பவன க்ருஹ ஸாஸ்திரம்

பவன க்ருஹம்
பவனம் என்றால் புனிதம் க்ருஹம் என்றால் வீடு புனிதமான வீடுகளை அமைக்கும் ஸாஸ்திரம் பவனக்ருஹம்.இது வாஸ்து ஸாஸ்திர அன்று எந்தெந்த பொருட்கள் கொண்டு எந்தெந்த வடிவில் வீடுகளை அமைத்தால் பிச்சல்,பிடுங்கள்,அகால,மரணம்,ஆவி,பேய்,பிசாசு,போன்ற,தொல்லைகள்அற்று சுகமாக வாழமுடியுமோ,அதைப்பற்றி விளக்கும் ஒரு பெரிய ஸாஸ்திரமாகும்
இந்த ஸாஸ்திரம் மிகவும் பழமையானது மிகவும் ரஹயஸயமானது, ஆகாயத்திலுள்ள கிரகங்களின் அமைப்பிற்கும் நக்ஷத்ர மண்டலங்களின் அமைப்பிற்கும் மேலும் அண்ட அசைவிற்க்கும் தக்கபடி அவரவர்கள் வாழ்கை முறைக்கு ஏற்ற வகையில் கட்டிடம் அமைக்கும் முறை இந்த ஸாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது இது எக்காலத்துக்கும் பொருந்தக்கூடியது.
இதற்கு வேண்டிய கிரககணிதம் நக்ஷத்ர கணிதம் அண்டகணிதம் போன்றவையும் இதிலடக்கம்,மிகப்பெரிய கணிதமான அதை தனியான தலையங்கத்தின் கீழ் விளக்கியுள்ளேன்
இதன் வகைகள்
1. யோக க்ருஹ நிர்ணயம்
எந்த வகையான பொருட்களை கொண்டு எந்த வடிவமைத்தால் நாம் நம்முடைய துரதிர்ஷ்ட ஒடுங்கப் பெற்று மிகவும் அதிர்ஷ்டமாக வாழ்ஓமோ,அத்தகைய விஷயங்களைப்பற்றி இதில் கூறப்பட்டுள்ளது
2. கர்ம க்ருஹ நிர்ணயம்
சுய தொழில் செய்பவர்கள் எந்த வகையான பொருட்களை கொண்டு எந்த வடிவமைத்தால் நம்முடைய சுய தொழிலானது பலதலை முறைகள் தொடர்ச்சியாக நடந்து பேரும் புகழும் உண்டாகுமோ அத்தகைய விஷயங்களைப்பற்றி இதில் கூறப்பட்டுள்ளது
3. ஞான க்ருஹ நிர்ணயம்
ஆராய்ச்சியாளர்கள் எந்த வகையான பொருட்களை கொண்டு எந்த வடிவமைத்தால் அவர்களுக்கு வேண்டிய ஆராய்ச்சி அறிவு மேன்மையாகுமோ,அவர்கள் புகழுடன் வளர்வார்களோ, அது ஸம்மந்தமான விஷயங்களைப்பற்றியும் மற்றும் ஆராய்ச்சி பொருட்களை வைக்கவேண்டிய இடம் போன்றவையும் இதில் கூறப் பட்டுள்ளது
4. பக்த க்ருஹ நிர்ணயம்
கோவில் அர்ச்சகர்கள்,உபந்நியாஸம் செய்பவர்கள்,ஞானஸாஸ்திரம் பயில்பவர்கள், வேதம் ஓதுபவர்கள், பக்தர்கள், ஞானிகள்,போன்றவர்கள்,எந்த வகையான பொருட்களை கொண்டு எந்த வடிவமைத்தால் அவர்களுக்கு வேண்டிய பலன் கிட்டுமோ அது ஸம்மந்தமான விஷயங்களைப்பற்றி இதில் கூறப் பட்டுள்ளது.
5. தேவதா க்ருஹ நிர்ணயம்
ஸர்வதேவதைகளுக்கும் எந்த வகையான பொருட்களை கொண்டு எந்த வடிவமைத்தால் அந்தந்த தோவதைகளுக்கு மகிழ்ச்சி உண்டாகி வேண்டிய பலனைத்தருமோ அது ஸம்மந்தமான விஷயங்களைப்பற்றி இதில் கூறப் பட்டுள்ளது.
6. ராஜ க்ருஹ நிர்ணயம்
அரசர்கள்,பேரரசர்கள்,சக்ரவர்திகள்,மந்திரிமார்கள்,தளபதிகள், போன்றவர்கள், எந்த வகையான பொருட்களை கொண்டு எந்த வடிவமைத்தால், தொடர்ச்சியாக அவர்களின் ஆட்சி நடந்து பேரும் புகழும் உண்டாகுமோ அத்தகைய விஷயங்களைப்பற்றி இதில் கூறப்பட்டுள்ளது.
7. ராஜவைத்ய க்ருஹ நிர்ணயம்
அரசர்கள்,பேரரசர்கள்,சக்ரவர்திகள்,மந்திரிமார்கள்,தளபதிகள்,செல்வந்தர்கள் போன்றவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிகக்கூடிய வைத்திய சாலைகள் அமைக்கும் முறைகள் இதில் கூறப்பட்டுள்ளது.
8. லகு வைத்ய க்ருஹ நிர்ணயம்
சாமான்யர்கள் மருத்துவ சிகிச்சை அளிகக்கூடிய வைத்திய சாலைகள் அமைக்கும் முறைகள் இதில் கூறப்பட்டுள்ளது.
9. க்ஷுத்ர க்ருஹ நிர்ணயம்
மிகவும் மோஸமான வியாதிகள், தொத்து வியாதிகள் போன்ற நோயாளிகளை மறைவாக வைத்து வைத்தியம் சிகிச்சை அளிகக்கூடிய வைத்திய சாலைகள் அமைக்கும் முறைகள் இதில் கூறப்பட்டுள்ளது.
10. மாந்தரீக க்ருஹ நிர்ணயம்
மந்திரவாதிகள்,மாந்திரீகர்கள்,தேவதாஉபாஸகர்கள்,துஷ்டதேவதா உபாஸகர்கள்,மனேவஸ்ய ஸாஸ்த்திரர்கள்,இந்திர மஹேந்திர ஜாலம் காட்டுபவர்கள், போன்றவர்களுக்கு எந்த வகையான பொருட்களை கொண்டு எந்த வடிவமைத்தால் அந்தந்த துறைகளில் வெற்றிகாண்பார்களோ அது ஸம்மந்தமான விஷயங்களைப்பற்றி இதில் கூறப் பட்டுள்ளது.
11. பாடசாலா க்ருஹ நிர்ணயம்
எந்த வகையான பொருட்களை கொண்டு எந்த வடிவில் கல்லூரிகள் அமைக்கப்பட்டால் அது பேரும் புகழுடனும் வளருமோ அது ஸம்மந்தமான விஷயங்களைப்பற்றி இதில் கூறப் பட்டுள்ளது.
12. க்ரீடா க்ருஹ நிர்ணயம்
எந்த வகையான பொருட்களை கொண்டு எந்த வடிவில் விளையாட்டு மற்றும் கேளிக்கை விடுதிகள் அமைக்க வேண்டுமோ அது ஸம்மந்தமான விஷயங்களைப்பற்றி இதில் கூறப் பட்டுள்ளது.
13. தாஸி க்ருஹ நிர்ணயம்
பாலியல் தொழில் புரிபவர்கள் எந்த வகையான பொருட்களை கொண்டு எந்த வடிவில் க்ருஹம் அமைக்கப்பட்டால் அவர்களுக்கு அதிக தனமும் புகழும் பெரிய மனிதர்கள் தொடர்பு மற்றும் உடல் வனப்பு ஆரோக்ய வாழ்வு போன்றவை ஏற்படுமோ அது ஸம்மந்தமான விஷயங்களைப்பற்றி இதில் கூறப் பட்டுள்ளது.
14. சோர க்ருஹ நிர்ணயம்
திருடுதல்,கள்ளகடத்தல்,அடியாட்கள்,கட்டப்பஞ்சாயத்து செய்தல் லஞ்சம் வாங்குதல்,கொலைபுரிதல்,போன்ற தொழிலில் ஈடுபடுபவர்கள் எந்த வகையான பொருட்களை கொண்டு எந்த வடிவில் க்ருஹம் அமைக்கப்பட்டால் அவர்கள் தண்டனைகள் அடையாமலும் அதிகமாக எவரிடத்திலும் அடிக்கடி சிக்காமலும் சந்தோஷத்துடன் நிம்மதியாக வாழ்வார்களோ அது பற்றியும்,மோலும் மேற்படி முறையில் ஸம்பாதிக்கப்பட்ட தனத்தை எப்படி மறைத்து வைக்க வேண்டுமோ அது ஸம்மந்தமான விஷயங்களைப்பற்றி இதில் கூறப் பட்டுள்ளது.
15. காரா க்ருஹ நிர்ணயம்
சிரைச்சாலை அமைக்கும் முறை
16. தண்டாதி க்ருஹ நிர்ணயம்
நீதி மன்றம் அமைக்கும் முறை
17. விக்ஞான க்ருஹ நிர்ணயம்
அரசாங்க பழம் பொருள் ஆராய்ச்சி கூடம் அமைக்கும் முறை
18. ராஜநிதிபோஷக க்ருஹ நிர்ணயம்
அரசாங்க கஜனா அமைக்கும் முறை
19. ஸமுத்ர ஸாமீப வாஸ க்ருஹ நிர்ணயம்
கடலோரத்தில் வசிக்கும் மக்கள் எந்த வகையான பொருட்களை கொண்டு எந்த வடிவில் அமைக்க வேண்டுமோ அது ஸம்மந்தமான விஷயங்களைப்பற்றி இதில் கூறப் பட்டுள்ளது.
20. பண்டக சாலா க்ருஹ நிர்ணயம்
அரசாங்கம் மற்றும் தனி மனிதர்கள் தானிய சேமிப்பு கிடங்கு அமைக்கும் முறை
21. வ்யாபார க்ருஹ நிர்ணயம்
கடை வீதிகள் மற்றும் கடைகள் தொழில் பேட்டைகள் அமைக்கும் முறை
22. சில்பாதிகூட க்ருஹ நிர்ணயம்
23 கல் மற்றும் உலோக சிலைகள் ஒவியங்கள்,கலைப்பொருட்கள் தயாரிக்கும் இடம்,தயாரிப்பவர்கள் எந்த வகையான பொருட்களை கொண்டு எந்த வடிவில் அமைக்க வேண்டுமோ அது ஸம்மந்தமான விஷயங்களைப்பற்றி இதில் கூறப் பட்டுள்ளது.
24. நாடகாதி க்ருஹ நிர்ணயம்
25. நடிகை,நடிகர்கள்,நாடகம் எழுதுபவர்கள்,கதாசிரியர்கள்,நடன நாட்டியர்கள், எந்த வகையான பொருட்களை கொண்டு எந்த வடிவில் க்ருஹம் அமைக்க வேண்டுமோ,அது ஸம்மந்தமான விஷயங் களைப்பற்றியும்,நாடக மேடைகள் சபாமண்டபங்கள் அமைக்க வேண்டிய முறைகளும் இதில் கூறப் பட்டுள்ளது.
26. வாபி கூப தடாகாணி நிர்ணயம்
கிணறு குளம் ஏரி போன்றவைகள் அமைக்கும் முறை
27. வேதனா க்ருஹ நிர்ணயம்
தண்டனைகள் நிறைவேற்றம் இடம் அமைக்கும் முறை
28. ரோஹகாதி ஜனவாஸ க்ருஹ நிர்ணயம்
மனேவியாதி,சித்தபிரமை போன்ற வியாதியஸ்தர்கள் வியாதிகள் நிவர்த்திக்காக அமைக்கப்படவேண்டிய இடம்
29. மேதா க்ருஹ நிர்ணயம்
சுய அறிவுக் க்ருஹங்கள் இவை புயல் அதிக மழை பூகம்பங்கள் போன்ற இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்படாத தன்னையும் காத்துக்கொண்டு தன்னுள் வசிப்பவர்களையும் காக்கும் க்ருஹத்தை அமைக்கும் முறை
30. ரிஷி க்ருஹ நிர்ணயம்
ராஜ ரிஷிகள் வாழ இடம் அமைக்கும் முறை
31. முனி க்ருஹ நிர்ணயம்
முனிவர்கள் வாழ் பர்ணசாலை அமைக்கும் முறை
32. கோசாலா க்ருஹ நிர்ணயம்
ஆடு,மான்,மாடு போன்றவைகளின் கொட்டகைகள் அமைக்கும் முறை
33. அஸ்வ கெஜ வாஸ க்ருஹ நிர்ணயம்
குதிரை லாயம் மற்றும் யானை கட்டுமிடம் அமைக்கும் முறை
34. ம்ருக பக்ஷி மத்ஸ்யாதி போஷக க்ருஹ நிர்ணயம்
நாய்,பன்றி,சிங்கம்,கரடி,ஒட்டகம்,புலி,பறவைகள்,மீன்கள் போன்றவை வளர்க்குமிடம் அமைக்கும் முறை
35. பாலபோதினி க்ருஹ நிர்ணயம்
சிறுவர்கள் படிக்கும் பள்ளிக்கூடம் அமைக்கும் முறை
36. ஷட்ருதுவாதி க்ருஹ நிர்ணயம்
37. ஆறு வகையான பருவங்களுக்கும் ஏற்றார் போல் எந்த வகையான பொருட்களை கொண்டு எந்த வடிவில் க்ருஹம் அமைக்க வேண்டுமோ,அது ஸம்மந்தமான விஷயங்களைப்பற்றி இதில் கூறப் பட்டுள்ளது.
38. விவாஹாதிசுபகார்ய க்ருஹ நிர்ணயம்
கல்யாண சத்திரம்,அன்னதானாதி சத்திரம்,யாத்திரீகர்கள் தங்கக்கூடிய தர்ம சத்திரங்கள் அமைக்கும் முறை
39. ஸர்வாயுதப்யாஸ க்ருஹ நிர்ணயம்
சர்வ விதமான பயிர்ச்சிக்கூடங்கள், ஆய்வகங்கள்,
போன்றவைகள் அமைக்கும் முறை
இவை அனைத்தையும் எமது குருநாதர் எனக்கு நன்கு போதித்துள்ளார் வீடு கட்டும் முன்னே எம்மை அனுகினால் உதவுவேன்
பவன க்ருஹம் என்ற இந்த ஸாஸ்திரம் வேறு யாருக்கும் தெரியவே தெரியாது எவரிடமும் கிடையாது
No comments:
Post a Comment