Pages

சீன ஜோதிடம்

புத்த பெருமான் இந்த உலகத்தை விட்டுச் செல்லும்போது, உலகிலுள்ள அனைத்து விலங்குகளிடமும் விடைபெற்றுச் செல்ல வேண்டி, அவையனைத்தையும் தம்மருகில் வருமாறு அழைப்பு விடுத்தாராம். அவர் அழைப்பை ஏற்று வந்த விலங்குகள் பன்னிரண்டே. தனது அழைப்பினை ஏற்று வந்த விலங்குகளுக்கு மதிப்புத் தரும் வகையில், அவரைப் பார்க்க வந்த வரிசையின்படி, பன்னிரண்டு வருடங்களுக்கு ஒவ்வொரு விலங்கின் பெயரை வைத்ததாக சீனாவில் கதை ஒன்று உண்டு.
இன்று சீனர்கள் ஒவ்வொரு வருடத்தையும் அந்த விலங்குகளின் பெயர்களைக் கொண்டே குறிப்பிடுகின்றனர்.
மனிதர்கள் தங்களுக்குக் கிடைத்த அறிவைக் கொண்டு, எத்தனையோ விடயங்களைக் கண்டுபிடித்தனர். எத்தனையோ விந்தைகளை ஆராய்ந்து தெளிவு பெற்று வருகின்றனர். எத்தனையோ புதுப்புதுக் கலைகளை உருவாக்கி வாழ்க்கையை சுவாரசியப்படுத்தி வருகின்றனர். அத்தகைய கலைகளில் ஒன்றே ஜோதிடக்கலை.
பல்வேறு நாடுகளில், பல்வேறு விதங்களில் ஜோதிடம் கையாளப்பட்டாலும் எல்லாவற்றிலும் ஒரு ஒற்றுமை உண்டு. குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட வருடத்தில் பிறந்தவர்கள், குறிப்பிட்ட சிறப்பினை, குணங்களைக் கொண்டவர்கள் என்பதையும், அவர்கள் வருங்காலம் எப்படி இருக்கும் என்பதையும் கணித்துக் கூறுவதில் எல்லா நாடுகளும் ஒன்றுபடும். ஆனால் கணக்கிடும் முறை மட்டுமே வேறுபடும்.
  இந்தியாவில் நட்சத்திரங்களின் போக்கினைப் பொறுத்தே ஒருவரின் குணாதிசயங்களையும் வருங்காலத்தையும் கணித்துக் கூறுவர். மேலைநாடுகளில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு குறியீடுகளைக் கூறி, அந்தக் குறியீடுகளில் பிறந்தவர்களின் தன்மையையும் குணங்களையும் வருங்காலத்தையும் கணிப்பர்.
சீனாவில் ஜோதிடம் என்பது பெரிய அளவில் நம்பப்படும் ஒன்று. வாஸ்து சாத்திரத்தின்படி பல விடயங்கள் செய்யப்படுகின்றன. ஒரு மனிதரின் பிறந்த வருடம், மாதம், நேரம் அடிப்படையில் பல கணிப்புகள் செய்யப்பட்டு, அதன் பின்னர் வாஸ்து கணிப்புகள் செய்யப்படுகின்றன.
சீனாவிலுள்ளவர்கள் 'உங்கள் வயது என்ன?' என்று பெரும்பாலும் கேட்கமாட்டார்கள். 'நீங்கள் எந்த வருடத்தைச் சேர்ந்தவர்?' என்றே கேட்பார்கள். அதற்கு, நீங்கள் பிறந்த ஆங்கில வருட எண்ணைக் குறிப்பிட்ட வேண்டிய அவசியம் இல்லை. எந்த விலங்கு வருடத்தில் பிறந்தவர் என்பதைச் சொன்னால் போதும். உங்கள் வயதைச் சரியாகக் கணித்து விடுவார்கள்.
முன் சொன்ன கதையில் குறிப்பிட்டபடி, சீனாவில் ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு விலங்கைக் குறிக்கும். ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு மணி நேரமும் ஒவ்வொரு விலங்கினைக் குறிக்கும்.
சீனர்கள் ஒவ்வொரு மனிதரின் குணங்களும், செயல்களும், வெற்றி தோல்விகளும் அவர்கள் பிறந்த நேரத்தின் படி அமைகின்றது என்பதைப் பெரிதும் நம்புகின்றனர். கி.மு. 2600ல் பேரரசர் ஹூவாங் தீ என்பவரால் இந்த விலங்குச் சக்கரம் அறிமுகப்படுத்தப்பட்டது என்று வரலாறு கூறுகிறது. கல்வியாளர்கள், இந்த ஜோதிடம் இந்தியாவிலிருந்து சீன வம்சத்தின்போது புத்த மத போதகர்களால் கொண்டு வரப்பட்டது என்றும் கூறுவர்.
சீனாவில் முன்னோர்கள், வருடங்களை 10 தேவலோகத் தண்டுகளாகவும் 12 துருவக் கிளைகளாகவும் கணித்தனர். ஆனால் இவை மிகவும் கடினமாக இருந்த காரணத்தால், 12 கிளைகளை விலங்குச் சின்னங்களைக் கொண்டே குறிப்பிட ஆரம்பித்தனர். 10 தண்டங்கள் என்பன ஐந்து மூலகங்கள் மற்றும் யின்-யாங் முறைகளில் அமைந்தவை. மரம், தீ, பூமி, உலோகம், நீர் என்பன ஐந்து மூலகங்கள். இத்துடன் யின்-யாங் சேர்ந்தால் யின் மரம், யின் தீ, யின் பூமி, யின் உலோகம், யின் நீர் என்ற ஐந்தும் யாங் மரம், யாங் தீ, யாங் பூமி, யாங் உலோகம், யாங் நீர் என்ற ஐந்தும் சேர்ந்து பத்தாயின. இத்துடன் எலி, எருது, புலி, முயல், டிராகன், பாம்பு, குதிரை, ஆடு, குரங்கு, சேவல், நாய், பன்றி என்று 12 துருவக் கிளைகளான வருடங்கள் பன்னிரண்டும் சேர்த்து சீனர்களின் ஜோதிடங்கள் கணிக்கப்படுகின்றன. ஐந்து மூலகங்கள், யின்-யாங், பன்னிரண்டு வருடம் என்ற இந்தச் சக்கரம் 60 வருடச் சக்கரம்.
சந்திரனை அடிப்படையாகக்கொண்டே வருடத்தின் ஆரம்பம் கணிக்கப்படுகின்றது. இந்த வருடத்தினுள்ளே பன்னிரண்டு மாதங்கள் சீனப் புது வருடத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை பகுக்கப்படுகின்றன. அதில் இருக்கும் இருபத்து நான்கு மணி நேரத்தில், ஒவ்வொரு இரண்டு மணி நேரமும் மறுபடியும் விலங்குகளாகப் பகுக்கப்படுகின்றது.
முதலில் நீங்கள் எந்த விலங்கு வருடத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைத் தெரிந்துகொள்வோமா?
கீழ்க்கண்ட அட்டவணையைக் கொண்டு அதைக் கண்டுகொள்ளலாம்.                                                                                                       1    பெப்ரவரி 05 1924–சனவரி 23 1925    எலி    பெப்ரவரி 02 1984–பெப்ரவரி 19 1985
2    சனவரி 24 1925–பெப்ரவரி 12 1926    எருது    பெப்ரவரி 20 1985–பெப்ரவரி 08 1986
3    பெப்ரவரி 13 1926–பெப்ரவரி 01 1927    புலி    பெப்ரவரி 09 1986–சனவரி 28 1987
4    பெப்ரவரி 02 1927–சனவரி 22 1928    முயல்    சனவரி 29 1987–பெப்ரவரி 16 1988
5    சனவரி 23 1928–பெப்ரவரி 09 1929    டிராகன்    பெப்ரவரி 17 1988–பெப்ரவரி 05 1989
6    பெப்ரவரி 10 1929–சனவரி 29 1930    பாம்பு    பெப்ரவரி 06 1989–சனவரி 26 1990
7    சனவரி 30 1930–பெப்ரவரி 16 1931    குதிரை    சனவரி 27 1990–பெப்ரவரி 14 1991
8    பெப்ரவரி 17 1931–பெப்ரவரி 05 1932    ஆடு    பெப்ரவரி 15 1991–பெப்ரவரி 03 1992
9    பெப்ரவரி 06 1932–சனவரி 25 1933    குரங்கு    பெப்ரவரி 04 1992–சனவரி 22 1993
10    சனவரி 26 1933–பெப்ரவரி 13 1934    சேவல்    சனவரி 23 1993– பெப்ரவரி 09 1994
11    பெப்ரவரி 14 1934–பெப்ரவரி 03 1935    நாய்    பெப்ரவரி 10 1994–சனவரி 30 1995
12    பெப்ரவரி 04 1935–சனவரி 23 1936    பன்றி    சனவரி 31 1995–பெப்ரவரி 18 1996
13    சனவரி 24 1936–பெப்ரவரி 10 1937    எலி    பெப்ரவரி 19 1996–பெப்ரவரி 06 1997
14    பெப்ரவரி 11 1937–சனவரி 30 1938    எருது    பெப்ரவரி 07 1997–சனவரி 27 1998
15    சனவரி 31 1938–பெப்ரவரி 18 1939    புலி    சனவரி 28 1998–பெப்ரவரி 15 1999
16    பெப்ரவரி 19 1939–பெப்ரவரி 07 1940    முயல்    பெப்ரவரி 16 1999–பெப்ரவரி 04 2000
17    பெப்ரவரி 08 1940–சனவரி 26 1941    டிராகன்    பெப்ரவரி 05 2000–சனவரி 23 2001
18    சனவரி 27 1941–பெப்ரவரி 14 1942    பாம்பு    சனவரி 24 2001–பெப்ரவரி 11 2002
19    பெப்ரவரி 15 1942–பெப்ரவரி 04 1943    குதிரை    பெப்ரவரி 12 2002–சனவரி 31 2003
20    பெப்ரவரி 05 1943–சனவரி 24 1944    ஆடு    பெப்ரவரி 01 2003–சனவரி 21 2004
21    சனவரி 25 1944–பெப்ரவரி 12 1945    குரங்கு    சனவரி 22 2004–பெப்ரவரி 08 2005
22    பெப்ரவரி 13 1945–பெப்ரவரி 01 1946    சேவல்    பெப்ரவரி 09 2005–சனவரி 28 2006
23    பெப்ரவரி 02 1946–சனவரி 21 1947    நாய்    சனவரி 29 2006–பெப்ரவரி 17 2007
24    சனவரி 22 1947–பெப்ரவரி 09 1948    பன்றி    பெப்ரவரி 18 2007–பெப்ரவரி 06 2008
25    பெப்ரவரி 10 1948–சனவரி 28 1949    எலி    பெப்ரவரி 07 2008–சனவரி 25 2009
26    சனவரி 29 1949–பெப்ரவரி 16 1950    எருது    சனவரி 26 2009–பெப்ரவரி 14 2010
27    பெப்ரவரி 17 1950–பெப்ரவரி 05 1951    புலி    பெப்ரவரி 15 2010–பெப்ரவரி 02 2011
28    பெப்ரவரி 06 1951–சனவரி 26 1952    முயல்    பெப்ரவரி 03 2011–சனவரி 22 2012
29    சனவரி 27 1952–பெப்ரவரி 13 1953    டிராகன்    சனவரி 23 2012–பெப்ரவரி 09 2013
30    பெப்ரவரி 14 1953–பெப்ரவரி 02 1954    பாம்பு    பெப்ரவரி 10 2013–சனவரி 30 2014
31    பெப்ரவரி 03 1954–சனவரி 23 1955    குதிரை    சனவரி 31 2014–பெப்ரவரி 18 2015
32    சனவரி 24 1955–பெப்ரவரி 11 1956    ஆடு    பெப்ரவரி 19 2015–பெப்ரவரி 07 2016
33    பெப்ரவரி 12 1956–சனவரி 30 1957    குரங்கு    பெப்ரவரி 08 2016–சனவரி 27 2017
34    சனவரி 31 1957–பெப்ரவரி 17 1958    சேவல்    சனவரி 28 2017–பெப்ரவரி 18 2018
35    பெப்ரவரி 18 1958–பெப்ரவரி 07 1959    நாய்    பெப்ரவரி 19 2018–பெப்ரவரி 04 2019
36    பெப்ரவரி 08 1959–சனவரி 27 1960    பன்றி    பெப்ரவரி 05 2019–சனவரி 24 2020
37    சனவரி 28 1960–பெப்ரவரி 14 1961    எலி    சனவரி 25 2020–பெப்ரவரி 11 2021
38    பெப்ரவரி 15 1961–பெப்ரவரி 04 1962    எருது    பெப்ரவரி 12 2021–சனவரி 31 2022
39    பெப்ரவரி 05 1962–சனவரி 24 1963    புலி    பெப்ரவரி 01 2022–சனவரி 21 2023
40    சனவரி 25 1963–பெப்ரவரி 12 1964    முயல்    சனவரி 22 2023–பெப்ரவரி 09 2024
41    பெப்ரவரி 13 1964–பெப்ரவரி 01 1965    டிராகன்    பெப்ரவரி 10 2024–சனவரி 28 2025
42    பெப்ரவரி 02 1965–சனவரி 20 1966    பாம்பு    சனவரி 29 2025–பெப்ரவரி 16 2026
43    சனவரி 21 1966–பெப்ரவரி 08 1967    குதிரை    பெப்ரவரி 17 2026–பெப்ரவரி 05 2027
44    பெப்ரவரி 09 1967–சனவரி 29 1968    ஆடு    பெப்ரவரி 06 2027–சனவரி 25 2028
45    சனவரி 30 1968–பெப்ரவரி 16 1969    குரங்கு    சனவரி 26 2028–பெப்ரவரி 12 2029
46    பெப்ரவரி 17 1969–பெப்ரவரி 05 1970    சேவல்    பெப்ரவரி 13 2029–பெப்ரவரி 02 2030
47    பெப்ரவரி 06 1970–சனவரி 26 1971    நாய்    பெப்ரவரி 03 2030–சனவரி 22 2031
48    சனவரி 27 1971–பெப்ரவரி 14 1972    பன்றி    சனவரி 23 2031–பெப்ரவரி 10 2032
49    பெப்ரவரி 15 1972–பெப்ரவரி 02 1973    எலி    பெப்ரவரி 11 2032–சனவரி 30 2033
50    பெப்ரவரி 03 1973–சனவரி 22 1974    எருது    சனவரி 31 2033–பெப்ரவரி 18 2034
51    சனவரி 23 1974–பெப்ரவரி 10 1975    புலி    பெப்ரவரி 19 2034–பெப்ரவரி 07 2035
52    பெப்ரவரி 11 1975–சனவரி 30 1976    முயல்    பெப்ரவரி 08 2035–சனவரி 27 2036
53    சனவரி 31 1976–பெப்ரவரி 17 1977    டிராகன்    சனவரி 28 2036–பெப்ரவரி 14 2037
54    பெப்ரவரி 18 1977–பெப்ரவரி 06 1978    பாம்பு    பெப்ரவரி 15 2037–பெப்ரவரி 03 2038
55    பெப்ரவரி 07 1978–சனவரி 27 1979    குதிரை    பெப்ரவரி 04 2038–சனவரி 23 2039
56    சனவரி 28 1979–பெப்ரவரி 15 1980    ஆடு    சனவரி 24 2039–பெப்ரவரி 11 2040
57    பெப்ரவரி 16 1980–பெப்ரவரி 04 1981    குரங்கு    பெப்ரவரி 12 2040–சனவரி 31 2041
58    பெப்ரவரி 05 1981–சனவரி 24 1982    சேவல்    பெப்ரவரி 01 2041–சனவரி 21 2042
59    சனவரி 25 1982–பெப்ரவரி 12 1983    நாய்    சனவரி 22 2042–பெப்ரவரி 09 2043
60    பெப்ரவரி 13 1983–பெப்ரவரி 01 1984    பன்றி    பெப்ரவரி 10 2043–சனவரி 29 2044
இந்தப் பட்டியல் சீன வருடத்தை அடிப்படையாகக் கொண்டது. சீன வருடத்தின் ஆரம்பம் மற்றும் முடிவு ஆங்கில வருடத்தின் ஆரம்பம் முடிவுக்கு சற்றே வேறுபடும். சீன வருடம் ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் வரும் முழு நிலவு நாளன்று ஆரம்பம் ஆகும். ஒரு மாதம் 29.5 நாட்கள் கொண்டது. ஆங்கில வருட அட்டவணைக்கு இணையாக்க சில வருடங்களில் கூடுதலாக ஒரு மாதம் சேர்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment