Pages

ஜாதகத்தில் பூர்வ புண்ணியம்

   
ஒருவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் 100 சதவிகித வலிமை பெறுவது ஜாதகருக்கு மிகுந்த நன்மைகளை வாரி வழங்கும் அமைப்பாக கருதலாம் , எடுத்துகாட்டாக ஒருவர் கல்வியில் சிறந்து விளங்க வேண்டும் எனில் பூர்வ புண்ணியம் வலிமை பெற்று இருக்க வேண்டும் , நல்ல நினைவாற்றல் , தன்னம்பிக்கை , உறவுகள் அல்லாத மற்றவர்களின் ஆதரவு , தெளிவான சிந்தனை திறன் மற்றும் செயல்பாடுகள் , வருமுன் கணிக்கும் புத்திசாலித்தனம் , தனது முன்னோர்களின் சொத்து சுகங்களை பெரும் யோகம் , முன்னோர்களின் நல்ல குணங்களை தான் அப்படியே பெற்று இருக்கும் அமைப்பு என்ற அமைப்பில் மிகுந்த நன்மைகளை வாரி வழங்குவது பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகமே என்றால் அது மிகையாகாது .

இவ்வளவு மேன்மைகள் பெற்ற பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் ஒருவருடைய ஜாதகத்தில் புத்திர சந்தானம் எனும் குழந்தை பாக்கியத்தை நிர்ணயம் செய்கிறது என்பது கவனிக்கப்பட வேண்டிய ஒரு விஷயம் , சுய ஜாதகத்தில் ஒருவருக்கு பூர்வ புண்ணியம் எனும் ஐந்தாம் பாவகம் நல்ல நிலையில் இருப்பது தனது வம்சம் விருத்தி பெற எவ்வித தடையும் இல்லாமல் ( ஆண் )  குழந்தை பாக்கியத்தை வழங்கும் , இதில் சில விதி முறைகள் உண்டு , தம்பதியர் இருவரது ஜாதக அமைப்பிலும் புத்திர ஸ்தானம் வலிமை பெறுவது நன் மக்கட்பேரை தரும் , மேலும் ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் சென்று ஜீவனம் செய்யாமல் இருப்பது மிகுந்த நன்மையை தரும் .

பூர்வ புண்ணியம் நல்ல நிலையில் இருந்து  அந்த ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெகு தொலைவு சென்று ஜீவனம் செய்துகொண்டு இருக்கிறார் என்ற ஒரு நிலை வரும் பொழுது , ஜாதகருக்கு (ஆண் வாரிசு ) புத்திர சந்தானத்தில் குறை வர வாய்ப்பு உண்டு ஏனெனில் ஜாதகரின் ( நல்ல நிலையில் இருக்கும் ) தனது பூர்வீகத்தை விட்டு வெளியிடங்களில் சென்று ஜீவனம் செய்வது , பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு உண்டான பலன்கள்  ஜாதகருக்கு வாழ்நாள் முழுவதுமே நடை பெறாமலே நின்று விடக்கூடிய வாய்ப்புகள் அதிகம் உண்டு, மேலும் ஜாதகர் தனது பூர்வீகத்தை விட்டு வெளியில் இருக்கிறார் என்றால் நிச்சயம் ஜாதகருக்கு கிடைக்க வேண்டிய நன்மையான பலன்கள் அதிக அளவில் தடை படும் என்பதே உண்மை .

மேலும் பூர்வ புண்ணியம் வலிமை பெற்று நல்ல நிலையில் அமர்ந்து பூர்வ புண்ணிய ஸ்தானம் சர ராசியாக இருப்பின் விரைவான குழந்தை பாக்கியத்தையும் , ஸ்திர ராசியாக இருப்பின் சில மாதங்களிலும் , உபய ராசியாக இருப்பின் சில வருடங்களிலும் நிச்சயம் குலம் விருத்தி பெற ஆண்வாரிசை தந்துவிடும் , எனவே சுய ஜாதக ரீதியாக புத்திர ஸ்தானம் வலிமை பெற்ற அன்பர்கள் எதற்காகவும் கவலை கொள்ள தேவையில்லைபூர்வபுண்ய ஸ்தானம் பலம் பெறுவது எப்போது???
பூர்வ புண்ணியம் ஸ்தானம் வழு பெற்று இருக்கும் போது சிலருக்கு
நேர்மாறான பலன் ஏற்படுகிறது ஏன் என்று சிறிது யோசித்தால் சில
உண்மைகள் வெளிபடுகின்றது
அதைபற்றி பொதுபலனை வைத்தே சிறிது கணக்கிடலாம்
ஆம் பூர்வ புண்ணிய ஸ்தானம் ஐந்தாம் இடம் வலு பெற்றால் மட்டும் போதுமா? இல்லை
1)ஐந்துக்கு ஐந்தாம் இடம் பாக்கியஸ்தானம் பார்கனும்
2)காலசக்கிரத்தின் ஐந்தாம் இடம் சிம்மம் அதையும் பார்கனும்
3) காலசக்ரத்தின்
ஐந்துக்கு சிம்மத்தையும் ஐந்து ஒன்பதாம் இடம்
தனுர் ராசியையும் பார்கனும்
4)இப்போது நாம் ஜாதகரின் லக்னம்
ஐந்தாமிடம் என்கிற பூர்வபுண்ணியஸ்தானம்
ஒன்பதாம் இடம் என்கின்ற பாக்கியஸ்தானம்
லக்னாதிபதி கெடமல் 3-6-8-எட்டில் மறையாமலும்
ஐந்தாம் இடம் அதிபதி ஐந்தில் நின்றோன்
ஐந்தில் சேர்ந்தோன்ஐந்தாமிடத்தை பார்பவன்
இவைகளை முதலில் எடுத்து கொண்டு பின்
ஐந்துக்கு ஐந்தாம் அதிபதி (ஒன்பதாம் அதிபதி )3-6-8-மறையாமல்
ஒன்பதாம் இடத்தை பார்க்கும் கிரஹம் சேரும் கிரஹம்
ஒன்பதாம் இடத்தின் அதிபதிக்கு வீடுகொடுத்தோன் ஆகியவற்றையும் கணக்கில் எடுத்துகொண்டு
காலசக்ரதின் ஐந்தாம் வீடு சிம்மராசியில் இருக்கும் கிரஹம் பார்வையிடும் கிரஹம் கணக்கில் கொண்டு
சூரியன் நிற்க்கும் இடம் சூரியனை பார்க்கும் கிரஹம் கணக்கில் எடுத்து கொண்டு பார்த்தால்
100%பூர்வபுண்ணியம் படைத்த ஜனனஜாதகம் இல்லையென்றே அடித்து சொல்லலாம்
இனி பூர்வபுண்ணியபலம் பலவீனம் சதவிகிதமாக பார்களாம்
90% 75% 50% பலம் பெற்ற பூர்வ புண்ணியம் இவைகளை பார்கலாம்
முதல் காலசக்ர ராசிக்கு பூர்வ புண்யாதிபதி ஆட்சி உச்சம் பெற்று மறையாமல் (3-6-8) கேந்திர கோணங்களில் இருக்கவேண்டும்
இதில் சப்தம கேந்திரம் துலாராசியை கணக்கிடகூடாது
அங்கு சூரியன் நீச்சம் ஆகிவிடுகிறாற்
அடுத்ததாய் ஜாதகரின் லக்னாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானதிபதிக்கு பகை ஏற்படாமல் கேந்திர திரிகோணம் ஏற்பட்டு இருக்கனும்
ஜாதகரின் பூர்வ புண்யாதிபதி கண்டிப்பாய் இருவீட்டிற்க்கு அதிபதியாக. அதாவது செவ்வாய் சுக்கிரன் புதன் குரு சனி இருந்தால் அவர்களின் மற்றோற்வீடும் கெடாமல் அதாவது அதில் பகை கிரஹம் மற்றும் சாயா கிரஹம் (ராகு கேது) சம்பந்தப்பட்டு இருக்ககூடாது
ஜாதகரின் ஐந்தாம் அதிபதி லக்ஷமி ஸ்தானம் எனும் (1-5-9)இருந்து வலுபெற்று சுபர் பார்வை சுபர் சம்பந்தம் ஏற்பட்டு இருக்க வேண்டும்
ஐந்து க்கு ஐந்து எனும் பாக்கியாதிபதி 9அல்லது கேந்திரஸ்தானத்தில் ஐந்தாம் அதிபதி சம்பந்தம் அல்லது ஐந்தில் இணைந்துஇருக்கும் கிரஹத்துடன் சுபசம்பந்தம் ஏற்பட்டு இருக்கவேண்டும்
முக்கியமாய் ஐந்தில் தனித்து கிரஹமோ அல்லது மூன்றுக்கு மேற்பட்ட கிரகமோ இருக்ககூடாது
ஐந்தாம் அதிபதி லக்னாதிபதிக்கு யோகியாய் இருப்பது சிறப்பு
கண்டிப்பாய் லக்னாதிபதியை பகை கிரஹம் சாயாகிரஹ சம்பந்தம் ஏற்ப்பட்டு இருக்ககூடாது
மிக முக்கியமாய் ஜாதகரின் தாத்தா இறந்து இருந்தால் ஜாதகரின் பிறப்புக்கு முன்னே அவருடைய இறப்பு திதி இறப்பு நட்சத்திரம் ஜாதகனுக்கு இருக்ககூடாது
பாடிப்பதுக்கு சிரமமாய் இருந்தாலும்
மேல் உள்ள நிலைகலை ஜோதிடர் சுலபமாய் தெரிந்து கொள்ளமுடியும்
நாம் கேட்பது ஜாதகரின் தாத்தா இறந்த நட்சத்திரம் திதியை மட்டுமே அத்திதி நட்சத்திரம் ஜாதகரோடு சப்பந்தபடவில்லை என்றால் பூர்வபுண்ணியம் எந்த அளவிற்கு பலம் பெற்று உள்ளதா என சுலபத்தில் கணித்துவிடலாம்
சரி ஒர் அளவிற்க்கு பூர்வபுண்ணியம் பலம் பெற்று உள்ளது என நமக்கு தெரிந்தவுடன்
அவனுக்கு எந்த வயதில் வேலை செய்யும்
எந்த திசையில் வேலை செய்யும்
எத்தனாவது வயதில் யோகம் வேலை செய்யும்
பூர்வபுண்ணியத்தின் பலன் இந்த ஜன்மாவில் (ஜனனத்தில்) கிடைக்குமா என பார்க வேண்டும்
ஜாதக உதாரணம் இல்லை பலம் பெற்று இருந்தாலும் கிடைக்காது என தெரிந்து அதன் பூர்வ புண்ணிய பலா பலத்தை சொல்லலாம்
இந்த ஜாதகத்தில் பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுவா இல்லையா?
காலசக்ரராசி அதிபதி காலசக்ரராசிக்கு 5ல் சிம்மத்தில் சிம்மராசிக்கு உறிய
சூரியன்அவனுக்கு இடம்கொடுத்த அதிபதி 5க்கு 5ல் தனுசு சூரியனுக்கு இடம்
கொடுத்த குரு 9ல்(காலசக்ர ராசிக்கு
ஜாதகரின் லக்னாதிபதி 7ல் கேந்திரஸ்தானம்
லக்னம் பூர்வபுண்யாதிபதி 5லக்ஷ்மி ஸ்தானம் சுக்கிரன்
ஜாதகரின் லக்னத்திற்க்கு 5க்கு 5-6 ஆம் அதிபதி சனி ஜாதாகனின் லக்னம் 5க்கு 5ம் அதிபதிசுக்கிரனுக்கு கேந்திரம்
ஜாதக லக்னத்துக்கு 7-10 கேந்திராதிபதி குரு 9 ல் லக்ஷ்மி ஸ்தானம்
இதில் 7-10 உறிய குரு 9ல் இருந்து லக்னம் ராசி, பூர்வபுண்ய ஸ்தான. மற்றும்அதிபதி சுக்கிரன் இவர்களை 5-7-9பார்வையாக பார்கிறார்
இதைகணக்கில் எடுத்துகொண்டு நான் மேலே சொன்ன விதிமுறைபடி இந்த
ஜாதகனுக்கு பூர்வபுண்ணிய பலன் எந்த அளவிற்க்கு கிடைக்கும் இல்லை பலனே கிடைக்காதா அப்படி கிடைத்தால் எந்த அளவிற்க்கு அவன் நிறைவான வாழ்கை பெற்று இருப்பான்
 

No comments:

Post a Comment