சனி பெயர்ச்சி பலன்கள், பரிகாரங்கள்

சனி பெயர்ச்சி பலன்கள், பரிகாரங்கள்
விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். சனி பெயர்ச்சி அடைய இன்னும் 6 மாதங்கள் இருந்தாலும் அவரது சஞ்சார பலன், பார்வை பலன் ஆறு மாதத்திற்கு முன்பு இருந்தே தொடங்கி விடும் என்பதால் இந்த பலன்கள், பரிகாரங்கள் எழுதுகிறோம். சனியைப்போல் கொடுப்பாரும் இல்லை அவரைப்போல் கெடுப்பாரும் இல்லை அப்படியானால் இந்த சனிமாற்றம் உங்களுக்கு எப்படியான பலன்களைத் தரப்போகின்றார்
24-01-2020 அன்று காலை மணி 9.55 ஐ.எஸ்.டி. மணி அளவில் சனிபகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். இந்த காலகட்டத்தில் 11-10-2018 அன்று இரவு மாலை 07.20 ஐ.எஸ்.டி. மணி அளவில் குருபகவான் துலா ராசியிலிருந்து விருச்சிக ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார்.
மேலும் 5-11-2019 அன்று காலை மணி 5.20 ஐ.எஸ்.டி மணி அளவில் குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார். ராகு- கேது பகவான்கள் 23.3.2019 அன்று மாலை மணி 4.14 ஐ.எஸ்.டி. அளவில் கடக, மகர ராசிகளிலிருந்து மிதுன, தனுசு ராசிகளுக்குப் பெயர்ச்சி ஆகிறார்கள். இந்த சனிப்பெயர்ச்சி பலன்கள் 11-10-2018 வரை ஒரு பகுதியாகவும் 23-01-2020 வரை மற்றொரு பகுதியாகவும் (குருபகவானின் சஞ்சாரத்தைக் கருத்தில் கொண்டு) எழுதப்பட்டுள்ளது.
பொதுவாகவே குரு, சனி பகவான்களின் பெயர்ச்சிகள் அனைவரின் மனதிலும் ஓர் ஆச்சரியமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தி விடுகிறது. அதிலும் குறிப்பாக சனி பகவானின் பெயர்ச்சியால் நம் வாழ்க்கையில் என்ன நடக்குமோ என்கிற பயம் கலந்த எதிர்பார்ப்பு உண்டாகிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.
சனிபகவான் ஜோதிட கிரந்தங்களில் நீதிமான் என்று வருணிக்கப்படுகிறார். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கு ஏற்ப நமக்கு கொடுக்க வேண்டியதை அது நல்லதோ அல்லது கெட்டதோ அவைகளை அனா பைசா வித்தியாசம் இல்லாமல் நமக்கு கொடுத்து விடுவார்.
சனிபகவான் கடினமான பாதையில் நம்மை நடக்க வைப்பார். கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்பார்களே அதுபோல் அசௌகரியமான சூழ்நிலைகளில் நாம் வாழ கற்றுக் கொடுப்பார்.
தடைகளுக்கும் இழப்புகளுக்கும் பிறகே மனிதன் மனிதனாகிறான் என்பதால் பண்பட்ட மனிதர்களை உருவாக்குபவர் சனி பகவானாவார். மேலும் நம்மைப் போலவே மற்றவர்களையும் நினைக்க வேண்டும் என்பதையும் நமக்கு அனுபவ பாடமாகக் கற்பிப்பவர் சனி பகவானாவார் என்றால் மிகையாகாது.
இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் பரிகாரங்களையும் தனித்தனியாக பார்க்கலாம். மேஷ ராசிக்காரர்களுக்கு சனிபகவான் பத்தாம் வீட்டில் அமர்கிறார். இது தொழில் ஸ்தானம். பத்தாம் இடம் கர்மஸ்தானம் என்பதால் இதை கர்மசனி என்றும் சொல்லலாம். மேஷராசி
மேஷத்திற்கு தொழில் சனி - தடைகள் நீங்கி சாதிப்பீர்கள்
இந்த சனிப்பெயர்ச்சியால் மேஷ ராசிக்காரர்களுக்கு, தொழில், திருமணம், வேலைவாய்ப்பு எப்படி என்று பார்க்கலாம். சனிப்பெயர்ச்சி பலன்களை பொறுத்தவரை பழைய நூல்களில் 3,6.11ல் சனி வருவதை மட்டுமே நன்மை செய்யும் என சொல்லப்பட்டுள்ளது. பொதுவாக ஜாதகத்தில் இருக்கக் கூடிய கிரகங்களின் நிலை, தற்சமயம் நடக்கக் கூடிய தசாபுக்தி மற்றும் அந்தரம் அனைத்து கிரகங்களின் கோட்சார நிலை பொறுத்து பலன்கள் மாறுபடும் என்பதால் பலன்களைப் பார்த்து பயப்பட தேவையில்லை.
கடவுள் இருக்கிறார் கை விட மாட்டார் என்று நம்புவோம். பலன்தரும் பரிகாரங்களும் இருக்கின்றன. சனி பார்வை என்ன செய்யும் சனிபகவான் நியாயவான் எனவேதான் அவருக்கு இறைவன், கலபுருஷ தத்துவத்தில் ஜீவனம் மற்றும் ஆயுள் ஆகிய பணிகளை செய்ய கட்டளையிட்டுள்ளார். சனிபகவானுக்கு, 3 , 7 , 10 இடப்பார்வைகள் உண்டு என்று ஜோதிட நூல்கள் தெரிவிக்கின்றன. மேஷ ராசிக்காரர்களுக்கு சனி பகவான் இருக்கும் இடம் பத்தாம் வீடு என்றாலும் அவரது பார்வை உங்கள் ராசிக்கு 12ஆம் வீடு, 4ஆம் வீடு, 7ஆம் வீடுகளின் மீது விழுகிறது.
விரைய ஸ்தானம், சுக ஸ்தானம், களத்திர ஸ்தானங்களின் மீது சனிபகவான் பார்வை விழுவதால் அதற்கேற்ப இரண்டரை ஆண்டுகாலம் உங்களுக்கு பலன்கள் கிடைக்கும். ஜீவன சனி பத்தாம் அதிபதி பத்தில் அமர்வது பாதகமில்லை. தொழில் ஸ்தான அதிபதி அவரது வீட்டில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். உங்களுக்கு பாதகமில்லை. தொழில் வளர்ச்சி அதிகரிக்கும். புதிய வேலை கிடைக்கும்.
இந்த சனிப்பெயர்ச்சியால் உடல் நலத்தில் சில பாதிப்புகள் ஏற்படும். குறிப்பாக முதுகு வலி ஏற்படும் கவனம் தேவை. லாபம் அதிகரிக்கும் இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு உங்களுக்கு லாபமோ லாபம்தான். காரணம் சனிப்பெயர்ச்சியோடு குருவின் சஞ்சாரமும் சாதகமாக உள்ளது. அடுத்தடுத்து நிகழ உள்ள ராகு கேது பெயர்ச்சியும் அற்புதமாக உள்ளது. செய்யும் தொழிலில் வருமானம் கூடும். வேலை செய்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். பாக்கெட்டில் பணம் அதிகரிக்கும். அதே நேரத்தில் யாருக்கும் கடன் தர வேண்டாம். திரும்ப வரும் என்ற உத்தரவாதமில்லை.
தோள் மீது சுமை வேலை செய்யும் இடத்தில் அதிக பொறுப்புகள் உங்கள் தோள் மீது சுமத்தப்படும். எதையும் எளிதாக எடுத்துக்கொண்டால் பாரம் கண்ணுக்குத் தெரியாது. சம்பளம் அதிகரிக்க அதிகரிக்க வேலைச்சுமையும் அதிகரிக்கத்தானே செய்யும். எனவே கவலை வேண்டாம் கணபதியை வணங்க, வேலை செய்யும் இடத்தில் இருக்கும் பிரச்சினைகள் நீங்கும். மரியாதை அதிகரிக்கும் இதுவரை உங்களைப்பற்றிய தவறான பார்வை மாறி பெயர் புகழ் அந்தஸ்து சற்று கூடும். உங்களுக்கென்று சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.
எதைச் செய்ய ஆரம்பித்தாலும் எடுத்தோம் முடித்தோம் என்றில்லாமல் சற்று வேகமாக முயற்சி எடுத்தீர்கள் என்றால் எண்ணிய எல்லாம் நல்லதாகவே நடக்கும். பேச்சில் கவனம் தேவை பணப்புழக்கம் சற்று தாரளமாக இருந்து வரும். தேவையான விஷயத்திற்கு தேவையான செலவுகளைச் செய்து வரவும். அப்பொழுது தான் வீண் விரையச் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும். அடிக்கடி அலைச்சல்கள் ஏற்படும். அடிக்கடி பயணங்கள் ஏற்படும். பேச்சில் சற்று கவனமாக இருத்தல் வேண்டும். தேவையற்ற விஷயங்களைப் பற்றிப் பேசுதல் கூடாது.
புது வீடு வாகனம் வாங்க வாய்ப்பு அரசாங்க விஷயங்கள் சற்று லாபகரமாக இருந்து வரும். இதுவரை அரசாங்க விஷயத்தில் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் நீங்கி சாதகமான செய்திகள் வந்து சேரும். எதைச் செய்ய ஆரம்பித்தாலும் எடுத்தோம் முடித்தோம் என்றில்லாமல் கவனமாக செய்யவும். தொழில் விசயமாக அடிக்கடி வீடு மாற அல்லது ஊர் மாற வேண்டிய அவசியம் வந்து சேரும். எடுக்கும் முயற்சிகளில் சற்று கவனம் தேவை.
மனை, வீடு, வண்டி வாகனங்கள் வாங்குவதில் இருந்து வந்த இழுபறி நீங்கி அவைகளை வாங்க வேண்டிய சந்தர்ப்பம் அமையும். தடைகள் நீங்கும் திருமணத்தில் இருந்த தடைகள் நீங்கி திருமணம் இனிதே நடந்தேறும். சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி கலந்து கொள்ள வாய்ப்பு அமையும். கணவன் மனைவி உறவு சீராக இருந்து வரும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். தாயாரின் உடல் நலத்தில் அதிக அக்கறை செலுத்துதல் வேண்டும்.
புதிய நட்புகளால் எதிர்பார்த்த நன்மைகளும் அமையும். மாணவர்களுக்கு வெற்றி மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் நீங்கி நல்ல கல்வி பயில வாய்ப்பு அமையும். புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்வதில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். வேலையில் இருந்து வந்த தடைகள் கடினமான போராட்டங்களுக்குப் பின் விலகும். போட்டித் தேர்வுகளில் நல்ல வெற்றி வாய்ப்பும் நல்ல வேலை உத்தியோகமும் அமைய வாய்ப்பு ஏற்படும்.
தாய்மாமனால் நன்மை நான்காம் வீட்டின் மீது சனி பார்வை விழுவதால் நல்ல வசதியான வீடு ஒரு சிலருக்கு அமையும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வழக்குகள் சாதகமாக அமையும். தாய் மாமன்களால் எதிர்பாராத நன்மையேற்படும். உறவினர்களுக்கு கர்மகாரியம் செய்ய வேண்டியிருக்கும் வேலை பார்க்கும் இடத்தில் சுமை கூடினாலும் அதை எளிதில் கையாளுவீர்கள். தந்தையால் விரைய செலவு ஏற்படும். பாதிப்புகள் குறைந்து பலன்கள் அதிகரிக்க காக்கைக்கு எள் சாதம் வைக்கவும். வாலாஜாபேட்டையில் எழுந்தருளும் தங்கத்தினால் ஆன சொர்ண சனீஸ்வரரை வணங்க பாதிப்புகள் நீங்கி நன்மைகள் நடைபெறும்.
ரிஷபராசி,
ரிஷபத்திற்கு பாக்ய சனி- நல்லகாலம் பிறந்தாச்சு
ரிஷப ராசிக்காரர்களே உங்களுக்கு நல்ல காலம் பிறக்கப்போகிறது. சனி பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பது, பத்தாம் அதிபதி. தர்ம கர்மாதிபதி சனி பகவான், இந்த முறை மகரம் ராசியில் உங்களின் தர்ம ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். கடந்த 5 ஆண்டுகாலமாக அதாவது கண்டச்சனி, அஷ்டமத்து சனியால் அவதிப்பட்ட நீங்கள், நிம்மதி பெறுமூச்சு விடும் நேரம் வந்து விட்டது.
சனிபகவான் மகரத்தில் அமரும் 30 மாத காலம் உங்களின் மகிழ்ச்சி அதிகரிக்கப் போகிறது. உங்களின் பிரச்சினைகள் தீரப்போகின்றன. உடல் நலப்பிரச்சினைகளுக்கு முடிவு ஏற்படப்போகிறது.
அஷ்டமத்து சனி ஆட்டி வைத்த சனிபகவான்
எட்டில் அமர்ந்த சனியால் கடந்த 2017ஆம் ஆண்டு முதலே அவதிக்கு ஆளாகி வந்தீர்கள். உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் பிரச்சினைக்கு மேல் பிரச்சினை இருந்தது. எப்படா நமக்கு விடிவுகாலம் பிறக்கும் என்று ஏங்கியிருப்பீர்கள். அதற்கான பொன்னான நேரம் தை மாதம் முதல் வரப்போகிறது. அஷ்டமத்து சனியின் பிடியில் இருந்து விடுபடப்போகிறது.
பணம் சொத்து சேர்க்கை வருமானம் எப்படி
இந்த சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு பணவருவாய் அதிகமாக இருந்தாலும் உங்களின் நிதியை நிர்வாகம் செய்வதில் கரெக்டாக இருங்கள். வரவுக்கு ஏற்ப செலவும் வரிசைகட்டி நிற்கும். புதிய முதலீடுகளை 2020 முடிய தவிர்த்து விடுங்கள். பங்கு சந்தையில் தேவையில்லாமல் முதலீடு செய்யக் கூடாது. தேவையில்லாமல் பிறருக்கு கடன் கொடுத்தல் கூடாது. காரணம் குருபகவான் உங்க அஷ்டம ஸ்தானத்திற்கு வந்து கேது உடன் அமர்கிறார். 2021ஆம் ஆண்டில் இருந்து உங்களுக்கு வருமானம் கூரையை பிய்த்துக்கொண்டு கொண்டும். குருவும் சனியோடு இணைந்து 9ஆம் வீட்டில் சஞ்சரிப்பார்.
வேலையில் புரமோசன் சம்பள உயர்வுடன் புது வேலை
இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் உங்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். மொத்தம் 30 மாதங்கள் சனி பகவான் மகரம் ராசியில் சஞ்சரிக்கும் காலத்தில் வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வுடன் கூடிய புரமோசன் கிடைக்கும். தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கும். தர்ம சனியால் நிறைய வருமானம் கிடைக்கும் ஆலயங்களுக்கு சென்று இறைவனை தரிசனம் செய்வதோடு நிறைய தர்மகாரியங்களுக்கும் செலவு செய்வீர்கள்.
துன்பங்கள் துயரங்கள் நீங்கும் பிரச்சினைகள் சரியாகும்
உங்கள் ராசிக்கு அஷ்டமத்தில் சஞ்சாரம் செய்து வந்த சனிபகவானால் சொல்லெனாத் துயரங்களையும் துன்பங்களையும் அளித்ததோடு வீண் வழக்குகள் பிரச்சனைகள், போராட்டங்கள், மனகுழப்பங்கள், அசிங்கம், அவமானங்கள் ஏற்பட வைத்து உங்களை ஒரு வழி பண்ணிவிட்டார். வேலையில் பிரச்சனை, விபத்து, ஆபரேசன் இப்படி பலதரப்பட்ட பிரச்சனைகளால் அல்லல்பட்டு வேதனைப் படவைத்தார். தற்சமயம் சனிபகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் மகரம் ராசிக்கு இடம் பெயர்ந்து ஆட்சி பெற்று அமர்ந்து அதிக நன்மைகளை தருவார்.
உற்சாகம் பிறக்கும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள்
இந்த சனிப்பெயர்ச்சியால் இது வரை உங்களுக்கு ஏற்பட்ட தடை நீங்கி எதிலும் சுயமாகவும், விரைவாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்புடனும் ஊக்கத்துடனும் செயல்படுவீர்கள். எதிலும் தலைமை ஏற்று நடத்தும் வண்ணம் உங்கள் செயல்பாடு அதிகரிக்கும். உங்களது மதிப்பும், மரியாதையும் உயரும். உங்களை அறியாமலேயே ஒரு உற்சாகம் தொற்றிக்கொள்ளும். சமூகத்தில் நல்ல பெயருடன் வலம் வருவீர்கள். பேச்சில் சாமர்த்தியம் கூடும்.
நகைகள் வாங்குவீர்கள் பொன் பொருள் சேர்க்கை
பணப்புழக்கம் சற்று தாளாரமாக இருந்து வரும். உங்கள் பேச்சை மற்றவர்கள் மதித்து நடப்பர். புதிய ஆடை ஆபரணங்கள் வந்து சேரும். எதிர்பாராத தனவரவும், பொருள்வரவும் ஏற்படும். வெளியில் இருந்த பத்திரங்கள், நகைகள் கைக்கு வந்து சேரும். பெண்களுக்கு உடல் நலப்பிரச்சினைகளும், மன அழுத்தங்களும் தீரும். வேலை தேடுபவர்களுக்கும், வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கும் நல்ல வேலை வாய்ப்புகள் அமையும்.
திருமணம் கைகூடும் வெளிநாடு வாய்ப்பு வரும்
இதுநாள்வரை தடைபட்டு வந்த திருமணம் கை கூடி வரும். இதுநாள் வரை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு மழலைச் செல்வம் மடியில் தவழும் காலம் வரப்போகிறது. வீடு கட்டி கிரகப்பிரவேசம் செய்வீர்கள். வண்டி வாகனம் வாங்குவீர்கள். வீட்டிற்குத் தேவையான ஆடம்பர பொருட்களும் வாங்குவீர்கள். ஆன்மீக யாத்திரை செல்வீர்கள். சிலருக்கு வெளிநாடு வாய்ப்புகள் கைகூடி வரும்.
மாணவர்களுக்கு கல்வி உயர்கல்வி யோகம்
ஒன்பதாம் இடத்தில் சனி அமர்ந்து உங்கள் ராசிக்கு லாப ஸ்தானம், முயற்சி தைரிய ஸ்தானம், ருண ரோக சத்ரு ஸ்தானங்களை சனி பகவான் பார்வையிடுகிறார். இதனால் மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வருகிறது. வெளிநாட்டில் கல்வி பயில சந்தர்ப்பமும் அமையும். தைரியம் அதிகரிக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். புதுப்புது விசயங்களை கற்றுக்கொள்வீர்கள். எதிரிகளின் தொல்லைகள் ஒழியும். நண்பர்களால் நன்மை ஏற்படும்.
பரிகாரம் என்ன? திருநள்ளாறு சனிபகவான்
இதுநாள்வரை பட்ட துயரங்கள் தீரப்போகிறது. நன்மைகள் அதிகம் நடைபெறும் காலம் என்பதால் குடும்பத்துடன் திருநள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் நீராடி சனிபகவானையும், தர்ப்பாரண்யேஸ்வரரையும் வணங்கி வாருங்கள். பிரச்சினைகள் தீரும் இனி வரும் காலமெல்லாம் ரிஷப ராசிக்காரர்களுக்கு வசந்த காலமே.
மிதுனராசி,
சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-23: மிதுனம் ராசிக்கு அஷ்டமத்து சனி- கவனமா இருங்க மக்களே
மிதுனம் ராசிக்காரர்களுக்கு கண்டச்சனி முடிந்து அஷ்டமத்து சனி ஆரம்பிக்கிறது. வேலை, கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம் மிதுனம் ராசிக்காரர்களுக்கு எப்படி என்று பார்க்கலாம். மிதுனம் ராசிக்காரர்களே சனிபகவான் கடந்த 30 மாதங்களாக 7ஆம் இடத்தில் கண்ட சனியாக உங்களை வாட்டி வதைத்து ஒரு வழி பண்ணிவிட்டார் என்றாலும் ஒரு சில நன்மைகளும் இல்லாமல் இல்லை. இனி அவர் அஸ்டம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் போது சற்று சுமாரான பலன் களையே அளிப்பார் என்று கூற வேண்டும்.
கடந்த 30 மாதங்களாக கஷ்டப்பட்டு, அல்லல்பட்டு ஓருவழியாக மீண்டு வரலாம் என்று நினைத்திருப்பீர்கள். அடுத்த 30 வருடத்திற்கு மிகப்பெரிய மாற்றமாக அஷ்டமத்து சனி ஆரம்பிக்கிறது. வருமானம் அதிகரிக்கும் கவலை வேண்டாம் பணவரவு அதிகமாக இருக்கும் காரணம் சனி பகவான் தனது ஏழாவது பார்வையால் உங்கள் ராசிக்கு இரண்டாம் வீடான தன, குடும்ப ஸ்தானத்தை பார்க்கிறார். இதுவரை வராமல் தடையாக இருந்த பென்ஷன், பி.எப், கிராஜூவிட்டி போன்ற விஷயங்கள் தடையின்றி வந்து சேரும்.
சக ஊழியர்களின் அன்பும் ஆதரவும் கிட்டும். கூட்டுத்தொழிலில் வெற்றி உங்களது ராசிக்கு 8ம் இடத்தில் அமரும் சனிபகவான் ராசிக்கு 10ஆம் இடத்தை சனிபகவான் பார்க்கிறார். தொழிலில் எதிர்பார்த்த லாபம் ஓரளவு வந்து சேரும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகள் நன்மை அடைவர். பங்கு சந்தையில் அதிக கவனம் தேவை. சுய தொழிலில் ஓரளவு லாபம் ஏற்படும். கூட்டுத்தொழிலில் கூட்டாளிகளுக்குள் தேவையற்ற மன வருத்தங்கள் ஏற்பட்டு விலகும். பாஸ்போர்ட் விசா போன்ற விஷயங்களில் தடையேற்பட்டாலும் அதனால் நன்மையேயாகும். வேலையை விட வேண்டாம் அரசாங்க வேலையில் இருப்பவர்கள் வேலையில் கவனம் தேவை. அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. எதிலும் நிதானமாக கையாளுதல் வேண்டும். உயரதிகாரிகளால் தண்டிக்கப்பட வாய்ப்புண்டு.
எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டால் முதலில் கிடைத்த வேலையில் அமர்ந்து பின் பிடித்த வேலையை தேடுதல் வேண்டும். வேலையில் திருப்தியற்ற சூழ்நிலைக்காக அவசரப்பட்டு வேலையை விட்டுவிடுதல் கூடாது. பொறுமை அவசியம் உங்கள் ராசிக்கு எட்டு, ஒன்பதாம் அதிபதியான சனி பகவான் அவரது வீடான மகரம் ராசியில் ஆட்சி பெற்று அமரப்போகிறார். சனிபகவான் மிதுனம் ராசிக்காரர்களுக்கு கெடுதல் செய்ய மாட்டார் நன்மையே செய்வார்.
எட்டாம் வீட்டில் சனிபகவான் சஞ்சாரம் செய்வது சற்று மனவருத்தங்களையும் போராட்டங்களையும் எடுத்த காரியத்தில் தடையும் உண்டு பண்ணுவார். தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. எல்லாவற்றிலும் பொறுமையாக இருந்தால் நன்மையே நடக்கும். எதிலும் தலைமையேற்று நடத்துவதை சற்று தள்ளிப்போட்டு விட்டு, மற்றவர்களின் ஆலோசனைகளைக் கேட்டு நடங்க. உணர்வு பூர்வமாக முடிவெடுக்க வேண்டாம். எதிர்பாராத வருமானம் பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை. பத்திரங்கள், நகைகள் இவைகளை பத்திரமாகக் கையாளுதல் வேண்டும். பழைய கடன்களை அடைக்க புதிய கடன்கள் வாங்க வேண்டி வரும். வட்டி பெரிய அளவில் கட்ட வேண்டி வரும். அதே சமயம் இதுவரை கொடுத்து வைத்திருந்த வராத பணங்கள் பொருள்கள் தவணை முறையில் எதிர்பாராத விதமாக வந்து சேரும்.
கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வண்டி வாகனங்களில் கவனம் யாரை நம்புவது யாரை நம்பாமல் இருப்பது போன்ற சூழ்நிலை உருவாகும். நம்பி வேலையில் இறங்கினால் துரோகம் செய்வார்கள். எந்த காரியத்திற்கும் மற்றவரை நம்பாமல் முன் கூட்டியே திட்டமிட்டு சிந்தித்து செயல்பட்டால் தோல்வியை தவிர்க்கலாம். எட்டில் செவ்வாயோ சனியோ இருந்தால் சிறு சிறு விபத்துகள் ஏற்படுவது சகஜம்தான். போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை.
அதிக வேகம் ஆபத்துதான் நிதானமாக போங்க. குழந்தை செல்வம் சனிபகவானின் பார்வை உங்க ராசிக்கு பூர்வ புண்ணிய ஸ்தானத்தின் மீது விழுகிறது. இதுநாள் வரை குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு தடைகள் ஏற்பட்டு பின் சுபகாரியம் நடக்கும். சிலருக்கு குழந்தைகளால் தேவையில்லாத பிரச்சனைகளும் அவர்களால் தேவையற்ற குழப்பங்களும் வரும். டீன் ஏஜ் பிள்ளைகள் தடம்மாற வாய்ப்பு உள்ளது.
குழந்தைகளை எச்சரிக்கையாக கண்காணியுங்கள். பெண்கள் கவனம் பெண்களே அஷ்டமத்து சனி காலத்தில் எதையும் பொறுமையாக கையாளுங்கள். அடுப்பங்கரையில் கவனமாக இருங்கள். நெருப்பு காயங்கள் ஏற்படும். அம்மாவின் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள். லேசான உடல் நலப்பிரச்சினைகளையும் கண்காணித்து மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம்.
ஆலய தரிசனம் மன அமைதி தரும் அடிக்கடி ஆலயதரிசனம், சாமி தரிசனம், பெரியவர்களை மதித்துப்போற்றி வணங்கி வர அஷ்டம சனியின் தாக்குதலிருந்து எளிதில் மீண்டு வந்து வெற்றி பெற சந்தர்ப்பம் அமையும். தந்தையாரின் உடல்நலத்தில் அதிக கவனம் தேவை. வெளியூர், வெளிநாடு செல்ல நிறைய தடைகள் ஏற்பட கூடுமாகையில் முடிந்தவரை குலதெய்வ வழிபாடு மேற்கொள்ளவும். குலத் தெய்வம் தெரியாதவர்கள் இஷ்ட தெய்வத்தை வணங்கி வர எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும்.
கடகம் ராசி.
சனிப்பெயர்ச்சி 2020-23: கடகம் ராசிக்கு கண்டச்சனி கவலை வேண்டாம்
கடகம் ராசிக்காரர்களுக்கு ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு சனி பகவான் நகர்கிறார். கண்டச்சனி காலத்தில் கடகம் ராசிக்காரர்களுக்கு வேலை, கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம் கடகம் ராசிக்காரர்களுக்கு எப்படி என்று பார்க்கலாம். சனியானவர் உங்களது ராசிக்கு 7 மற்றும் 8ம் வீட்டிற்கு அதிபதி அவர் 7ம் இடத்தில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்வது சற்று சுமார் ஆனாலும் கடகம் ராசிக்காரர்களுக்கு பாதிப்பு அதிகம் இருக்காது.
சனி பகவான் ஆறாம் இடத்தில் இருந்தாலும் அலைச்சல், வேதனை, நோய்வாய்ப்படுதல் கடன் இவையெல்லாம் கொஞ்சமாக இருந்தது. இனி சஞ்சரிக்கவிருக்கும் 7ம் இடம் என்பது கண்டச்சனி என்றாலும் ராசிக்கு கேந்திரமாக இருப்பதால் சனியினுடைய கடுமை வரும் காலங்களில் சற்று குறைந்து காணப்படும். சனிபகவான் உங்கள் ராசிக்கு களத்திர ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு உங்கள் ராசிக்கு 4ஆம் இடம், 9ஆம் இடம், மற்றும் உங்கள் ராசியை பார்வையிடுகிறார்.
ஒற்றுமை அதிகரிக்கும் வெளியூர் மற்றும் வெளிநாடு செல்வதில் இருந்த தடைகள் விலகி வெளிநாட்டிற்கு செல்லக் கூடிய யோகம் கூடிவரும். புதிய விஷயங்களைக் கற்பதில் ஆர்வமும் உற்சாகமும் மிகுந்து காணப்படும். எப்பொழுதும் சுறுசுறுப்பும் சிந்தனை சக்தியும் மிகுந்து காணப்படும். குடும்பத்தில் இதுவரை இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி குடும்பம் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழ வழி ஏற்படும். நன்மைகள் அதிகம் சனிபகவான் தனது ஏழாவது பார்வையால் உங்கள் ராசியைப் பார்ப்பதால் தெய்வ அனுகூலம் அதிகரிக்கும். செயல்களில் சில தடைகள் ஏற்பட்டாலும் தெய்வ அனுகூலம் காரணமாக அனைத்து செயல்களையும் வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
எப்பொழுது எல்லாம் உங்களுக்கு பிரச்சனைகள் ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதை தீர்க்க இறைவன் ஒருவரை உங்களுக்கு அனுப்பி வைப்பார். அம்மாவின் ஆசி உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் உள்ளவர்கள் கவனமாக இருக்கவும். தண்ணீர் அதிகம் குடிக்கவும். இந்த இடப்பெயர்ச்சியால் உங்கள் பெற்றோர்களுக்கும் பாதிப்பு வரலாம். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை தேவை.தாயரால் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்படும். தாயாரின் அன்பும் ஆசியும் கிட்டும்.
வருமானம் கூடும் சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். நீங்கள் யார் என்று உலகிற்கும் மற்றவர்களுக்கும் தெரியவரும். பேச்சில் சாமர்த்தியம் கூடும். பணப் புழக்கம் அதிகரிக்கும், கடன் கொடுத்த பணம் திரும்ப கைக்கு வந்து சேரும். பழைய இடங்களை விற்று புதிய இடம் வீடு, வண்டி, வாகனங்கள், விட்டு உபயோக பொருட்கள் வாங்க ஒரு சிலருக்கு வாய்ப்பு அமையும். உயர்கல்வி பயில வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். தன்னம்பிக்கை அதிகரிக்கும் இதுவரை குடும்பத்தில் நடைபெறாமல் தள்ளிப் போன சுபகாரியங்கள் இனிதே நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்யம் அமையும்.
காதல் விஷயங்களில் மன ஈடுபாடு அதிகரிக்கும் ஒரு சிலருக்கு காதல் கனிந்து திருமணத்தில் முடியும் அடிக்கடி விருந்து கேளிக்கைளில் கலந்து கொள்ள வாய்ப்புகள் வந்து சேரும். குடும்பத்தில் புதிய வரவுகள் வந்து சேரும். அதனால் மகிழ்ச்சியும் சந்தோஷமும் நிலவும். சகோதர, சகோதரிகளின் அன்பும், ஆதரவும் இருந்து வரும். தன்னம்பிக்கையும் ஊக்கமும் அதிகரிக்கும்.
இடமாற்றம் ஏற்படும் தேவையில்லாத விஷயங்களில் தலையிடக் கூடாது. வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு அமையும். ஆனால் வேலையில் திருப்தியற்ற நிலைமையே அமையும். எனவே கிடக்கும் வேலையை மகிழ்வுடன் ஏற்றுக் கொள்ளுதல் வேண்டும். அவசரப்பட்டு பார்க்கும் வேலையை விட்டுவிடக் கூடாது.
வேலையாட்களால் நன்மை. உண்டாகும். ஒரு சிலருக்கு வேலையில் இடமாற்றம், ஊர் மாற்றம் அமையும். வேலையில் உத்தியோக உயர்வு ஊதிய உயர்வு கிட்டும். சக தொழிலாளர்களால் தேவையற்ற மன வருத்தங்கள் உண்டாகும். உயரதிகாரிகளின் ஒத்துழைப்பு சுமாராக இருந்து வரும். பணம் விசயத்தில் கவனம் யாருக்கும் தேவையில்லாமல் பணம், கடன் கொடுப்பதோ, ஜாமீன் கையெழுத்து போடுவதோ கூடாது. தேவையில்லாமல் கடன் வாங்குதல் கூடாது. கடன்களை கட்டுக்குள் வைத்து கொள்ளுங்கள்.
மனம் அமைதியற்ற நிலை ஏற்படும் காலத்தில் யோகா, தியானம் செய்ய மனது அமைதிப்படும்.சரியான நேரத்திற்கு சாப்பிடுங்க. காரணமான, எண்ணெய் அதிகமுள்ள உணவுகளை தவிர்ப்பது உங்கள் உடல் நலத்திற்கு நல்லது. மங்களசனீஸ்வரரை வணங்குங்கள் வழக்குகளில் வெற்றி கிட்ட வாய்ப்புகள் அதிகம். நண்பர்களால் எதிர்பார்த்த, பாராத உதவிகள் வந்து சேரும்.
எதிரிகள் தலையெடுத்த வண்ணம் இருப்பார்கள். எனவே எதிரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெற லட்சுமி நரசிம்மரை வணங்கலாம். கும்பகோணம் அருகில் உள்ள திருநறையூரில் உள்ள நாச்சியார் கோயிலில் மங்கள சனியாக குடும்பத்துடன் அருள்பாலிக்கிறார். சனிதிசை, கண்டச்சனியால் பாதிப்பு குறைய இங்குள்ள சனிபகவானை தரிசனம் செய்து அர்ச்சனை செய்ய நன்மைகள் நடைபெறும்.
சிம்மராசிக்காரங்களே,
சிம்மம் ராசிக்காரர்களுக்கு வேலை, கல்வி, திருமணம், குழந்தை பாக்கியம் எப்படி என்று பார்க்கலாம். சனியானவர் உங்களது ராசிக்கு 6 மற்றும் 7ம் வீட்டிற்கு அதிபதி அவர் 6ஆம் இடத்தில் ஆட்சி பெற்று சஞ்சாரம் செய்வது அற்புதமான அமைப்பு. 30 மாதங்கள் உங்களுக்கு ராஜயோகம்தான். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்ற நிலை உருவாக இனி சஞ்சரிக்கவிருக்கும் 6ஆம் இடம் என்பது ருண ரோக சத்ரு ஸ்தானம். நோய்களை அடையாளம் கண்டு தீர்ப்பீர்கள்.
கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சனிபகவான் உங்கள் ராசிக்கு ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்து கொண்டு உங்கள் ராசிக்கு முயற்சி ஸ்தானமான 3ஆம் இடம், ஆயுள் ஸ்தானமான 8ஆம் இடம், மற்றும் உங்கள் ராசிக்கு 12ஆம் இடமான விரைய ஸ்தானத்தையும் சனிபகவான் பார்வையிடுகிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தொழில், கல்வி, வேலைவாய்ப்பு, வருமானம், குடும்ப வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
நல்ல காலம் பிறக்கப்போகுது இதுவரை போராட்டமே வாழ்க்கை என்று வாழ்ந்து வந்தீர்கள். காரணம் அர்த்தாஷ்டம சனி ஆட்டி வைத்தது. ஐந்தாம் இட சனி அச்சத்தை அதிகரித்தது. இனி வெற்றிக்கனியை ருசிக்கப் போகிறீர்கள். சோதனைகளை தாங்கிக் கொண்டு வைரம் பாய்ந்த மனதுடையவராக மாறியிருக்கிறீர்கள். இனி தொட்டதெல்லாம் ஜெயமே. தடைபட்ட காரியங்கள் எளிதில் கைகூடும்.
நண்பர்களால் எதிர்பார்த்த அளவு அன்பும் ஆதரவும் கிடைக்கும். வெளிநாடு செல்ல சந்தர்ப்பமும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு அமையும். விசா, பாஸ்போர்ட் எளிதாக வந்து சேரும். மன மகிழ்ச்சி அதிகரிக்கும் இதுநாள்வரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வுடன் கூடிய புதிய வேலை அமையும். வேலைக்கு ஏற்ற சம்பளமும் கிடைக்கும்.
சிலருக்கு புதிய வேலை நல்ல சம்பளத்துடன் கிடைக்கும். வேலை விசயமாக வெளிநாடு செல்ல வாய்ப்பு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதிலும் முதலீடு செய்வதிலும் கவனமாக இருக்கவும். பங்குச்சந்தை முதலீடுகளும் இப்போதைக்கு தேவையில்லை. சிறு தொழில் உற்பத்தி சார்ந்த துறைகள் சற்று சுமாராக இருக்கும். ஆடை, ஆபரணம், ஜவுளி துறைகள் லாபகரமாகவும், நகை தொழில் சுமாராக இருந்து வரும். சுற்றுலா, பத்திரிக்கை, தொலைகாட்சி, சினிமா துறைகளில் வேலை செய்பவர்களுக்கு லாபம் அதிகம் இருக்கும். வருமானம் அதிகரிக்கும் இதுநாள்வரை வராமல் இருந்த பணமெல்லாம் தேடி வரும்.
சமுதாயத்தில் கவுரவம், புகழ் அந்தஸ்து அதிகரிக்கும். சொத்து சேர்க்கை அதிகரிக்கும். பெண்களுக்கு நகை, ஆடை ஆபரணச் சேர்க்கை அதிகரிக்கும். புதிய தொழில்கள் தொடங்க சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அமையும். கூட்டுதொழில் சாதகமாக இருந்து வரும். முன்னோர்கள் சொத்து மூலம் எதிர்பாராத தனவரவு பொருள் வரவு அமையும். ஆராக்கியத்தில் அக்கறை உடன்பிறந்த சகோதரிகளால் எதிர்பாராத நன்மை ஏற்படும்.
குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் ஏற்பட வாய்ப்பு அமையும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் தானாக வந்து சேரும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். அவர்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். தாயாரால் எதிர்பாராத உதவிகள் கிட்டும். அதே சமயம் தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. வம்பு வழக்குகள் முடிவுக்கு வரும்
தாய் மாமன்களின் அன்பும் ஆதரவும் நிறைந்து காணப்படும். வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். வழக்குகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். இதுநாள் வரை இழுத்தடித்த வழக்குகளில் ஜெயிப்பீர்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். கடன்கள் அதிகரிக்கும், எதிரிகள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புது புதுப் பிரச்சனைகள் வந்தாலும் எளிதில் தீர்வு காண்பீர்கள். குழந்தை பாக்கியம் கைகூடி வரும் காதல் கணிந்து திருமணத்தில் முடியும்.
குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்வுகள் நடக்க வாய்ப்புகள் தானாக வந்து சேரும். உங்களது உழைப்ப்பு மற்றவர்களுக்கு லாபகரமாக அமையும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும். குழந்தைகளின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். அவர்களால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு புத்ர பாக்யம் ஏற்பட வாய்ப்பு அமையும். உணவு விசயத்தில் கவனம் உணவு விசயத்தில் கவனமாக இருக்கவும். சரிவிகித சத்தான உணவுகளை சாப்பிடுங்கள்.
உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவை. உடலில் தேமல், அரிப்பு, கட்டி போன்ற நோய்கள் ஏற்படும். ஒரு சிலருக்கு அறுவை சிகிச்சை செய்யும் சூழ்நிலை அமையும். எட்டாம் வீட்டை சனி பார்வையிடுவதால் போக்குவரத்து வண்டி வாகனங்களில் அதிகக் கவனம் தேவை. எப்பொழுதும் எச்சரிக்கையுடன் சென்று வருதல் வேண்டும். வேகத்தை குறைத்து நிதானத்தை கடைபிடியுங்கள். உயர்படிப்பில் உற்சாகம் மாணவர்களுக்கு எதிர்பார்த்த கல்லூரிகளில் வேலை கிடைக்கும். நல்ல மதிப்பெண்களுடன் உயர்கல்விக்கு செல்வீர்கள். விளையாட்டு, கலைத்துறை என ஆர்வத்தோடு செயல்பட்டு பரிசுகளை வெல்வீர்கள்.
சிலருக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். கல்விக்கடன்கள் எளிதாக கிடைத்து வெளிநாட்டிற்கு படிக்கச் செல்வீர்கள். சாமர்த்தியமும் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் கலந்து கொள்ள தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றி கிட்டும். சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும் பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
சிலர் வெளிநாடு, வெளியூர் செல்ல வாய்ப்பு ஏற்படும். சமுதாயத்திலும் வீட்டிலும் வேலை செய்யும் இடத்திலும் மதிப்பும், மரியாதையும் கூடும். விருந்து, சுற்றுலா என உற்சாகமாக இருப்பீப்கள். பெண்களுக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். வீட்டையும், அலுவலகத்தையும் கவனிப்பதைப் போல உங்கள் உடம்பையும் கவனியுங்கள். நோய்களை சனிபகவான் காட்டிக்கொடுப்பார்.
சிலருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கும் எனவே லேசான உடல்நலப்பிரச்சினை ஏற்பட்டாலும் மருத்துவரிடம் சென்று உடலை கவனியுங்கள். பணத்தை சேமித்து பழகுங்கள் சனிபகவான் 7வது பார்வை விரைய தானத்தைப் பார்ப்பதால் தேவையற்ற பண விரையம், பொருள் நஷ்டம் ஏற்படும். சிலருக்கு வெளிநாடு யோகம் கைகூடி வரும். 3வது பார்வையாக 8ஆம் வீட்டை பார்ப்பதால் எச்சரிக்கை தேவை. எதிர்பாராத பணம் வந்தாலும் அதனை கவனத்தோடு செலவு செய்யவும். சிலருக்கு எதிர்பாராத பிரச்சினைகளும், அவமானங்களும் ஏற்படும். கணவன் மனைவியின் உறவில் சில உரசல்கள் வரும். பாதிப்புகள் குறைய குச்சனூர் சென்று சனிக்கிழமைகளில் சனிபகவானை வணங்கவும். பாதிப்புகள் குறைந்து நன்மைகள் நடைபெறும்.
கன்னி ராசிக்காரர்களுக்கு.
கன்னி ராசிக்காரர்களுக்கு நான்காம் இடத்தில் இருந்து ஐந்தாம் வீட்டிற்கு சனிபகவான் நகர்கிறார். அர்த்தாஷ்டம சனி முடிந்து புண்ணிய சனி ஆரம்பிக்கிறது.
சனி பகவான் உங்கள் ராசிக்கு 5 மற்றும் 6ஆம் அதிபதி. அவர் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பெற்று அமர்கிறார். இனி அலைச்சல்கள் இருக்காது. இதுநாள் வரை இருந்த மருத்துவ செலவுகள் முடிவுக்கு வரும். பிள்ளைகள் மீதான கவலைகள் அதிகரிக்கும்.
சனிபகவானின் பார்வை மகரம் ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானம், களத்திர ஸ்தானம், லாப ஸ்தானத்தின் மீது விழுகிறது. பணவரவு அதிகரிக்கும், குடும்பத்தில் உற்சாகம் அதிகரிக்கும், குதூகலம் கூடும். செய்யும் தொழிலில் லாபம் கூடும். கனவு நனவாகும் காலம் கனிந்து வருகிறது.
சுபகாரியங்கள் நடக்கும் தடைகள் நீங்கும்
கன்னி ராசிக்காரர்களே... இந்த சனிப்பெயர்ச்சியால் உங்களுக்கு அதிக நன்மைகள் நடக்கப்போகிறது. தடைபட்டு வந்த சுபகாரியங்கள் இனிதே நடக்கும், திருமணம் கைகூடி வரும், காதல் மணியடிக்கும். காதலர்களுக்கு கல்யாணம் கை கூடி வரும். வீட்டில் எப்போது உற்சாகமாக இருப்பீர்கள். உங்களின் அறிவும் ஆற்றலும் அதிகரிக்கும்.
நோய்கள் நீங்கும்
அர்த்தாஷ்டம சனியால் நோய்களால் பாதிக்கப்பட்டு இருப்பீர்கள். இன்னும் சில மாதங்கள்தான் நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும். வெற்றி மீது வெற்றி வந்து உங்களைச் சேரும். அம்மாவின் உடல் ஆரோக்கியமும் அதிகரிக்கும்.
குழந்தைகளின் ஆரோக்கியம்
குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துங்கள். சிலருக்கு குழந்தைகளால் பிரச்சினை ஏற்படும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு நீண்ட போராட்டத்திற்கு பிறகே குழந்தை பாக்கியம் அமையும். நம்பிக்கையுடன் முயற்சிக்க எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். எதையும் தீர ஆராய்ந்து முழு மூச்சுடன் செயல்பட வெற்றி கிட்டும். எந்த ஒரு விஷயத்தையும் தள்ளிபோடவோ ஒத்தி போடவோ கூடாது. காரியத்திலே கண்ணாய் இருத்தல் வேண்டும். அப்பொழுதுதான் போட்டியான உலகத்தில் ஜெயிக்க முடியும்.
சொத்து சேர்க்கை ஏற்படும்
வண்டி வாகனங்கள் வீடு, நிலம், வாங்க வாய்ப்புகள் அமையும். தந்தை மற்றும் தாய் வழி சொத்துக்கள் எதிர்பாராமல் வர வாய்ப்புள்ளது. அதிர்ஷ்டத்தை நம்பாமல் உழைப்பை மட்டும் தாராக மந்திரமாக எண்ணி செயல்களில் வெற்றி பெற முடியும். பெரிய மனிதர்கள் சகவாசம். அதிகாரிகளின் சலுகை இவையெல்லாம் கிட்டும். உங்கள் பணம் பொருள் கண் முன்னே களவு போனது போல் காணாமல் போகும் அல்லது பறிபோகவோ திருடு போகவோ வாய்ப்பிருக்கிறது எனவே பத்திரப்படுத்துங்கள்.
வேலையில் கவனம்
வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைப்பது சற்று காலதாமதமாகும். விரும்பிய வேலை கிடைப்பதில் நிறையத் தடைகள் ஏற்படும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற கடுமையாக போராட வேண்டி இருக்கும். அதிக உழைப்பு குறைந்த வருவாய் என்ற சூழ்நிலையிலே உங்களை இயங்க வைப்பார். உயரதிகாரிகள் விஷயத்தில் அதிக எச்சரிக்கை தேவை. வேலையாட்களால் தேவையற்ற பிரச்சனைகளும் மன வருத்தங்களும் ஏற்படும். சக ஊழியர்களின் எதிர்பாராத உதவியும் அவர்களின் ஒத்துழைப்பும் நமக்கு சாதகமாக இருந்து வரும். ஊதிய உயர்வும் எதிர்பார்த்த அளவு இருக்காது. எனவே கிடைத்த வேலையில் முதலில் சேர்ந்த பின் உங்களை ஸ்த்திரபடுத்திக் கொள்ளுங்கள்
முதலீடுகளில் எச்சரிக்கை
பங்கு சந்தையில் தேவையற்ற முதலீடு கூடாது. விட்டதை பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தைத் தவிர்த்தல் நலம். ரேஸ், லாட்டரி, கிளப், சூதாட்டம் இவைகளில் அதிகக் கவனம் தேவை. இவற்றிலிருந்து சற்று விலகியே இருப்பது நல்லது ஆகும். சுய தொழில்களில் முதலீடு செய்வதில் அதிகக் கவனம் தேவை. உங்கள் பணம், உழைப்பினால் அடுத்தவர்கள்தான் ஆதாயம் அடைவார். எனவே முதலீட்டில் அதிகக் கவனம் தேவை. பணம் பொருள் மாட்டிக் கொள்ளும் என்பதால் கவனம் தேவை.
பெண்களுக்கு உற்சாகம்
பெண்களுக்கு தடைகள் நீங்கி திருமணம் நடைபெறும், குழந்தைபேறு கிடைக்கும். அடிக்கடி சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்பீர்கள். பெண்களுக்கு நகைகள் சேரும், ஆடை ஆபரணக்சேர்க்கை கிடைக்கும். வீட்டில் கணவன் மனைவி உறவு உற்சாகமாக இருக்கும். குடும்பத்தில் குதூகலமாக இருப்பீர்கள்.
உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் தேவை. சுறுசுறுப்பாக இருந்தாலும் அடிக்கடி உடல் அசதி, சோர்வு அலைச்சல்களால் ஏற்படும்.
சனிபகவான் பார்வை பலன்
சனிபகவான் இரண்டாம் வீடு, ஏழாம் வீடு, 11ஆம் வீட்டை பார்ப்பதால் உங்களுக்கு எதிர்பாராத இடத்தில் இருந்து பணவரவு கிடைக்கும். சுபகாரியங்கள் வீட்டில் அதிகம் நடைபெறும். மூத்த சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். உங்களின் பயணங்களினால் நன்மைகள் நடைபெறும். மனதில் உற்சாகம் அதிகரிக்கும். அடிக்கடி விரதம் என்ற பெயரில் பட்டினி கிடக்க வேண்டாம் வயிறு வலி பிரச்சினைகள் ஏற்படும். மொத்தத்தில் இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று ஆலய தரிசனம் செய்யும் காலமாக அமையும். திருநள்ளாறு சென்று நளதீர்த்தத்தில் நீராடி சனிபகவானை தரிசனம் செய்து வர அதிக நன்மைகள் கிடைக்கும்.
துலாம் ராசிக்காரர்களுக்கு
சனிபகவான் இதுவரை துலாம் ராசிக்கு 3ஆம் இடத்தில் சஞ்சரித்தவர் இனி 4ஆம் இடத்தில் மகரம் ராசியில் 30 மாதங்கள் சஞ்சாரம் செய்வார். இது அர்த்தாஷ்டமச் சனி எனப்படும். இதை நினைத்து பயப்படவோ அல்லது கவலைப்படவோ வேண்டாம். அவரவர் பிறப்பு ஜாதகத்தை பொறுத்து இதன் தன்மை மறுபடும். எனவே அர்த்தாஷ்டமச் சனி நடக்கப் போகிறதே என்று ஒரு போதும் கவலையோ அச்சமோ படத்தேவையில்லை.
வேலை, கல்வி, திருமணம், வருமானம் ஆகியவை எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். உங்கள் ராசிக்கு நான்கு, ஐந்தாம் வீட்டிற்கு அதிபதியான சனிபகவான் 4ஆம் வீட்டில் சஞ்சரிக்கும் காலத்தில் இதுவரை வேலை இல்லாமல் இருந்தவர்களுக்கு வேலைக்கான வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் தாமதம் இருந்தாலும் முதலில் கிடைத்த வேலையை ஏற்று கொண்டு திருப்தியற்ற வேலையாக இருந்தாலும் திருப்தியாக செயலாற்ற வேண்டும்.
நான்காம் வீடு என்பது சுக ஸ்தானம், இந்த இடத்தில் அமரும் சனிபகவான் உங்கள் ராசியை பத்தாம் பார்வையாக பார்க்கிறார். மூன்றாம் பார்வையாக உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தை பார்க்கிறார், ஏழாம் பார்வையால் உங்களின் தொழில் ஸ்தானத்தை பார்வையிடுகிறார். வேலையை காதலியுங்கள் 4ஆம் வீட்டில் சனி சஞ்சாரம் என்பது தொழிலில் தகராறு மற்றும் தொழிலில் நிச்சயமற்ற தன்மையை உருவாக்குவார்.
அதே சமயம் வேலையில் அதிக கவனம் செலுத்துதல் வேண்டும். உழைப்புக்கு அஞ்சாமல் வேலையில் சளைப்பில்லாமல் விரும்பி செய்யுங்க. உங்க வேலையை காதலித்தால்தான் அந்த வேலையில் நீங்கள் நீண்ட நாட்கள் நிலைத்து இருக்க முடியும். இல்லையெனில் வேலையில் அலுப்பும் சலிப்பும் ஏற்பட்டு வேலையை விட வேண்டியிருக்கும். வெளிநாட்டு வாய்ப்பு வேலைக்கு அடிக்கடி லீவு போடாதீங்க.
அவசரபட்டு வேலயை விடுவதோ அல்லது வேறு வேலைக்கு மாறும் பொழுது வேலை உத்தரவாதம் இருந்தால் மட்டுமே மாற வேண்டும். வேலை காரணமாக சிலருக்கு இடமாற்றம் கிடைக்கும், வெளியூர், வெளிநாடு செல்லவேண்டியிருக்கும். பதவி உயர்வு நீண்ட இழுபறிக்குப் பின்னர் கிடைக்கும். வேலையின் காரணமாக உயர்வு ஏற்பட்டாலும் அதிக உழைப்பு குறைந்த வருவாய் என்ற சூழ்நிலையை சனி பகவான் உருவாக்குவார்.
வீடு வண்டி வாகனம் நான்காம் இடம் தாய் ஸ்தானம் இந்த இடத்தில் சனி அமர்வதால் அம்மாவின் உடல்நிலை சற்று பாதிக்கப்படும். எனவே அம்மாவை அவ்வப்போது மருத்துவரிடம் காட்டி உடல்நலத்தை கவனிக்கவும். சமூகத்தில் இதுவரை இருந்த வந்த நிலை மாறி சற்று மதிப்பும் மரியாதையும் கூடும். இதுவரை இருந்து வந்த தேவையற்ற அலைச்சல்கள் குறைந்து ஒரு இடத்தில் நிலையாக இருக்க வாய்ப்பு அமையும்.
இடம் வாங்குவதற்கு வீடு வாங்குவதற்கு வண்டி வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புகள் தானாக வந்து சேரும். கடன்கள் அதிகரிக்கும் ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தை சனி பார்வையிடுவதால் இனம் தெரியாத நோய்கள் வந்து போகும் ஏதோ நோய் இருக்குமோ என்று நினைத்து அவதிப்பட நேரிடும். நேரத்திற்கு சாப்பிடுங்கள். சரியான, சத்தான உணவுகளை சாப்பிடுவதுதான் ஆரோக்கியத்திற்கு நல்லது. நெருங்கிய உறவினர்களை விட்டுப் பிரிய நேரிடும். எதிர்பார்த்த செய்திகள் தகவல்கள் சற்று தாமதித்து சாதகமாக வந்து சேரும்.
கேட்ட இடத்தில் கடன்கள் கிடைக்கும். கடன்கள் அதிகரித்து கொண்டே போகும். பங்குச்சந்தை முதலீடுகள் முதலில் லாபம் கொடுத்தாலும் பின்னர் நஷ்டத்தில் விட்டு விடும். தலையிட வேண்டாம் எதிரிகள் அதிகமாக வாய்ப்புள்ளது. அரசியல்வாதிகள் தேவையற்ற விசயங்களில் தலையிட வேண்டாம். தகுதிகளை வளர்த்துக்கொள்ளுங்கள். முழு திறமையை வெளிப்படுத்தினால் மட்டுமே பிரகாசிக்க முடியும். ஜெயிக்கவும் முடியும். புதிய முயற்சிகளை செய்ய வேண்டாம் வெற்றி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.
சனிபகவானின் பார்வை உங்கள் ராசியின் மீது விழுவதால் உற்சாகமாக இருங்கள், வேலைகளை ஒத்திப்போடாமல் உடனே செய்து முடியுங்கள். உழைத்தால் வெற்றி மாணவர்களுக்கு இந்த காலகட்டம் சோதனையான காலகட்டமாகும். உழைத்தால் மட்டுமே அதிக மதிப்பெண் பெற முடியும். எப்போதும் உற்சாகமாக, சுறுசுறுப்போடு இருந்தால் மட்டுமே நினைத்த மதிப்பெண்களை பெற முடியும், விரும்பிய கல்லூரிகளில் இடம் கிடைக்கும். விளையாட்டுகளில் கவனம் தேவை. கல்விக்கடன் கிடைப்பதில் இழுபறி ஏற்படும்.
தேவையற்ற நண்பர்களை வெட்டி விடுங்கள். சோம்பலை விரட்டி சுறுசுறுப்பாக இருங்க படிப்பில் ஜொலிக்கலாம். பெண்களுக்கு மதிப்பு பெண்களுக்கு நல்ல வேலை கிடைக்கும், பதவி உயர்வும் தேடி வரும். ஆடை ஆபரண சேர்க்கை கிடைக்கும். கணவன் மனைவி உறவு உற்சாகமாக அமையும்.
மகிழ்ச்சி நீடிக்கும். பேச்சில் இனிமை கூடும். காதல் திருமணத்தில் முடியும், சிலருக்கு தடைபட்டு வந்த குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்களின் பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். நிறைய ஓய்வு எடுங்க. வயிறு பிரச்சினைகள் வராமல் இருக்க நேரத்திற்கு சாப்பிடுங்க.
சனிபகவானை சரணடையுங்கள் அர்த்தாஷ்டம சனியினால் ஏற்படும் பாதிப்புகள் குறைய வேலூர் வாலாஜாபேட்டை அருகே தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் பாதாள சொர்ண சனீஸ்வரரை வணங்குங்கள். காலபைரவரை செவ்வாய்கிழமைகளில் செவ்வரளி மாலை சாற்றி வணங்குங்கள். சனிக்கிழமைகளில் எள் எண்ணெய் தீபம் ஏற்றுங்கள். அம்மாவை மகிழ்ச்சியாக வைத்திருங்கள். தீமைகள் குறைந்து நன்மைகள் அதிகம் நடைபெறும்.
விருச்சிகம் ராசிக்காரங்களுக்கு
விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். விரையச்சனி, ஜென்மசனி, குடும்பசனி என உங்களை கடந்த ஏழரை ஆண்டுகாலமாக கும்மியடித்து வந்த சனி பகவான் இனி மூன்றாம் இடமான முயற்சி ஸ்தானத்தில் அமரப்போகிறார். உங்களின் கஷ்டங்களும் துயரங்களும் நீங்கி விடிவுகாலம் பிறக்கப்போகிறது.
உங்கள் ராசிக்கு மூன்று, நான்காம் அதிபதியான சனிபகவான் இனி மூன்றாம் வீட்டில் அமர்வதால் உங்களின் முயற்சிகள் வெற்றியடையும். தைரியம் அதிகரிக்கும். மனதில் உற்சாகம் பிறக்கும் ஊலாலா என்று பாடுவீர்கள். தன்னம்பிக்கை கூடும். இளைய சகோதரர்களால் நன்மைகள் நடைபெறும். சிறு பயணங்களினால் பலன் கிடைக்கும்.
சனிபகவான் மகரம் ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானம், பஞ்சம ஸ்தானம், ஒன்பதாம் இடமான பாக்ய ஸ்தானத்தை பார்வையிடுகிறார்.
சமுதாயத்தில் மதிப்பு மரியாதை அதிகரிக்கும். வெளிநாட்டு யோகம் கைகூடி வரும் சனிபகவான் மகரம் ராசியில் சஞ்சரிக்கும் 30 மாதகாலமும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, தொழில்,வருமானம் எப்படியிருக்கும் என்று பார்க்கலாம்.
ஏழரை சனி முடிஞ்சுபோச்சு
என்னா கஷ்டம்... என்னா கஷ்டம் எங்களுக்கு விடிவு காலமே இல்லையே, கஷ்டத்திற்கு விமோசனமே கிடையாதா என்று விருச்சிக ராசிக்காரர்களை புலம்ப வைத்து விட்டார் சனிபகவான். அவர் வேலை முடிந்து விட்டது கிளம்பி விட்டார். இத்தனைய ஆண்டுகாலமாக சோதனைகள் மூலம் பல பாடங்களை கற்றுக்கொண்டிருப்பீர்கள். சிலர் சாவின் விளிம்பு வரை சென்று மீண்டு வந்திருப்பீர்கள். உங்கள் கஷ்டங்கள் நீங்கி விட்டாலும் நீங்கள் படித்த பாடங்களைக்கொண்டு வாழ்க்கையை சந்தோஷமாக வாழுங்கள்.
முயற்சிகளில் வெற்றி
நல்ல செய்திகள் உங்களை தேடி வரப்போகிறது. இனி சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கொண்டாட்டங்கள் அதிகரிக்கும். உங்கள் உழைப்புக்கு லாபம் கிடைக்கும். தொழிலில் படிப்படியாக முன்னேற்றம் கிடைக்கும். உங்களின் தசாபுத்தி எப்படியிருக்கிறது என்று பார்த்து அதற்கேற்ற தொழிலை தொடங்குங்கள். அவசரப்பட வேண்டாம். புதிய சொத்துக்கள் சேரும். வண்டி வாகனம் வாங்குவீர்கள்.
புதிய வேலை கிடைக்கும்
வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் ஏற்பட்டு வேலையில் திருப்தியான நிலை மற்றும் விருப்பமான வேலை, எதிர்பார்த்த வருமானத்துடன் கூடிய வேலை வந்து சேரும். வேலையில் சிலருக்கு இடமாற்றம், ஊர் மாற்றம் உண்டு. வேலையில் இதுவரை இருந்து வந்த இறுக்கமான நிலை தளர்ந்து நற்பலன் உண்டாகும். வெளியூர், அல்லது வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும்.
பணம் பாக்கெட்டில் நிறையும்
கையில வாங்கினேன் பையில போடல காசு போன இடம் தெரியலை என்று பாடிக்கொண்டிருக்கும் விருச்சிக ராசிக்காரர்களே... உங்களுக்கு பணவரவு அதிகரிக்கப்போகிறது. எதிர்பாராத தன லாபம் கிடைக்கும். சிலருக்கு பழைய சொத்துக்களை விற்பதன் மூலம் பணம் கிடைக்கும். சிலர் புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். உடன் பிறந்தவர்களாலும், உறவினர்களாலும் நன்மைகள் ஏற்படும். பங்கு சந்தை மற்றும் ரேஸ், லாட்டரி, நல்ல லாபகரமாக அமையும். பொருட்களை அடகு வைக்கும் சூழ்நிலையும் ஒரு சிலருக்கு அமையும்.
திருமணம் சுபகாரியம்
காதல் இனிக்கும் சிலருக்கு கல்யாணத்தில் முடியும். கணவன் மனைவி உறவு சுமூகமாக சந்தோஷமாக இருக்கும். பிள்ளைபாக்கியம் இல்லையே என்று ஏங்கியவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். மனதிற்கு மகிழ்ச்சி தரும் சுப காரியங்கள் நடைபெறும். அதற்காக சம்பாதிக்கும் பணத்தை சுப விரைய செலவுகளாக செய்வீர்கள். சம்பாதிக்கும் பணத்தை கொஞ்சம் சேமித்து வையுங்கள். குழந்தைகளால் எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். அவர்கள் படிப்பு, வேலை, வெளிநாடு இவைகள் சாதகமாக இருந்து வரும்.
கடன் கொடுக்க வேண்டாம்
வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு வேலை, வேலையில் உற்சாகம் பிறக்கும். வேலையில் முன்னேற்றம் ஊதிய உயர்வும் ஏற்படும். உயர் அதிகாரிகளிடம் கவனமாக இருக்கவும். வரும் பணத்தை முறையாக சேமித்தாலே கடனின்றி வாழலாம். யாருக்கும் பணம் கடன் கொடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து கொடுக்கவும். இல்லாவிட்டால் கொடுத்த பணம் திரும்ப வராது. யாருக்கும் கடனுக்காக ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். கடன் வாங்குவதை தவிர்க்கவும்.
மாணவர்கள் கவனம்
மாணவர்களுக்கு படிப்பில் அதிகக் கவனம் தேவை. மூன்றாம் இடத்தில் சனி சஞ்சாரம் ஞாபக மறதியை ஏற்படுத்துவார். சோம்பலை அதிகபடுத்துவார். தொடர்ச்சியாக டியூசன் சென்று வருதல் நலம். தேவையற்ற விஷயங்களில் மனைதைச் செலுத்தக் கூடாது. எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கப் பழகுதல் வேண்டும். விரும்பிய பள்ளி கல்லூரிகளில் சேர நினைக்கும் உங்களுக்கு நிறைய தடைகள் ஏற்பட்டு விலகும்.
பெண்களுக்கு வெளிநாடு யோகம்
பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் அதிகக் கவனம் செலுத்துங்கள். நேரத்திற்கு சாப்பிடுங்கள். நீரிழிவு, ரத்தகொதிப்பு இருப்பவர்கள் சரியான நேரத்திற்கு சாப்பிடுங்கள். எதிரிகளால் தொல்லைகள் குறையும். எதையும் தைரியமாக சந்திக்கும் ஆற்றலும் சந்தர்ப்பமும் அமையும். சிலருக்கு புதிய வேலைவாய்ப்புகள் ஏற்படும். ஆடை ஆபரணச்சேர்க்கை ஏற்படும். வேலை விசயமாக வெளிநாடு செல்லும் யோகம் அமையும். குடும்பத்தில் புதுவரவு உண்டு. உறக்கம் கெடும் உற்சாகத்தோடு செயல்படுங்கள் சோம்பல் நீங்கி சுறுசுறுப்பு பிறக்கும்.
தனுசு ராசிக்காரர்களே
சனிப்பெயர்ச்சி 2020-23: தனுசு ராசிக்காரர்களே... ஜென்மசனி முடிந்து குடும்ப சனி ஆரம்பிக்குது
விகாரி வருடம் தை மாதம் 10ஆம் தேதி ஜனவரி 24, 2020ஆம் ஆண்டு சனி பகவான் தனுசு ராசியில் இருந்து மகரம் ராசிக்கு நகர்கிறார். இந்த சனிப்பெயர்ச்சியால் தனுசு மகரம் கும்பம் ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி காலமாகும். விருச்சிக ராசிக்காரர்கள் ஏழரை சனியில் இருந்து விடுபடுகிறீர்கள். தனுசு ராசிக்காரர்களுக்கு ஜென்ம சனி முடிந்து பாத சனி தொடங்குகிறது. சனி பகவான் இரண்டாம் வீட்டில் அமர்ந்து 4ஆம் வீடு, 8ஆம் வீடு 11ஆம் வீடுகளை பார்க்கிறார்.
தனுசு ராசிக்காரர்களுக்கு பாத சனி என்பதால் பட்ட காலிலே படும் என்பதால் அதிக கவனம் தேவை. தன, வாக்கு, குடும்ப ஸ்தானத்தில் சனி என்பதால் ஜாக்கிரதையாக பேசவும். குடும்பத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரும். டென்சனை குறைங்க. பேச்சில் கவனம் தேவை. குடும்பத்தில் உள்ளவர்களுடன் அனுசரித்து போங்க.
ஜென்ம சனி இனி 30 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் வரும். சனி பகவான் சற்று உங்கள் ராசி மாறி உங்களுடைய 2ம் இடமான தன ஸ்தானம் மற்றும் குடும்ப வாக்கு ஸ்தானம் வருவது சற்று பரவாயில்லை என்று தான் சொல்ல வேண்டும்.
பாத சனி ஆரம்பம்
ஜென்ம சனி முடிந்து பாத சனி தொடங்குகிறது. பாத சனி நடக்கும்போது மெதுவா நடக்கனும். பாத சனி நடக்கும்போது பலருக்கு காலில் பிரச்சினை வந்திருக்கிறது. சிலருக்கு காலில் கட்டுபோடும் நிலை வந்திருக்கிறது. எனவே நடப்பது,ஓடுவது,வாகனத்தில் செல்லும்போது அதிக கவனம் தேவை. சனி ராசிக்கு இரண்டில் வருகிறது. நமக்கு எதிரி நம் வாய்தான். நாம் எப்போதோ பேசிய வார்த்தைகள் இப்போது பஞ்சாயத்து வைக்கும் நிலையை உருவாக்கும்.
கவலை வேண்டாம்
குடும்பசனி குடும்பத்திற்கு ஆகாது. என்றே கூறுவர். அதை பற்றிய கவலைகளை தூக்கி எறிந்து விடவும்.சகோதர சகோதரிகளால் எதிர்பாராத பண வரவும், பொருள் வரவும் கிட்டும். உறவினர்களால் பொருள் வரவு அல்லது சகாயம் ஏற்படும். புதிய விஷயங்களைக் கற்க ஆர்வம் ஏற்படும். அடிக்கடி பயணங்கள் செய்ய வேண்டியது வரும். அந்தப் பயணங்களால் எதிர்பாராத நற்பலன்கள் ஏற்படும். இதுவரை இருந்து வந்த சோம்பல் நிலை மாறி சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட ஆரம்பிப்பீர்கள்.
பிரச்சினைகள் வரும்
பாக்கெட் காலியாகும் காலம் இது ஏற்கனவே நாலு வருசம் அப்படித்தான் இருக்கு என்கிறீர்களா. அதுவும் சரிதான் ஆனா. இரண்டில் சனி என்பது குடும்பத்தில் குழப்பம். கண்,பல்,சார்ந்த பிரச்சினைகள் வரும். டென்சனை குறைங்க. யார்கிட்டயும் வாக்குவாதமே செய்யாதீங்க, பெருமை பேசாதீங்க, கெளரவம் பார்க்காதீங்க. எல்லோரையும் மதிச்சு நடங்க. குடும்பத்தில் அனுசரித்து போங்க. எப்பவும் புலம்பாதீங்க. பயப்படாதீங்க. கோள் சொல்லாதீங்க.
உங்கள் மனதில் நீங்கள் எவ்வளவு அன்பானவர் என்று உங்களுக்கே தெரியும் அதை மற்றவர்களும் புரிஞ்சிக்கிற மாதிரி வார்த்தையாலும் அன்பை வெளிப்படுத்துங்க.
தடைகள் நீங்கும்
இதுவரை தள்ளிப் போன சுபகாரியங்கள் நடக்கும். இதுவரை தேகத்தில் இருந்த மந்த நிலை மாறி சுறுசுறுப்பும் வேகம் விவேகம் ஆரம்பமாகும். சமூகத்தில் சற்று பிரபலமாக வலம்வர வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். இதுவரை இருந்த வந்த கவலை, வேதனை, அசிங்கம் அச்சம், அவமானம் கஷ்டம் இவற்றிலிருந்து விடுபட்டு புதுவிதமான வாழ்க்கையை எதிர்நோக்கி உங்கள் பயணம் ஆரம்பிக்கும். இதுவரை தேவையற்ற செலவுகளையும் எதிர்பார்த்த உழைப்புகேற்ற பலனும் இல்லாமல் எக்காரியத்திலும் தடையும் தள்ளிபோடும் நிலையும் உருவாகி இருந்த நிலை மாறும்.
கணவன் மனைவி உறவு
காதல் விஷயங்கள் மகிழ்ச்சியாக இருந்தாலும் திருமணம் என்று வரும்பொழுது சற்று போராட்டமே ஆகும். கூட்டு குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு அதிகம். தேவையற்ற விஷயங்களை இருவரும் பேசுதல் கூடாது. தேவையில்லாமல் மூன்றாவது மனிதரை குடும்ப விஷயத்தில் இழுக்க கூடாது. காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும் சந்தோஷகரமாகவும் அமையும். இதுவரை தள்ளிப்போன சுபகாரியங்கள் சுபநிகழ்ச்சிகள் இனிதே நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாதவர்களுக்கு சந்தான ப்ராப்தி அமையும்.
புதிய வேலை கிடைக்கும்
வேலையில் அதிக முன்னேற்றம் அமையும். சுய தொழில்களால் நன்மை ஏற்படும். பங்கு சந்தைகள் ஓரளவு சாதகமான பலன் தரும். நண்பர்களால் எதிர்பாராத நன்மை ஏற்படும். வெளியூர், வெளிநாடு செல்வதில் சற்று தடைகள் ஏற்பட்டு பின் நிவர்த்தியாகும். அரசாங்க கடன் விஷயத்தில் அதிக கவனம் தேவை. வழக்குகள் சாதகமாக இருந்து வரும். 2ம் இடம் சனி என்பதால் எப்பொழுதும் பற்றாக்குறையான சூழ்நிலை உலவி வரும். வேலை தேடுபவர்களுக்கு ஓரளவு எதிர்பார்த்த வேலை கிடைக்கும். அதே சமயம் அதிக உழைப்பு குறைந்த வருமானம் என்ற அளவில் சனியின் தன்மை இருக்கும். வேலை காரணமாக ஒரு சிலருக்கு வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்புகள் அமையும்.
உயர்கல்வி யோகம்
மறதி என்பதை மறைந்து உற்சாகமாக இருக்கப் பழகுங்கள். புதிய விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பதை சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் படிப்பை ஒழுங்காக படித்தல் அவசியம். கல்வி கடன்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். எதிர்பார்த்த பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்க சற்றும் போரட வேண்டி வரும். சனிபகவான் 3ம் பார்வையாக உங்கள் ராசியின் 4ம் இடத்தை பார்ப்பதால் தடைபட்ட உயர் கல்வி தொடரும்.
பயம் கவலை நீங்கும்
அம்மாவிற்கு வரவேண்டிய பண வரவுகள் வந்து சேரும். அம்மாவின் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். இடம், வீடு, மனை, வண்டி வாகனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்க வாய்ப்பு அமையும். நல்ல வேலையாட்களுக்காகப் போராடிய உங்களுக்கு நல்ல வேலையாட்கள் அமைவார்கள். இதுவரை இருந்து வந்த அலைச்சல்கள் குறைந்து சற்று நிம்மதியான சூழ்நிலை உருவாகும். இதுவரை மனதில் இருந்து வந்த இனம் தெரியாத பயம், கவலை, மனக் குழப்பம் நீங்கி அதிலிருந்து விடுபட வாய்ப்புகள் அமையும்.
கடன் வாங்க வேண்டாம்
சனி பகவான் 7ம் பார்வையாக உங்களது ராசிக்கு 8ம் வீட்டை பார்ப்பதால் தேவையற்ற விஷயங்களில் தலையிடக் கூடாது. அரசாங்க விஷயங்களில் அதிக எச்சரிக்கை தேவை. போக்குவரத்து வண்டி வாகனங்களில் மிகவும் கவனமாக சென்று வாங்க. அறுவை சிகிச்சை செய்ய உகந்த காலமாகும். கடன் வாங்குவதில் கவனம் தேவை. 10ம் பார்வையாக உங்கள் ராசிக்கு 11ம் இடத்தை பார்ப்பது ஒரளவு அனுகூலமான விஷயம். எதிர்பாராத சொத்துகள் வந்து சேரும். உங்களது ஆசை, அபிலாஷைகளில் சிறிது தடை ஏற்பட்டாலும் இறுதியில் நன்மையில் முடியும். நண்பர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் நடப்பர். பார்க்கும் வேலையில் உத்யோக உயர்வும், ஊதிய உயர்வும் இருக்கும். மதிப்பும் மரியாதையும் கூடும்
மகரம் ராசிக்காரர்களுக்கு
சனிப்பெயர்ச்சி 2020-23: மகரம் ராசிக்காரர்களுக்கு ஜென்மசனியில் ஜென்ம பந்தம் ஏற்படும்
மகரம் ராசிக்காரர்களுக்கு ஏழைரை சனியில் இது ஜென்மச்சனி காலமாகும்.
இதுவரை விரயச் சனியாக இருந்து தேவையற்ற செலவினங்களை உருவாக்கிய சனிபகவான் இப்பொழுது தேவையற்ற விரயங்களையும் நஷ்டங்களையும் மருத்துவ செலவுகளையும் குறைத்து ஒருவித நிம்மதி பெருமூச்சுடன் வாழ வைப்பார். உங்களுடைய ராசிக்கு இதுவரை 12ம் இடத்தில் விரய ஸ்தானத்தில் விரய சனியாக சஞ்சரித்த சனி பகவான் இப்பொழுது ஜென்மச் சனியாக உங்களது ராசிக்கு சஞ்சாரம் செய்ய உள்ளார்.
சனிபகவான் உங்கள் ராசிக்கு அதிபதி அவரே இரண்டாம் அதிபதி. உங்கள் ராசி அதிபதி உங்கள் ராசியில் ஆட்சி பெற்று அமர்வதால் நன்மையும் தீமையும் கலந்த பலன்கள் நடைபெறும். ஜென்ம சனி என்றாலே பாதிப்பு வருமே என்று மகரம் ராசிக்காரர்கள் பயப்பட வேண்டாம்.எல்லோருக்கும் தனித்தனி ஜாதகம் இருக்கும். அவரவர் தசாபுத்திக்கு ஏற்ப பலன்கள் மாறுபடும்.
அதையும் தவிர சனிபகவான் உங்கள் ராசி அதிபதி உங்களுக்கு நன்மைகளையே செய்வார். சனிபகவான் உங்கள் ராசியில் அமர்ந்து கொண்டு ராசிக்கு மூன்றாம் இடம், ஏழாம் இடம், பத்தாம் இடத்தைபார்வையிடுவதால் உங்களுக்கு பல நன்மைகள் நடைபெறும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். தடைபட்டு வந்த திருமண சுபகாரியங்கள் கைகூடும். நல்ல வேலை கிடைக்கும். புரமோசனுடன் ஊதிய உயர்வு கிடைக்கும்.
சனிப்பெயர்ச்சி 2020-23 போராட்டமே வாழ்க்கை மனமும் உடலும் கொஞ்சம் ஒத்துழைக்காது. சோம்பல் அதிகரிக்கும். உணர்ச்சி போராட்டம் அதிகரிக்கும். மனம் இனி அறிவு சொன்னபடி வேலை செய்யாது. மனசு சொன்னபடிதான் எல்லாம் நடக்கும். அவ்வப்போது குழப்பம் அதிகரிக்கும் குழப்பத்தோடு செய்யும் காரியங்கள் எல்லாம் சொதப்பலாகத்தானே முடியும். இதனால் குடும்பத்திலும் நிம்மதி இழப்பு,தொழில் செய்யுமிடமும் கவனம் செலுத்த முடியாமல் நஷ்டம் உண்டாகும் வாய்ப்பு இருக்கு.
தொழில் லாபம் உங்கள் ராசியிலே சனிபகவான் சஞ்சாரம் செய்வதால் எதிர்பார்த்த வேலை கிடைப்பதில் சற்று தாமதம் ஏற்பட்டாலும் கிடைத்த வேலையில் முதலில் சேர்ந்து வேலை செய்யுங்கள். ஒரு சிலருக்கு அரசு வேலையும் கிடைக்கும். தனியார் நிறுவனங்களில் சக ஊழியர்களின் நட்பும் ஒத்துழைப்பும் கிட்டும். ஒரு சிலருக்கு வெளிநாடு செல்லவும் சந்தர்ப்பம் கிட்டும். பத்தாம் வீட்டை சனி பார்ப்பதால் போராட்டத்திற்கு பின் வேலை கிடைக்கும். எதிர்பார்த்த வேலை கிடைக்கவில்லை என்றாலும் ஆரம்பத்தில் கிடைத்த வேலையில் அமர்ந்து பின் விருப்பமான வேலையை தேர்வு செய்தல் வேண்டும்.
சம்பள உயர்வு சிலருக்கு சாதகமாக இல்லை என்றாலும் தொடர்ந்து வேலை இருக்கும். சிறு தொழில்கள் சிக்கலின்றி நடைபெறும். உடலை கவனியுங்கள் பணப்பிரச்சினை நெருக்கடியாகத்தான் இருக்கும் சமாளிக்கலாம். நெருப்பால் கண்டம் இருக்கு. அவமானம்,பழிசொல் ஏற்பட வாய்ப்பிருக்கு. புதிய ஆட்களிடமும் பழைய நட்புகளாக இருந்தாலும் கவனம் தேவை. உடல் ஆரோக்கியம் கெடும். எனவே கவனமாக செயல்படுங்கள். உடலுக்கும்,மனதுக்கும்,உறவுகளுக்கும் முக்கியத்துவம் கொடுங்கள். குடும்பத்தில் வீண் வாக்குவாதம் தவிருங்கள் எடுக்கும் முடிவுகளை பத்து முறை அலசியபின் செயல்படுத்துங்கள். வெற்றி மீது வெற்றி போராட்டமே வாழ்க்கை என்று கவலை வேண்டாம்.
நீங்கள் செய்யும் முயற்சிகளுக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். மன சஞ்சலங்கள், குழப்பங்கள் குறைந்து தைரியம் அதிகரிக்கும். தேவையற்ற பேச்சுக்களை குறையுங்கள். ஒரு சொல் வெல்லும் ஒரு சொல் கொல்லும் எனவே எச்சரிக்கையுடன் பேசுங்கள். சகோதரர்களால் நன்மை அம்மாவின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள். உங்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும். உடல் ஆரோக்யத்தில் அதிக கவனம் தேவைநெருங்கிய உறவினர்களால் தேவையற்ற பிரச்சினை ஏற்படும் பின்னர் சரியாகும். உடன் பிறந்த சகோதர சகோதரிகளால் நன்மை ஏற்படும்.
பழைய சொத்துக்களை விற்று புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். கல்வியில் தடை மாணவர்கள் கல்வியில் அதிக கவனம் செலுத்துங்கள். உயர்கல்வியில் தடை ஏற்படும். ஒரு சிலருக்கு வீடு மாற்றம், இட மாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும். வண்டி வாகனங்களில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. தேவையற்ற மனக் குழப்பத்தை தவிர்த்து எதையும் நன்கு சிந்தித்து செயல்பட்டால் மட்டுமே தேர்வில் வெற்றி பெற முடியும். உற்சாகமாக இருங்கள் நிச்சயம் நல்லது நடக்கும்.
ஞாபகசக்தியை அதிகரிக்க வேண்டும். தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் படிப்பில் கவனம் செலுத்தினால் மட்டுமே நன்கு மதிப்பெண் பெற முடியும். எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருங்க நல்லதே நடக்கும். சுப காரிய நிகழ்வுகள் உங்களின் களத்திர ஸ்தானத்தின் மீது சனிபகவான் பார்வை விழுகிறது. இதுநாள்வரை தடைபட்ட சுபகாரியங்கள் உற்சாகமான நடைபெறும். குடும்பத்தில் புது வரவு ஏற்படும். கணவன் மனைவி உறவு சந்தோஷமாக மகிழ்ச்சியாக இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் அடிக்கடி பங்கேற்பீர்கள்.
புத்திர பாக்கியம் கிடைக்கும். காதல் வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக செல்லும். கடனும் நோயும் பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. சிலருக்கு கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். பழைய கடனை அடைக்க புதிய கடனை வாங்க வேண்டி வரும். யாருக்கும் தேவை இல்லாமல் கடன் கொடுத்தல் கூடாது. எதிர்பார்த்த பணம், பொருள் வருவதில் சற்று கால தாமதமாகும். உடல் ஆரோக்யத்தில் அதிகக் கவனம் தேவை. அடிக்கடி அசதி, சோர்வு இரத்த அழுத்தம் ஏற்படும். நோய் எதிர்ப்பு சக்தி குறைந்து காணப்படும் என்பதால் சிறு பிரச்சினைகளுக்கு கூட மருத்துவரின் ஆலோசனை அவசியம்.
பெண்களுக்கு நிம்மதி சம்பாதிக்கிற பணமெல்லாம் செலவாகுதே கையில் நிக்கலையே என்று கவலைப்பட்ட உங்களுக்கு இனி சற்றே நிம்மதி பெருமூச்சு விடும் காலம் வந்து விட்டது. விரும்பி இடத்தில் வேலை கிடைக்கும். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் மதிப்பு மரியாதை கூடும். பெண்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். நேரத்திற்கு சாப்பிடுங்கள். கணவரிடரும், குடும்பத்தினரிடமும் உற்சாகமாக நேரத்தை செலவிடுங்கள். 30 மாதத்தில் ஜென்மசனியை சிக்கலின்றி கடந்து விடலாம்.
கும்ப ராசிக்காரர்களுக்கு விரைய சனி - ஏழரை ஆரம்பிக்குது
இதுவரை 11ம் இடத்தில் இருந்த சனிபகவான் இனி விரய ஸ்தானத்தில் விரய சனியாக சஞ்சாரம் செய்ய உள்ளார். சனிபகவான் மகரம் ராசியில் இருந்து உங்கள் ராசிக்கு 2 வது இடம், 6வது இடம், 9 வது இடங்களைப் பார்க்கிறார்.
சனிபகவான் உங்கள் ராசிக்கு 12 ஆம் அதிபதி, ராசி அதிபதியுமாவார். ஏழரையோ, அஷ்டமத்து சனியோ, கண்டச்சனியோ எதுவாக இருந்தாலும் நன்மையே செய்வார் எனவே கவலைப்படாமல் இந்த ஏழரை சனி பகவானை கடந்து விடலாம். கும்ப ராசிக்கு ஏழரை ஆரம்பிக்குதே என்று அஞ்ச வேண்டாம் இந்த ஏழரை ஆண்டு காலம் ஏற்றங்கள் நிறைந்த ஆண்டாக அமையப்போகிறது.
கும்பம் ராசிக்காரர்களுக்கு ஜாதகப்படி கிரகங்களின் சஞ்சாரம் நல்ல நிலையில் இருந்தாலோ, தசாபுத்தி நன்றாக இருந்தாலோ எந்த பாதிப்பும் வராது. இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், குடும்பத்தில் சந்தோசம், நிம்மதி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.
உங்களுக்கு நன்மைதான்
யாராவது சொந்த வீட்டிற்கு கெடுதல் செய்வார்களா? அதுபோலத்தான் சனிபகவானும் உங்களுக்கு ராசி அதிபதி. கும்பராசிக்காரர்கள் சனிபகவானுக்கு செல்லப்பிள்ளை. 12வது இடம் அயன சயன ஸ்தானத்தில் சனி அமர்வதால் ஏழரை ஆரம்பிக்கிறது. அடடா ஏழரை ஆரம்பிக்கிறதே என்று பயப்பட வேண்டாம். சனிபகவான் உங்கள் ராசிக்கு அதிபதி. அவர் நல்லதே செய்வார்.
விட்டுக்கொடுங்கள்
சனி பகவான் 12ல் அமர்வதால் பணம் விரையங்கள் மருத்துவ செலவாக ஏற்படும் எனவே இதை தடுக்க சுப செலவாக மாற்றுங்கள். நோயாளிகளுக்கு உதவி செய்யலாம். அவர் மகரத்தில் அமர்ந்து உங்களின் தனம், குடும்ப வாக்கு ஸ்தானமான இரண்டாவது ஸ்தானத்தை பார்க்கிறார் சனி. வாயினால் வம்பு வழக்குகள் வரலாம். நாவடக்கம் தேவை.எதை பேசினாலும் பிரச்சினை வரலாம் என்பதால் வாயை மூடி பேசவும். ஈகோவை விட்டுக்கொடுங்க. குடும்ப ஸ்தானத்தை சனி பார்ப்பதால் பிரச்சினைகள் வராமல் இருக்க விட்டுக்கொடுங்க. விட்டுக்கொடுப்பவர்கள் கெட்டுப்போவதில்லை.
கடன் கிடைக்கும் நோயும் வரும்
ராசிக்கு 6வது ஸ்தானத்தை சனி பகவான் பார்க்கிறார். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். செலவு செய்ய நோய் நொடிகள் எட்டிப்பார்க்கும். மருத்துவ ஆலோசனைகளை பெறலாம். எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படும். எதிர்பார்த்த விரும்பிய நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். கடன்பட்டு பொருட்கள் வாங்க வேண்டிய நிலை வரும். வேலையில் ஊதிய உயர்வு கிட்டும். பதவி உயர்வு ஒரு சிலருக்கு அமையும்.
ஆலய தரிசனம் நன்மை
பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால் தந்தைக்கு நன்மை ஏற்படும். வேலை நிமித்தமாக ஒரு சிலர் வெளிநாடு செல்வர். பாஸ்போர்ட், விசா இவற்றில் இருந்த தடைகள் நிவர்த்தியாகும். வெளிநாட்டு பயணங்கள் நன்றாக அமையும். பலருக்கு வெளிநாடுகளில் வேலை கிடைக்கும் யோகம் கிடைக்கும். அடிக்கடி ஆலய தரிசனம், தெய்வ தரிசனம் செய்ய சந்தர்ப்பமும், சூழ்நிலையும் அமையும்.
கல்வியில் கவனம்
மாணவர்கள் படிப்பில் அதிகக் கவனம் செலுத்துதல் வேண்டும். அடிக்கடி மறதி மற்றும் ஞாபகசக்தி குறைந்து காணப்படும். எனவே தேவையற்ற விஷயங்களில் கவனத்தைத் திசை திருப்பாமல் படிப்பில் கண்ணும் கருத்துமாய் இருங்க. கல்விக் கடன்கள் எளிதாக கிடைக்கும். தவறு செய்தால் மட்டுமே தண்டிப்பார். தலையில் குட்டி உங்கள் தவறை சுட்டிக்காட்டுவார். வம்பு வழக்குகளில் இருந்து ஒதுங்கி இருங்கள்.
பரிகாரம் என்ன
பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கலை தரும். போட்ட முதலீடு,கொடுத்த பணம் திரும்பி வருதல் கடினம் என்பதால் நிதானித்து செயல்படவும். அகலக்கால் வைக்க வேண்டாம். சிபாரிசு யாருக்கும் செய்ய வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கலால் உறவுகள்,நட்புகள் பகையாகும். மருத்துவ செலவுகள் புதிதாக வருகிறது. தவறுகள் அதிகமாகின்றன. அலைச்சல் அதிகரிக்கும். தாய்,தந்தைக்கு மருத்துவ செலவு வைக்கும் என்பதால் அவர்களை நன்கு கவனித்துக்கொள்ளவும். கும்பகோணம் அருகில் திருக்கோடிக்காவலில் சனிபகவான் பால சனியாக இருக்கிறார். அவரை வணங்கினால் நன்மை நடைபெறும்.
மீனம் ராசிக்கு இதுவரை 10ஆம் இடத்தில் இருந்த சனிபகவான் இனி 11ஆம் வீட்டில் லாப சனியாக சஞ்சாரம் செய்ய உள்ளார். சனிபகவான் மகரம் ராசியில் இருந்து உங்கள் ராசியை மூன்றாம் பார்வையாக பார்க்கிறார். 5 வது இடம் 8 வது இடங்களைப் பார்க்கிறார்.
உங்கள் ராசிக்கு 11வது இடத்தில் சனி அமர்வதால் சனிக்கிழமை செய்யும் செயல்கள் வெற்றி கிட்டும். லாப ஸ்தானத்தில் வரும் சனிபகவானால் இனி நன்மையே நிகழும். . இதுநாள் வரை மனதில் குழப்பமாக இருந்திருக்கும். இனி குழப்பம் நீங்கி நன்மையே நடக்கும். ஏற்கனவே பாக்ய ஸ்தான குருவினால் நன்மைகள் நடந்து கொண்டிருக்கின்றன.
சனிபகவான் 3வதுபார்வையாக உங்கள் ராசியை பார்ப்பதால் கல்வியில் மேன்மை கிடைக்கும். மாணவர்கள் நல்ல முறையில் தேர்ச்சி பெறுவீர்கள்.
7வது பார்வையாக சனி பகவான் உங்களின் ராசிக்கு 5வது இடத்தை பார்வையிடுகிறார். எனவே குழந்தைகளினால் நன்மை நடைபெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.
வருமானம் பெருகும்
லாப ஸ்தானத்தில் நிற்கும் சனிபகவானால் உங்களுக்கு வருமானம் பெருகும். பங்கு வர்த்தகத்தில் லாபம் கிடைக்கும். எடுத்த காரியம் வெற்றி கிடைக்கும். தொட்ட காரியங்கள் துலங்கும். மூத்த சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். கேட்ட இடத்தில் பணம் கடன் கிடைக்கும். லாப சனியால் தன லாபம்,வருமானம் அதிகரிக்கும்,தொழில் அபிவிருத்தி அடையும்,நண்பர்களால்,உறவுகளால் அதிர்ஷ்டம் உண்டாகும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.பதவி உயர்வு கிடைக்கும்.
திருமணம் சுபகாரியம்
கணவன் மனைவி ஒற்றுமை மேலோங்கும். காதல் விஷயங்கள் சற்று மகிழ்ச்சியாகவும் ஒரு சிலருக்கு திருமணத்திலும் முடியும். இது அதிர்ஷ்டகரமான சனிப்பெயர்ச்சி. சனிபகவான் அனைத்தையும் அள்ளி வழங்குவார். தான தர்மம் செய்யுங்கள். பகைவர்களிடத்திலும் அன்பு பாராட்டுங்கள். புதிய சொத்துக்கள் வாங்குவீர்கள்.சேமிப்பு உயரும்.பெண்களால் லாபம் அதிகரிக்கும்.
வெளிநாட்டு வேலை
இல்லத்தரசிகளுக்கு உறவுகளிடத்தில் மதிப்பு மரியாதை கிடைக்கும். வேலையின் நிமித்தமாக ஒரு சிலருக்கு இடமாற்றம் ஊர் மாற்றம் அமையும். வெளியூர், வெளிநாடு செல்ல சந்தர்ப்பங்கள் வந்து சேரும். பார்க்கும் வேலையை அவசரப்பட்டு விட்டு விடக் கூடாது. உடன் பணி புரிபவர்களால் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும்.
வெளிநாட்டு வாய்ப்பு
மாணவர்களே எதிர்பார்த்த பள்ளி கல்லூரிகளில் இடம் கிடைக்கும், நல்ல மதிப்பெண்கள் பெற கடுமையாகப் போராட வேண்டியது வரும். தேவையற்ற விஷயங்களில் மனதை செலுத்தாமல் படிப்பில் கவனம் தேவை. உயர்கல்வி பயில வெளிநாடு செல்வதில் தடையேற்பட்டு பின் அமையும். கல்வி கடன் கிடைக்கும். விளையாட்டுகளில் அதிக எச்சரிக்கை தேவை. இதுவரை வராமல் இழுத்தடித்த பாஸ்போர்ட், விசா போன்ற விஷயங்கள் சுமூகமாக அமையும். வெளிநாட்டு பயணம் அமைய வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் செழிப்பு ஏற்படும்.
உணவில் கவனம்
உடல் ஆரோக்யத்தில் சற்று எச்சரிக்கையாக இருத்தல் வேண்டும். உடலில் அடிக்கடி அசதி, சோர்வு மற்றும் அடிக்கடி மறதி ஏற்பட்ட வண்ணம் இருக்கும். உடலில் சளித் தொல்லை இல்லாமல் கவனித்தல் நலம். நேரத்திற்கு சாப்பிடுங்க கவனம் தேவை. உங்களுக்கு நிறைய நன்மைகளைத் தரக்கூடிய சனிப்பெயர்ச்சி என்பதால் செலவு செய்வதற்கு ஏற்ற வருமானத்தையும் சனி வணங்குவார்.
எச்சரிக்கை அவசியம்
உங்களின் ராசிக்கு 8வது இடத்தை சனி பார்வையிடுவதால் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை, விலை உயர்ந்த பொருட்களின் மீது கவனம் தேவை. வண்டி வாகனங்களில் அதிக எச்சரிக்கை தேவை. வண்டி வாகனங்களில் கவனமாக சென்று வருதல் வேண்டும். நாமக்கல் நகரில் உள்ள ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய பாதிப்புகள் குறைந்து மேலும் நன்மைகள் நடைபெறும். பித்ரு தோஷம்:
ஜாதகங்களில் சனி பகவானுடன் சூரிய பகவான் இணைந்தோ, பார்க்கப்பட்டிருந்தாலோ, சூரிய பகவானுடன் சர்பக் கிரகங்களான ராகு, கேது பகவான்கள் இணைந்திருந்தாலோ பித்ரு தோஷம் உள்ளது என்று கொள்ள வேண்டும். இதற்கு இராமேஸ்வரம் போன்ற புண்ணிய தலங்களுக்குச் சென்று உத்திராயண புண்ணிய காலத்தில் (தை மாதம் முதல் ஆனி மாதம் வரை) தில ஹோமம் செய்து விட்டு வர வேண்டும். இதற்குப் பிறகு சனிக் கிழமைகளில் சனி பகவானையும், ஞாயிற்றுக் கிழமைகளில் சூரிய பகவானையும், சிவபெருமானையும் வழிபட பித்ரு தோஷம் மறையத் தொடங்கும். மேலும் “”பிரேத சம்ஸ்காரம்” என்ற இறந்தவர்களின் உடலை நல்லடக்கம் செய்வதற்கோ அல்லது எரிப்பதற்கோ உதவுவது மிகவும் உயர்ந்த சனிப்பிரீதியாகும். குறிப்பாக அனாதைப் பிணங்களை எரிக்க உடலாலோ, பணத்தாலோ உதவி செய்பவர்கள் சனி பகவானின் கருணைக்குப் பாத்திரமாவார்கள்.
விழுப்பு ஆடையை அணியக் கூடாது:
விழுப்பு ஆடை என்பது முதல் நாள் படுக்கையில் அணிந்திருந்தது. அதை மறுநாள் துவைக்கப் போட்டுவிட வேண்டும். அப்படி இல்லாமல் அந்த விழுப்பு ஆடைகளை சனிபகவானின் பிடியில் இருப்பவர்கள் அதாவது ஏழரை நாட்டுச் சனி, அர்தாஷ்டம சனி, மற்றும் அஷ்டம சனி ஆகியவை நடப்பவர்கள் மறுநாளும் அணிந்துகொண்டால் சனி தோஷம் இன்னும் பலமாகும். அதோடு சனியின் பிடியில் இல்லாதவர்களும் விழுப்பு ஆடைகளை அணியக்கூடாது. “விழுப்பு இருக்குமிடத்தில் வில்வப் பழக்காரி வரமாட்டாள்” என்பது மூதோர் வாக்கு. வில்வப் பழக்காரி என்பது திருமகளைக் குறிக்கும்.
வாழ்க்கையில் செல்வத்தை இழந்து கஷ்டப்படுபவர்கள் பொருளாதார வளம் சிறக்க 12 வெள்ளிக் கிழமைகளில் மாலை வேளையில் மஹாலட்சுமியை வில்வ இலையால் அர்ச்சித்து வழிபட்டு வர வேண்டும். சென்னை, மயிலையில் உள்ள ஸ்ரீஆதிகேசவப் பெருமாள் கோயிலில் வெள்ளிக் கிழமைகளில் மயூரவல்லித் தாயாருக்கு வில்வத்தால் அன்பர்களின் நலனுக்காக அர்ச்சனை செய்யப்படுகிறது.
சனி பகவானுக்கு உகந்த பரிகாரம்:
சனிக்கிழமை செக்கு நல்லெண்ணெயை தலை, கை, கால் மூட்டுகள், தோள்பட்டை, இடுப்பு ஆகிய இடங்களில் நன்கு தடவி, சிறிது ஊறிய பின்பு குளிக்க வேண்டும். இதனால் சனி பகவான் தாக்கம் மட்டுமில்லாமல் மற்ற கிரகங்களின் தாக்கமும் குறையும். சனி பகவான் ஆயுள்காரகர் என்பதால் அத்தகையவர்கள் வழுக்கி விழுந்தாலும் இடுப்பில் அடிபட்டாலும் பாதிப்பு ஏற்படாது. ஏழரை சனிக் காலத்தில் கவனக் குறைவால் மறைமுகமாக ஏற்படும் அபாயங்களையும் சமாளிக்க முடியும். “சனியனே, முண்டமே’ என்று திட்டாமல் இருப்பது அவசியம். இது சனீஸ்வரரை கேவலப்படுத்துவதாகும். மேலும் சனிக் கிழமைகளில் எள் முடிச்சு விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும், விதவைகளுக்கும், முடவர்களுக்கும், முதியவர்களுக்கும் உதவி வர வேண்டும். நள புராணத்தைப் படிக்கலாம் அல்லது கேட்கலாம். சனி அஷ்டக ஸ்தோத்திரம் மற்றும் சனிபகவான் கவசம் ஆகியவற்றை படிக்கலாம்.
சிவபெருமானிடம் சனி பகவானுக்கு பக்தி அதிகம். சனி பகவான், பஞ்சாட்சரமான, ஐந்தெழுத்து மந்திரமான “நமசிவாய’ என்கிற மந்திரத்தை ஜெபம் செய்கின்றவர் என மந்திர சாத்திரங்கள் பேசுகின்றன. வைணவர்கள் சுதர்சன அஷ்டகம், ஆஞ்சநேய கவசம் படிக்க வேண்டும். குங்குலியப் புகையின் நடுவில் இருந்து கொண்டு ஸ்ரீமத் நிகமாந்த மகாதேசிகர் அருளிய சுதர்சன அஷ்டகத்தைப் படித்தால் சனி தோஷம் விலகும்.
சனி பிரதோஷம்:
சிவபெருமான் விஷம் அருந்திய நாள் சனிக்கிழமை. அவர் ஆனந்தத் தாண்டவமாடிய திதி திரயோதசி திதி. இந்த இரண்டும் சேர்ந்து வருவதுதான் சனிமஹா பிரதோஷம். ஒரு சனிப்பிரதோஷ தரிசனம் செய்தால் ஐந்து வருடங்களுக்கு சிவாலயம் சென்ற பலன் கிடைக்கும். அடுத்தடுத்து இரண்டு சனிப் பிரதோஷங்களை அனுசரிப்பது அர்த்தநாரி பிரதோஷம் என்று புகழப்படுகிறது. இதற்குப் பலன் பிரிந்த தம்பதிகள் கூடுவார்கள். மேலும் திருமணத் தடையும் விலகும். தவறவிட்ட செல்வம் மீண்டும் கை வந்து சேரும்.
சனிக் கிழமைக்கு வட மொழியில் ஸ்திரவாரம் என்று பெயர். (ஸ்திரம் என்றால் அசையாதது, நிரந்தரம், பலமாக ஊன்றி நிற்பது என்று பொருள்). அதனால்தான் சனி பகவான் வலுப்பெற்று அவர் தசையில் வாங்கும் வீடு, நிலம் ஆகிய சொத்துக்கள் நிரந்தரமாகத் தங்கி வம்சத்தினருக்கும் செல்லும். மேலும் சனி தசையில் வாங்கிய சொத்துக்களை அவ்வளவு எளிதில் சுலபமாக விற்க முடியாது.
ஐஸ்வர்யம் தங்கும்:
வீட்டில் குப்பைத் தொட்டி வைத்திருக்கும் இடத்தை சனி பகவான் ஆட்சி செய்கிறார். வீட்டைப் பெருக்கும்போது குப்பைகளை தென்மேற்கு மூலையில் குவித்து, அங்கிருந்து அள்ளி வெளியில் உள்ள குப்பைத் தொட்டியில் கொட்ட வேண்டும். இப்படிச் செய்வதால் இல்லத்தில் ஐஸ்வர்யம் தங்கும்.
Thanks for sharing this useful post with the community!
ReplyDeleteசனி பெயர்ச்சி பலன்கள் 2020 - 2023
Sani Peyarchi Palangal 2020-2023
சனி பெயர்ச்சி பலன்கள்
Sani Peyarchi Palangal
Sani Peyarchi
Contact kpj gems who helped thousands of people getting happiness in their life. Get 100% Solutions for all your problems from the Best astrologer in Chennai online / Online Astrology consultancy services in Chennai, Tamil nadu
ReplyDeleteOnline astrologer in Chennai