தொல்காப்பியர் முனிவர்

தொல்காப்பியர் முனிவர்
தொல்காப்பியம் எனும் நூலை எழுதியவர் தொல்காப்பியர் ஆவார். .தொல்காப்பியரின் காலம்: இவர் வாழ்ந்த காலம் இன்றளவும் தெளிவானதாக இல்லை.
தொல்காப்பியர் பதஞ்சலி முனிவர் காலத்தினும் (கி. மு. 200) முற்பட்டவர் என கே. எஸ். சீனிவாசப்பிள்ளை தனது நூலான தமிழ் வரலாறு நூலின் 26 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்
தொல்காப்பியர் எழுதிய 'தொல்காப்பியம்' வியாச முனிவர் வேதத்தைப் பகுத்ததற்கு முன் எழுந்தது என டாக்டர் உ. வே. சாமிநாதய்யர் சங்கத்தமிழும் பிற்காலத் தமிழும் என்ற தனது நூலின் 13-14 ஆகிய பக்கங்களில் விளக்குகின்றார்.
தொல்காப்பியனார் கி. மு. நான்காம் நூற்றாண்டினர் என Tamil Studies என்ற நூலில் 8 ஆம் பக்கத்தில் எம். சீனிவாச ஐயங்கார் தனது கருத்தை விளக்குகின்றார்.
வேதகாலமாகிய கி. மு. 1500 ஆம் ஆண்டிற்கும் முற்பட்டவர் தொல்காப்பியர் என மறைமலை அடிகளார் குறிப்பிடுகின்றார்.
"தொல்காப்பியனார் கி. மு. ஆயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்குப் பிற்பட்டவராதல் இயலாது என வித்வான் க. வெள்ளைவாரணன் தன் 'தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம்' என்ற நூலின் 127 ஆம் பக்கத்தில் குறிப்பிடுகின்றார்.
இறையனார் அகப்பொருள் நக்கீரனார் உரைப்படி தொல்காப்பியர் காலம் குறைந்தது கி.மு. 4200ஐத் தொடும்.
மேற்கோள்:தமிழ் வரலாறு, கே.எஸ். சீனிவாசப்பிள்ளை,பக்கம்-26
சங்கத்தமிழும் பிற்காலத்தமிழும் -டாக்டா் உ.வே.சாமிநாதய்யா்,பக்கம் 13-14
Tamil studies - எம்.சீனிவாச ஐயங்கார்.
தமிழ் இலக்கிய வரலாறு - தொல்காப்பியம், க.வெள்ளைவாரணன், பக்கம் 127.
No comments:
Post a Comment