                                                                                                                                                                                                    திதிகளுக்கு ஒரு தனி மகத்துவம் உண்டு.

அக்ஷய திருதியை – திருதியை

விநாயக சதுர்த்தி – சதுர்த்தி

வஸந்த பஞ்சமி – பஞ்சமி

ஸ்கந்த ஷஷ்டி – ஷஷ்டி

ரத சப்தமி – சப்தமி

கிருஷ்ண ஜயந்தி – ஜன்மாஷ்டமி – அஷ்டமி

ராம நவமி – நவமி

மஹா சிவராத்திரி – மஹா சதுர்த்தசி – சதுர்த்தசி

சித்ரா பௌர்ணமி – பௌர்ணமி

மஹாளய அமாவாசை – அமாவாசை

இப்படி திதிகளை வைத்தே பல முக்கிய தினங்களை நாம் சுட்டிக் காட்டுகிறோம்.

எந்த திதியில் எதை விலக்க வேண்டும் என்பதற்கும் கூட நம் சாஸ்திரங்கள் தீர்க்கமான வழிகாட்டுதலைத் தருகின்றன.

ஷஷ்டி, அஷ்டமி, அமாவாசை, சதுர்த்தசி, பௌர்ணமி ஆகிய தினங்களில் எண்ணெய் மற்றும் மாமிசத்தை விலக்க வேண்டும் என்று மனு ஸ்மிருதியும் விஷ்ணு புராணமும் கூறுகின்றன

ஆக இப்படிப் பல்வேறு விதிகளை நமது நலன் கருதி இதனால் ஏற்படும் நன்மை தீமைகளைக் கால ஓட்டத்தில் பரீட்சித்ததாலும், உள்ளுணர்வாலும் கண்ட நம் முன்னோர்கள் அவற்றைப் பல்வேறு சாஸ்திர நூல்களில் கூறியுள்ளார்கள்.

இவை அனைத்தையும் படித்துத் தேர்ந்தவரே ஜோதிடர். ஆகவே தான் அவரிடம் ஒரு காரியத்தைத் தொடங்கு முன் அதை என்று செய்யலாம் என்பதைக் கேட்கும் வழக்கம் தொன்று தொட்டு இருந்து வந்தது.


No comments:

Post a Comment