Pages

அஸ்த்ர சாஸ்திரம்

அஸ்த்ரம்
அஸ்த்ரம் என்பது இரண்டு வகைப்படும் ஒன்று ஸ்தூலம் மற்றொன்று ஸூக்ஷ்மம்(அல்லது) மந்த்ரம்,
ஸ்தூலம் என்பது இரும்பு,செம்பு,போன்ற உலோகத்தால் செய்யப்பட்ட அம்பு எனப்படும் ஆயுதமாகும்,இதை எய்தால் எய்த இலக்கை தாக்கும் மீண்டும் எய்தவனை வந்தடையாது,இதை திடமான கேடயத்தாலும் உலோக கவசத்தாலும் தாக்குறாமல் தடுத்துக்கொள்ளலாம்.

இவற்றிலும் இரண்டு வகையுண்டு ஒன்று நிர்ரஸாயனம்,மற்றொன்று ஸரஸாயனம், ஸரஸாயனம் என்பது செடிகொடிகளின் விஷம்,ஸர்பம் போன்ற விஷஜந்துக்களின் விஷம், தாதுக்கள் எனப்படும் பாஷாண்ங்களின் விஷக்கலவைகள் பூசப்பட்ட முனையை கொண்டதாகும்,நிர்ரஸாயனம் என்பது அப்படி எந்த பூசுமில்லாமல் வெகு கூர்மையான முனையை மட்டுமே கொண்டாதாகும்.

ஸூக்ஷ்மம் என்பது மந்திர ஜபத்தால் மந்திரிக்கப்பட்ட சக்திவாய்ந்த அம்புஸூக்ஷ்மம்(அல்லது) மந்த்ராஸ்த்ரம் எனப்படும்,இவைகளிலும் க்ஷூத்ரம்(அல்லது)ராக்ஷஸம், ஆஸூரம்,தைவிகம்,திவ்யம்(அல்லது) ஸ்ரேஷ்டம்,என நான்கு வகைப்படும்.

க்ஷூத்ரம்(அல்லது)ராக்ஷஸம் என்பது மிகக்கீழ்மையான அதாவது பூத ப்ரேத பைஸாஸ வேதாளங்களைக்கொண்டு ப்ரயோகம் செய்யப்படுவதாமும்.
இது சத்ருவினிடத்தில்(ஸைந்யத்தில்),மலம், மூத்திரம் மாம்ஸம் ரக்த்தம், போன்றதை மழைபோன்று வாரி அடிக்கும்.

ஆஸூரம் என்பது அசுரர்கள் தானவர்கள் தைத்யர்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடியது. பல அற்புதமான மாயா வினோதங்கள் காட்டக்கூடியது.இதனால் எதிராளி மனந்தளர்ந்து போக வைக்கும்.

தைவீகம் என்பது ஆக்னேயாஸ்த்ரம்,வாய்வாஸ்த்ரம்,வருணாஸ்த்ரம்,மோஹனாஸ்த்ரம்,நாகாஸ்த்ரம்,கருடாஸ்த்ரம்,அமோகாஸ்த்ரம்,பர்வதாஸ்த்ரம்,பிம்பாஸ்த்ரம்,போன்று 108வகையான அஸ்திரம் தைவிகம் எனப்படும்.

திவ்யம்(அல்லது) ஸ்ரேஷ்டம், என்பது மிகவும் மேன்மையான தெய்வ வழிபாட்டாலும் தவத்தாலும் மட்டுமே அடையக்குடியதாகும்.
ஸுதர்ஸநம், நந்தம், கௌமோதகம், நாராயணம், உக்ர நாராயணம், பிரம்மம், (அல்லது) பிரம்மசிரஸ், பாஸுபதம்,அகோரம், காலாக்னி ருத்ரம்,வைநதேயம், ஸக்தி, கௌமாரம் பாஸ்கரம் போன்று 24 வகையான அஸ்த்ரம் திவ்யம்(அல்லது) ஸ்ரேஷ்டம்.
மேற்கூறப்பட்ட க்ஷூத்ரம்(அல்லது)ராக்ஷஸம், ஆஸூரம், தைவிகம்,  திவ்யம் (அல்லது) ஸ்ரேஷ்டம்,என நான்கு வகையான ஸுக்ஷ்மாஸ்த்ரங் களிலும்.

அதிஸுக்ஷ்மம் என்ற மற்றொருவகையுண்டு அவை என்னவென்றால் ஸுக்ஷ்மாஸ்த்ரங்கள் போன்று அம்புகளில் மந்திரிக்காமல்,ஜலத்தை தெளிப்பதன் மூலமும்,கைகளைத்தட்டி ஒசை எழுப்புவதன் முலமும் மனதால் நினைப்பதன் முலமும் ப்ரயோகிப்பது அதிஸுக்ஷ்மம் என்றமுறையாகும்.

மேற்படி அனைத்து அஸ்திரங்களை ப்ரயோகம் செய்ய அறிந்து வைதிருப்பதற்கு அஸ்த்ர ஸாமர்த்யம் என்று பெயர்.ஒருவர் எந்த வகையான அஸ்திரத்தை ப்ரயோகம் செய்துள்ளாரோ அதற்கு சரியான எதிர் அஸ்திரம் அறிந்துக்கொள்வது பரதிகூல அஸ்த்ர ஸாமர்த்யம்என்று பெயர்.விட்ட அஸ்திரத்தை அடக்கி அதை தன்னிடம் மீண்டும் எடுத்துக்கொள்வத்ற்கு அஸ்த்ர உபஸம்ஹார ஸாமர்த்யம் எனப்படும்.

ஆக்னேயாஸ்திரத்திற்கு எதிர் அஸ்திரம் வருணாஸ்திரமாகும் வாய்வாஸ்த்திரத்திற்கு  எதிர் அஸ்திரம் பர்வதாஸ்திரமாகும் மோஹனாஸ்த்திரத்திற்கு எதிர் அஸ்திரம் அமோஹாத்திரமாகும் நாகாஸ்திரத்திற்கு  எதிர் அஸ்திரம்  கருடாஸ்திரமாகும்……க்ஷூத்ரம்(அல்லது)ராக்ஷஸம், ஆஸூரம் போன்ற அஸ்திரங்களுக்கு,ஆக்னேயம் வாருணம் போன்ற தெய்வீகாஸ்திரகள் எதிரஸ்திரமாகாது.தெய்வீக மந்த்ர கவசங்களும்,திவ்யாஸ்திரங்களும் தான் எதிர் அஸ்திரங்க்களாகும்..
ஸ்தூலம் முறை ப்ரயோகங்களுக்கு உடல் வலிமை கூர்மையான கண்பார்வை திடப்பயிற்சி போன்றவை வேண்டும்.ஸுக்ஷ்ம முறை ப்ரயோகங்க்களுக்கு மனோவலிமை,நல்ல ஒழுக்கம்,ஜப ஸித்தி தாரணா ஸித்தி மற்று அஸ்த்ர தேவதையின் கடாக்ஷம்,எல்லாவற்றிர்கும் மேலாக குரு கிருபாகடாக்ஷமும் தேவை.
எனக்கு இவையாவையும் ப்ரயோக உபஸம்ஹாரங்களுடன் கற்று தந்துள்ளார்எமது குருநாதார் நான் இக்கலை அழிந்து போகாவண்ணம் நல்ல சிஷ்யர்களை எதிர்பார்த்து வருகின்றேன் பலவகையில் சோதித்துப்பார்த்து தான் இக்கலையை பயிற்று வைக்க வேண்டும் மிகவும் சக்தி வாய்ந்த்தென்பதால்


2 comments: