Pages

சர்ப்ப தோஷம், நாக தோஷம்

பலருக்கும் இந்த சர்ப்ப தோஷம் குறித்த சந்தேகம் இருந்து வருகிறது. சர்ப்ப தோஷம், நாக தோஷம் என்ற வார்த்தையை தற்காலத் தில்  அடிக்கடி கேட்க முடிகிறது. “நெடுநாட்களாகத் திருமணம் தடைபட்டு வருகிறதா, திருமணம் ஆகியும் குழந்தை பிறக்கவில்லையா,  சர்ப்பதோஷம் ஆக இருக்கும், போய் பரிகாரம் செஞ்சா எல்லாம் சரியாகிவிடும்”, என்று ஜோதிடர்கள் சொல்லி வந்த காலம்போய்,  தற்காலத்தில் சாதாரண மக்களே இந்த பரிகாரம் குறித்து பேசும் அளவிற்கு சர்ப்ப தோஷம் என்ற சொல் மிகவும் பிரபலமாகிவிட்டது.
நம் ஒவ்வொருவருக்கும் ஜாதகத்தில் ஏதாவது இரு இடங்களில் (கட்டங்களில்) ராகுவும், கேதுவும் நிச்சயமாக இடம் பெற்றிருப்பார்கள்.  நாக தோஷம்  ஜோதிடத்திலே பல வகையான தோஷங்கள் சொல்லப் பட்டிருக்கிறது.இதில் நாக தோஷம் என்ற ஒரு வகையான தோஷம் அடங்கும். லக்னத்திலிருந்து 1 , 5 , 9  இந்த ஸ்தானங்களில்  , ராகு, கேது, போன்ற கிரகங்கள் இருக்கும்பொழுது  அது  நாகதோஷம்  உடைய ஜாதகமாகிறது. நாக தோஷம் உடையவர்களுக்கு உடலில் ஏதோ ஒரு இடத்தில நாகம் போன்ற உருவம் கொண்ட மச்சமோ, அல்லது தழும்போ இருக்கும் என்று சொல்வதெல்லாம் கட்டு கதை.                                                                                                                                                                                               ஜாதகத்திலே நாக தோஷம் இருப்பவர்களுக்கு  , இவர்களுடைய கண்களுக்கு பாம்புகள் அடிக்கடி தென்படும். கனவிலும் பாம்புகள் அடிக்கடி தென்படும். இந்த தோஷங்கள் எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால் முன் ஜென்மத்தில் ஆண் நாகமும், பெண் நாகமும், ஒன்றாக இணைந்து  இருக்கும்பொழுது   அதை துன்புறுத்தினால், இந்த  ஜென்மத்தில் அவருடைய  ஜாதகத்தில் லக்னத்துக்கு  ஏழாம் இடத்தில ராகு என்ற கருநாகம் நின்று,  கணவனுக்கு     தோஷத்தையும், பாம்பு தன்னுடைய பசிக்காக இரையை தேடி
செல்லும்பொழுது  அதை துன்புறுத்தினால், இந்த ஜென்மத்தில் அவருடைய ஜாதகத்தில்,தொழில் ஸ்தானமான லக்னத்துக்கு பத்தாம் இடத்தில் ராகுவோ, கேதுவோ நின்று,தொழில் ஸ்தானத்துக்கு தோஷத்தையும் பாம்பு  முட்டையிட்டு குஞ்சு  பொரிக்கும்  காலத்திலும்,அல்லது தனது
குட்டிகளுடன் ஒன்றாக இருக்கும்பொழுது  அதைதுன்புறுத்தினால் இந்த
ஜென்மத்தில்,அவருடைய ஜாதகத்தில் லக்னத்துக்கு ஐந்தாம் இடமான புத்திர ஸ்தானத்தில்,ராகுவோ,கேதுவோ நின்று  நாக தோஷத்தை ஏற்படுத்தும்.
 நாக தோஷத்தை ஏற்படுத்தும். புராண காலங்களில் நாக தோஷம் எதற்க்காக பார்க்கப்பட்டது என்றால். ஒருவர் சன்யாசம் பெற்று காடுகளிலும் மலைகளிலும்,கடுமையான, தவங்கள் செய்வதற்கு கடுமையான  விஷ ஜந்துகளினால் இவருக்கு ஆபத்துஏற்படுமா என்பதை அறிந்த பின்னரேஅவருக்குசன்யாசம் கொடுக்கப்பட்டது.
நாக தோஷம் இதற்க்ககதான் பார்க்கப்பட்டது.நாளைடைவில் அது  ஒரு பயப்படக்கூடிய தோஷமாக  பார்க்கப்பட்டது
                                                                                                                                                                                                                                                                              சர்ப தோஷத்திற்கும், கால சர்ப தோஷத்திற்கும் வித்தியாசம் உண்டா? இருக்கிறது என்றால் என்ன?
சர்ப தோஷம் என்பது என்னவென்றால் லக்னத்தில் ராகு, 7ஆம் இடத்தில் கேது. இல்லையென்றால், லக்னத்தில் கேது, 7ஆம் இடத்தில் ராகு. பிறகு 2இல் ராகு, 8இல் கேது அல்லது 8இல் ராகு, 2இல் கேது. அதாவது லக்னம், 1ஆம் இடம் 7ஆம் இடம், 2ஆம் இடம் 8ஆம் இடம் இதில் இருந்தால் அதற்குப் பெயர் சர்ப தோஷம். ராசிக்கும் இதுபோல் இருந்தால் அதுவும் சர்ப தோஷம். ராகு, கேது தவிர எல்லா கிரகங்களும் அடங்கிவிடுகிறதென்றால் அதற்குப் பெயர் கால சர்ப தோஷம்.

சர்ப தோஷம் என்பது என்னவென்றால், திருமணத்தில் தடைகள், திருமணம் அமைவதில் தடைகள், திருமண வாழ்க்கையில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள், கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுக்க முடியாத ஈகோ பிரச்சனைகள் இவையெல்லாம் சர்ப தோஷம் சாதாரணமாக உருவாக்கும். இதனால் சர்ப தோஷயத்திற்கு சர்ப தோஷத்தையே நாம் சேர்க்கும் போது சில தோஷங்கள் நிவர்த்தியாகிறது. அதனால்தான், தோஷத்திற்கு தோஷம் சேர்க்கும் போது சில பாதிப்புகள் விலகும் என்று சொல்கிறோம்.

ஆனால், கால சர்ப தோஷத்திற்கு கால சர்ப தோஷத்தை சேர்க்கக்கூடாது. கால சர்ப தோஷம் என்பது என்னவென்றால், எல்லாவற்றையுமே காலம் கடத்திக் கொடுக்கும். உதாரணத்திற்கு, படிச்சாரு, வேலை கிடைக்கவில்லை. இல்லையென்றால் படித்ததற்கும், வேலை பார்ப்பதற்கும் சம்பந்தமில்லை. இந்த மாதிரியெல்லாம் கொண்டு போகும். இதேபோல, கூடுதலா 2 மார்க் வந்திருந்தால் அவனுடைய வாழ்க்கை எங்கேயோ போயிருக்கும், இல்லையென்றால் ஐஐடியில் சேர்ந்திருப்பார் என்றெல்லாம் கூறுகிறார்களே இதெல்லாம்தான் கால சர்ப தோஷம்.

அதாவது வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்று கடைசி நேரத்தில் வெற்றியை குறைக்கக் கூடிய அம்சம் இந்த கால சர்ப தோஷத்திற்கு உண்டு. காலமெல்லாம் நினைத்து நினைத்து வருந்துவது என்று சொல்வார்களே, அதுதான் கால சர்ப தோஷம். இதேபோல எல்லாவற்றையுமே தாமதமாக்கும். படித்து முடித்தால் வேலை கிடைக்கவில்லை. வேலை கிடைத்தது பிறகு கல்யாணத்திற்கு எவ்வளவோ தேடினார்கள், கடைசியில் ஏதோ ஒன்று சிம்ப்பிளாக பார்த்து முடிக்க வேண்டியதா போய்விட்டது. சரி, குழந்தை அது அதைவிட தாமதம். பிறகு அதற்காக டாக்டர்களிடம் அலைந்து அதன்பிறகுதான் குழந்தை பிறந்தது. இந்த மாதிரியெல்லாம் நடக்கும். இப்படி கால, நேரத்தை விரயமாக்கி, காலத்தைக் கடத்தி தரக்கூடியது கால சர்ப தோஷம்.

இப்படி கால சர்ப தோஷத்தில் இருப்பவர்களுக்கு பிறக்கிற குழந்தைக்கும் கால சர்ப தோஷம் தொடரும். எனவே அந்தக் குழந்தையை வளர்க்கிற விதத்தில் பெற்றோர்கள் கொஞ்சம் வித்தியாசப்பட வேண்டும். குழந்தையை நெருக்குதல் கொடுக்காமல், கடினமாக நடந்துகொள்ளாமல் இயல்பாக திட்டமிட்டு வளர்க்க வேண்டும். இதுமாதிரி கொண்டு வந்தால் கொஞ்சம் தவிர்க்கலாம். இல்லை, கொஞ்சம் அவர்கள் மாறிப் போகிறார்கள் என்றால், அவர்களை விட்டுத்தான் பிடிக்க வேண்டும். அதைவிட்டு விட்டு அவர்களுக்கு மிகவும் அழுத்தம் கொடுத்தால் அது கொஞ்சம் சிக்கலாகும். இதுபோன்று சில விஷயங்களெல்லாம் உண்டு. கால சர்ப தோஷ அமைப்பில் பிறந்த குழந்தைகளை பெருந்தன்மையாக கொண்டு செல்ல வேண்டும். அப்பதான் அவர்கள் நன்றாக இருப்பார்கள்.

அதைவிட்டு விட்டு, ஆரம்பத்திலேயே நீ டாக்டராக வேண்டும், எஞ்ஜினியர் ஆக வேண்டும் என்றெல்லாம் அவர்களிடம் எதையும் விதைக்கக் கூடாது. நன்றாக படி, எஎன்ன கிடைக்கிறது என்று பார்க்கலாம். அந்த நேரத்தில் என்ன விருப்பமாக இருக்கிறதோ அதில் சேர்ந்துகொள் என்று பேசி வளர்க்க வேண்டும். அதை விட்டுவிட்டு டாக்டராக்குகிறேன் என்று சொல்லி வளர்த்துவிட்டு, கடைசியில் 2 மார்க் சிக்கல் வந்தால், அந்தக் குழந்தைக்கு அப்பா, அம்மாவோட எண்ணங்களை பூர்த்தி செய்ய முடியவில்லையே என்ற தாழ்வு மனப்பான்மை அந்தப் பையனுக்கு வளர ஆரம்பித்துவிடும். கால சர்ப தோஷத்தில் பிறப்பவர்களுக்கு எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். அதை சந்திக்கிற அளவிற்கு பிள்ளைகளை முன்னெச்சரிக்கையோடு வளர்க்க வேண்டுமே தவிர, இப்படித்தான் ஆக வேண்டும், இதுதான் நல்லது, மற்றதெல்லாம் நல்லதில்லை என்றெல்லாம் வளர்க்கக் கூடாது.ஒவ்வொருவருக்கும் அவர்களின் அமர்வு நிலைக்கேற்ற பலன் என்பது தப்பாமல் நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கும். சரி,  அப்படியானால் யார், யார் பரிகாரம் செய்யவேண்டும் என்ற கேள்வி எழுகிறது. அடிப்படையில் நாகதோஷம் அல்லது சர்ப்ப தோஷம்  என்பது ராகு-கேது அமர்வு நிலையை வைத்தே குறிப்பிடப்படுகிறது. முதலில் ராகு, கேது ஆகியோரின் பணி என்ன என்பதைத்  தெரிந்துகொள்வோம். அறிவியல் உலகைப் பொறுத்த வரை ராகுவை Ascending Node என்றும் கேதுவை Decending Node என்றும்  குறிப்பிடுகிறார்கள். அதாவது இவர்கள் இருவரும் வான்வெளியில் பூமியின் சுற்றுப்பாதையில் குறுக்கிடுகின்ற வெட்டும் புள்ளிகளே அன்றி
உண்மைக் கோள்கள் அல்ல. ஆன்மிக ரீதியாக ராகுவை பாம்பு உடலும் மனித தலையும் கொண்டவராகவும், கேதுவை பாம்பு தலையும்,  மனித உடலும் கொண்டவராகவும் சித்தரிக்கிறார்கள். ஜோதிட உலகைப் பொறுத்தவரை இவர்கள் சாயா கிரஹங்கள் (நிழற் கோள்கள்) என்றே  குறிப்பிடப்படுகிறார்கள். இவர்களுக்கு என்று தனியாக வலிமை கிடையாது என்றும் தாங்கள் இருக்கும் இடத்தின் தன்மையையும், இணைவு  பெறுகின்றகிரஹத்தின் தன்மையையும் கிரகித்துக் கொண்டு செயல்படுவார்கள் என்றும் கூறப்படுகிறது.

இவர்களில் ராகு வினைஊக்கி (catalyst) ஆக செயல்படுவார். அதாவது, தான் இருக்கும் இடத்தின் வலிமையைக் கூட்டி வேகமாகச்  செயல்பட வைப்பார். உதாரணமாக தன ஸ்தானத்திலோ அல்லது லாப ஸ்தானத்திலோ ராகு அமர்ந்திருந்தால் தனமும், லாபமும் பெருகும்  என்பதையே பலனாகக் கொள்ள வேண்டுமே தவிர நேர்மாறான பலனாகக் கருதக்கூடாது. அவ்வாறே புத்ர ஸ்தானத்தில் அமர்ந்தால் நிறைய  பிள்ளைகளைத் தருவார். இதற்கு நேர்மாறான பலனைக் கேது தருவார். அதாவது, தான் அமர்ந்திருக்கும் இடத்தின் வலிமையை முற்றிலுமாகக்  குறைத்துவிடுவார். உதாரணமாக கடனைக் குறிக்கும் ஆறாம் இடத்தில் கேது அமர்ந்திருந்தால் கடன், பிரச்னைகள் முற்றிலுமாகக் குறையும்  என்றே பலன் கொள்ள வேண்டும். இந்த அடிப்படையில் ஐந்தில் கேது அமரும்போது புத்ரதோஷம் உண்டாகிறது. புத்ர ஸ்தானம் என்று  கருதப்படும் ஐந்தாம் இடத்தில் கேது தனித்து அமர்ந்திருந்தால் புத்ரதோஷம் என்று வர்ணிக்கப்படுகிறது.

இதனாலும் குழந்தை பாக்கியம்  தாமதமாகலாமே தவிர தடைபடாது. இந்த அமைப்பைப் பெற்றவர்கள் பரிகாரம் செய்து கொள்வது நல்லது. அதேபோல ஜனன ஜாதகத்தில்  லக்னத்திற்கு ஏழாம் இடத்தில் ராகுவோ கேதுவோ அமர்ந்திருந்தால் திருமணம் தாமதமாகலாம். அதுவும் தெய்வீக மூலைகள்  என்றழைக்கப்படுகின்ற மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய ஜாதகக் கட்டத்தின் நான்கு மூலைகளிலும் ராகு-கேது அமர்ந்தி ருந்தால் எவ்வித  தோஷமுமில்லை. இந்த நான்கு மூலைகள் தவிர மற்ற இடங்கள் ஏழாம்  இடமாக அமைந்து அங்கே ராகுவோ கேதுவோ அமர்ந்திருக்கும்  அமைப்பை உடையவர்கள் பரிகாரம் செய்து கொள்வது நல்லது.

ஜனன ஜாதகத்தில் காள சர்ப்ப தோஷம் என்று குறிப்பிடப்படுகின்ற ராகு மற்றும் கேது ஆகிய இரு சாயாக் கிரஹங்களுக்கிடையே அனைத்து  கிரஹங்களும் இடம் பெறுகின்ற ஜாதகத்தை உடையவர்கள் வாழ்க்கையில் சற்று சிரமப்பட்டு முன்னேற்றம் காண்பதை நடைமுறையில்  காண்கிறோம். இந்நிலையும் இரு வகையாக சமீப கால ஜோதிடர்களால் பிரித்து கூறப்படுகிறது. காள சர்ப்ப யோகம் என்றும், காள சர்ப்ப  தோஷம் என்றும் இருவேறு பெயர்களால் அழைக்கிறார்கள். இடமிருந்து வலமாகக் காணும்போது கிரஹங்கள் அனைத்தும் ராகுவில்  தொடங்கி கேதுவை நோக்கிச் சென்று முடிந்தால் (பாம்பின் வாயை நோக்கிச் செல்வதாக) அது தோஷம் என்றும், கேதுவில் தொடங்கி  ராகுவை நோக்கிச் சென்றால் அது யோகம் என்றும் வர்ணிக்கப்படுகிறது. தோஷ அமைப்பினைப் பெற்றவர்கள் 30 வயதிற்குமேல் மிகவும்  சிரமப்படுவார்கள் என்றும், யோக அமைப்பினைக் கொண்டவர்கள் 30 வயது முதல் 60 வயது வரை சிறப்பான முன்னேற்றத்தைக்  காண்பார்கள் என்றும் பலன் உரைக்கப்படுகிறது.



இவ்வகைத் தோஷங்கள் பரம்பரையில் தொடர்ந்து வருவதாக ஒருபுறம் ஜோதிட ஆராய்ச்சி  நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. யோகம் ஆகிலும், தோஷம் ஆகிலும் இவ்வகை அமைப்பைப் பெற்றவர்கள் எந்த ஒரு விஷயத்திலும்  அவ்வளவு எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள். ஒரு விஷயத்தை இப்படிச் செய்தால் நன்றாக இருக்குமா அல்லது வேறுமாதிரியாகச்  செய்ய வேண்டுமா என்று சதா குழம்பிக் கொண்டிருப்பார்கள். எந்த ஒரு முடிவையும் உடனுக்குடன் எடுத்துவிட மாட்டார்கள். தானும்  குழம்பி, மற்றவர்களையும் குழப்புவதில் வல்லவர்களாக இருப்பார்கள். அதேபோல இவர்களால் எந்த ஒரு விஷயத்திலும் தனித்துச்  செயல்பட இயலாது. கொடிபோல படர்ந்து செயல்படக்கூடியவர்கள். சரியான ஊன்றுகோல் போன்ற துணை கிடைத்துவிட்டால் அவர்களைக் கொண்டு வாழ்க்கையில் சிறப்பான ஏற்றத்தினைக் காண்பார்கள். இவ்வகை அமைப்பினைக் கொண்டவர்கள் காளஹஸ்தி,  ராமேஸ்வரம், திருநாகேஸ்வரம், திருப்பாம்புரம், கொடுமுடி போன்ற புண்ய ஸ்தலங்களில் வழிபாட்டின் மூலமாக பரிகாரம்  செய்துகொள்வது நல்லது.   

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று, நாம் நினைத்த காரியம் ஏதோ ஒன்று தடைபடுகிறது என்பதற்காக அதில் நாகதோஷம் உள்ளது, சர்ப்ப தோஷம் உள்ளது என்று எடுத்ததெற்கெல்லாம் பரிகாரம் செய்ய விழையக்கூடாது. பொதுவாக கோயிலுக்குச்  செல்வதும், இறைவனுக்கு அர்ச்சனை செய்து கொள்வதும் டானிக் சாப்பிடுவதைப் போல. தேவைப்படாதவர்களுக்கும் கூட அது வேறெந்த  விதத்திலும் பக்க விளைவுகளைத் தோற்றுவிப்பதில்லை. ஆனால் சர்ப்ப தோஷ சாந்தி என்பது ஆன்ட்டி&பயாடிக் மருந்து சாப்பிடுவதைப்  போல. ஆன்ட்டி-பயாடிக் மருந்தை தேவைப்படுபவர்கள் மட்டும், தேவையான அளவிற்கு சரியான மருத்துவரின் ஆலோசனையின்படியே  உட்கொள்ளவேண்டும். அதனை விடுத்து இஷ்டத்திற்கு சாப்பிட்டோமேயானால் பக்கவிளைவுகளை உண்டாக்கிவிடும். அதேபோல  எடுத்ததெற்கெல்லாம் சர்ப்பதோஷ சாந்தியை நாடினால் சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தது போல, வேறு பக்க விளைவுகளை சந்திக்க  நேரிடும் என்பதை உணர்வது அவசியம். சரியான ஜோதிடரின் ஆலோசனையின்படி செயல்படுதல் நன்று.நாக தோஷத்தைப் போக்கிட , நாக பிரதிஷ்டை செய்ய வேண்டும்!

நாக பிரதிஷ்டை செய்வது எப்படி?
அகலமான கருங்கல் பாறையொன்றில் பாம்புகள் இரண்டு பின்னிக்கொண்டு இருப்பது போன்ற உருவத்தை சிற்பியை செய்யச் சொல்ல வேண்டும்.

பாம்புகளின் தலை ஒன்றோ ஐந்தோ கொண்டவையாக வடிவமைக்க சொல்ல வேண்டும்.

இந்த நாக சிற்பத்தை இருபத்தேழு நாட்களுக்கு மேல், சுத்தமான தண்ணீரில் இருக்குமாறு வைக்க வேண்டும். தோஷம் உள்ளவனுக்கு ஏற்ற நாளில் நல்ல நாளில் தண்ணீரிலிருந்து எடுக்க வேண்டும். அந்த நாள் தாரா பலமும் சந்திர பலமும் உள்ள நாளாக இருக்க வேண்டும்.

அந்த நாளில், எட்டாமிடம் சுத்தமாக இருக்கின்ற இலக்கினம் நடைபெறும் நேரத்தை நாக சிற்பத்தை பிரதிஷ்டை செய்வதற்கு ஏற்ற நாளாக தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்த நாளில் , அரச மரமும் வேப்ப மரமும் ஒன்றிணைந்து இருக்குமிடத்தில்
நல்லொழுக்கமுள்ள , தெய்வ  நம்பிக்கை உடையவர்களைக் கொண்டு பிரதிஷ்டை செய்ய வேண்டும்.

அரச மர வேப்ப மரங்களின் அடியில் பீடம் எழுப்பி , அதன் மீது பிரதிஷ்டை செய்வது சிறப்பு.

நாக பிரதிஷ்டை செய்த பின் , நாக பிரதிஷ்டை செய்பவர் , மஞ்சள் அந்த சிலையின் மீது தங்கள் கைகளைக் கொண்டு மஞ்சள் கொட்ட வேண்டும். குங்குமப் பொட்டு வைக்க வேண்டும். மல்லிகைப் பூ / மஞ்சள் சாமந்திப் பூ சார்த்திடுதல் வேண்டும்.

முதல் வரிசையில் நான்கு நெய் அகல் தீபமும், இரண்டாம் வரிசையில் ஏழு நெய் அகல் தீபமும் ஏற்றிய ஒரு நெய் அகல்விளக்கைக் கொண்டு இருவரிசை நெய் அகல் தீபங்களை ஏற்றிட வேண்டும். ஏற்றிய நெய் அகல் விளக்கை நான்கு விளக்கின் முன்பாக வைத்திடல் வேண்டும்.

ஐந்து அகர்பத்திகள் ஏற்றி வைக்க வேண்டும். ஆறு மஞ்சள் வாழைப்பழம் வைக்க வேண்டும். வெற்றிலைப் பாக்கு வைத்தல் கூடாது. வாழைப் பழத்தில் ஊது வத்திகளை ஏற்றி வைக்கக் கூடாது. அதன் பின், கற்பூரம் ஏற்றி வைத்து மனமுருகி வழிபட வேண்டும்.

.
நாக தோஷத்திற்க்கான பரிகாரங்கள்.

இந்த தோசதிர்க்கான பரிகாரம் என்னவென்றால், இறை வழிபாடு மட்டுமே ஒருவர் செய்த வினையை போக்க உதவும் கருவியாகும். அதில் கர்ம கர்ம, ஞான , பக்தி மார்க்கம் என்று மூன்று வகைகள் உள்ளன. அதில் பக்தி மார்க்கமே இக்கலியுகத்தில் சிறப்பான பலனை தருகிறது. ஏழையின் சிரிப்பில்தான் இறைவனை முழுமையாக காண முடியும். வறியவர்களுக்கு தொண்டு செய்தாலே செய்த பாவத்தை  போக்க உதவும் பரிகார மாகும்.
வசதி படைத்தோர் கீழ் கண்ட திருத்தலங்களுக்கு சென்று பிரார்த்தனை சேது வருவதால் ராகு, கேதுவால், ஏற்படும் நாக தோஷங்கள் நீங்கி  நலம்  பெறலாம். கும்ப கோணத்தில் இருக்கும் திருநாகேஸ்வரம் , ஆந்திர மாநிலத்தில் திருப்பதிக்கு அருகில் உள்ள திருகாளஹஸ்தி, சென்னைக்கு அருகில் உள்ள கருமாரியம்மன் திருக்கோயிலுக்கு, சென்று வணங்கி வருவது, நாக தோஷங்களை நீக்கும். பரிகாரிகாரமாகும்.

பிரதோஷ வழிபாடு.

ஒவ்வொரு மாதமும் திரியோதசி திதியன்று, சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடைபெறுகிறது. பிரதோஷ வேளையில் மாலை 4 .30 மணியிலிருந்து 6 மணிக்குள் இவ்வழிபாடு நடைபெறும்.
ராகு கேதுவால் ஏற்படும் நாக தோசத்தை போக்க இது சிறந்த வழிபாடாகும். 1) லக்னத்தில் கேது  7-ல் இராகு இருக்க பெற்றவர்கள்.
2)லக்னத்திற்கு 7-ல் கேதுவோடு சுக்கிரன் அமைய பெற்றவர்கள்.
3) லக்னத்திற்கு 8-ல் செவ்வாயோடு இராகு அமைய பெற்றவர்கள் தலை சிதறி இறக்கும்  துர்பாக்கியம் உண்டு, ஆனால் காளத்தியப்பரை வழிபட்டால் நல்வாழ்வு சிறக்கும்.
4)லக்னத்தில் சூரியன் இராகு கூடி 7-ல் கேதுவோடு செவ்வாய் இருக்கும் பெண் இளம் வயதில் விதவை ஆகலாம் , ஆனால் காளஹஸ்தியில் இராகு கேது தோஷம் கழித்தால் கணவனுக்கு பூரண ஆயுள் கிடைக்கும்.
5) லக்னத்திற்கு 4-ல் இராகு வோடு சனியும் 10-ல் சூரியனோடு கேது அமர்ந்தால் தந்தை மகனுக்கு ஆகாது , தந்தையை கொலை செய்யும் அளவிற்கு மகன் துணிவான் ஆனால் திருநள்ளாறு ஈசனையும் , இராகு கேது தோஷம் கழித்தால் தந்தையும் மகனும் நாட்போடு வாழ்வர்.
6)லக்னத்திற்கு 5-ல் கேதுவோடு சனியும் 11-ல் இராகுவோடு புதனும் அமர்தால் தன் சொந்த பந்தங்களை விட பல மடங்கு லாபம் சம்பாதிக்கும் கோடீஸ்வர யோகமாகும் , ஆனால் அதனை ஆள மக்கட்பேறு பாக்கியம் இல்லை.ஆனால் காளஹஸ்தி ஈசனை வணங்கினால் மக்கட் செல்வம் உண்டாகும்.
7)லக்னத்திற்கு 2-ல் கேதுவோடு  சேர்ந்து சனியும் 8-ல் இராகுவோடு சோந்து குருவும் அமைந்தால் ,  ஞானியாகும் வாய்ப்பும்  நாணயமான ஒழுக்கமுள்ள குழந்தையாக , ஆபூர்வ குழந்தையாக பிறக்கும் , இப்பிறவி முன் பிறவியில் காளஹஸ்தி ஈசனை வழிபட்டு இறந்த புண்ய ஆத்மாவாகும்
.8) லக்னத்திற்கு 9-10-11 க்குடையோர் சேர்ந்து 5-9-10ம் இடங்களில் ஒன்று கூடி இருந்தால் மிக பெரிய ராஜ‌ யோகமாகும் ஆனால் இராகு கேது கிரங்களுக்குள் தர்ம் கர்மாதிபதிகள் 3  மாட்டி கொண்டால் யோகம் முழுவதும் செயல்படமுடியாமல்  போகும் , ஆனால் காளஹஸ்தி ஈசனை வழிபட்டால் இராகு கேது மன மகிழ்ந்து உலகம் போற்றும் உத்தமராக வாழ்வார்.
9) கேதுவோடு புதன் சேர்ந்து 12-ம் விட்டில் இருந்து 6-ம் வீட்டில் இராகுவோடு சுக்கிரன் அமர்ந்தால் இதில் ஏதாவது ஒரு கிரகம் உச்சம் ஆட்சியில் இருந்தால் மகாலட்சுமி யோகமாகும் , வெளிநாடுகளில் இருந்து செல்வம் சேர்ந்து தன்னை நம்பியவர்களுக்கு வாரிவழங்கும் வள்ளலாக இருப்பர் 12-ம் இட கேது புதனால் கெட்ட சகவாசமும் ஏற்படும் இராகு கேது  தோஷம் கழித்தால் உலகம் உள்ளவரை பெயர் அழியாம்ல் பாதுகாக்கப்படும்.
10) லக்னடத்திற்கு 7-ல் இராகுவோடு சூரியன் சந்திரன் சேர்ந்தால் மனதைரியம் குன்றியவராகவும் மனநிலை பாதிக்கபட்டவராகவும்  திருமணதடை ஏற்படும் ஆனால் காளஹஸ்தி ஈசனை வழிபட்டால் இராகு கேது மன மகிழ்ந்து  மன தைரியம் , மன நிம்மதி , திருமண பாக்கியம் ஏற்பட்டு இன்புற்று வாழ்வர்.
11) லக்னத்திற்கு 8-ம் வீட்டில் கேது சனி செவ்வாய் சேர்திருந்தும் குரு சுக்கிரன் ஸ்தானங்களில் இருந்து எட்டாம் வீட்டிற்கு பார்வைபடாமல்  இருந்தால் விபத்து ஏற்பட்டு இரண்டு கால்களை இழக்கும் துர்பாக்கியம் ஏற்படும் ஆனால் காளஹஸ்தி ஈசனை வழிபட்டால்இராகு கேது மன மகிழ்ந்து  விபத்துகளில் இருந்து பாதுகாக்கபட்டு சிறிய காயங்களோடு தப்பி விடுவர்.
12) சாதாரண குடிமகனை நாட்டின் உயர்ந்த பதவியான ஜனாதிபதியாகவும் , நாட்டை ஆளும் பிரதமராகவும் மாற்றும் சக்தி இராகு கேதுவிற்கு மட்மே உண்டு சுயநலம் ஆணவபோக்கு அதிகார துஷ்பிரயோகம் , வறுமையானவர்களை எட்டி உதைப்பது , பிறர் சொத்தை அபகரிக்கும்  தனவான்களை சாதாரண நிலைக்கும் கொண்டுவந்து நாடு கடத்தும் சூழ்நிலைக்கு தள்ளபடுவது  இராகு கேதுவின் வேலையே ஆனால் காளஹஸ்தி ஈசனை வழிபட்டால் மனதில் நல்லெண்ணம்  மட்டுமே பிறக்கும். 


2 comments:

  1. 2 il ragu kum sani um iruthu 8 il kethum kuru vum amaithal epadi irukum

    ReplyDelete
  2. 2 il rahu kum 8 il kethum , sooriyan ,sevvai erukiruthu,6 il gurum, 5 sanium thrumam life epadi erukium

    ReplyDelete