Pages

வீடு - மனை யோகம்

 
வீடு - மனை யோகம்
  ஜாதகத்தில் நான்காம் இடத்தில் அமையும் கிரகங்களைப் பொறுத்து வீடு- மனை யோகம் எவ்வாறெல்லாம் அமையும் என்று தெரிந்து கொள்ள முடியும். அதேபோன்று கிரகங்களின் பார்வை, சேர்க்கையின் அடிப்படையிலும் சில விளக்கங்களைச் சொல்கிறது ஜோதிடம்.
ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டின் அதிபதி 1-ம் வீட்டில் இருப்பின் அவர்களுக்கு எப்படியும் வீடு-மனை யோகம் கிட்டும். சுக்ரனும் செவ்வாயும் நன்கு அமைந்திருப்பின் செல்வச் செழிப்பு ஏற்படும். இவர்கள் எங்கு குடியிருந்தாலும் நல்ல சூழ்நிலையில் வாழும் அமைப்பு உருவாகும்.

ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டின் அதிபதி 2-ம் வீட்டில் அமைந்திருப்பின் இயற்கையாகவே நல்ல வீடு, வாசல் அமைந்துவிடும். இளவயதிலேயே நன்மைகளை அடைவார்கள்.

தமது கல்வி, கலை ஞானத்தாலோ, தாய்வழி உறவுகளின் மூலமோ வீடு-வாசல் அமைத்துக்கொள்ளும் யோகம் உண்டு.

ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டின் அதிபதி 3-ம் வீட்டில் இருப்பின் சொத்து-சுகம் அமைவது சிரமம். இத்தகைய அமைப்பு உடையவர்களுக்கு 4-ம் வீட்டிலோ, 10-ம் வீட்டிலோ கிரகங்கள் வலிமை பெற்று அமைந்திருப்பின், அந்த கிரகங்களின் தசா-புக்தி நடைபெறும் காலத்தில் வீடு-மனை யோகம் சித்தமுண்டாகும்.

ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டின் அதிபதி அந்த வீட்டிலேயே இருப்பின், அந்த கிரகத்தின் தசை நடைபெறும் காலத்தில் வீடு-வாசல் ஏற்படும். ஆனால், இந்த காலகட்டத்தில் பெற்றோரில் ஒருவரை இழக்க நேரிடும்.

ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டின் அதிபதி 5-ம் வீட்டில் இருப்பின் சொத்து-சுகம் ஏற்படும். ஆனால் பிள்ளகளால் சொத்து பின்னம் அடைய வாய்ப்பு உண்டு.

ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டின் அதிபதி 6-ம் வீட்டில் இருப்பது கெடுபலனாகும். நிலையான சொத்து சுகம் இருப்பினும் வீட்டில் சச்சரவுகள் இருந்துவரும். பல இடங்களில் குடியிருக்க வேண்டியது வரும்.

அதேபோன்று சொத்துக் களை அடமானம் வைக்கவும் நேரிடும். இத்தகைய அமைப்பு உள்ளவர்கள் மற்றவர்கள் பெயரில் சொத்துக்களை வாங்குவது சிறப்பு.

ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டின் அதிபதி 7-ம் வீட்டில் இருப்பின் நிச்சயம் வீடு-மனை யோகம் உண்டு. திருமணக் காலத்துக்குப் பிறகு வீடு-வாசல் அமையும்.

7-ம் வீட்டில் எத்தனை கிரகங்கள் சேர்ந்துள்ளனவோ, அத்தனை வீடுகள் கட்டி வாழலாம். கெட்ட கிரகங்களின் சேர்க்கை இருப்பின், ஒன்றிரண்டு சேதாரம் ஆகும்.

ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டின் அதிபதி 8-ம் வீட்டில் இருப்பின், சொத்துக்களில் பங்கம் ஏற்படும். சொந்த வீடு உண்டானால், அந்த காலம் முதல் பல வழிகளில் தொந்தரவுகள் சூழும். இவர்கள் வாழ்க்கைத் துணைவர் பெயரில் வீடு கட்டிக்கொள்வது நல்லது.

ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டின் அதிபதி 9-ம் வீட்டில் இருப்பின் சொந்த வீடு-வாசல் அமையும். மூதாதையர் சொத்துக்கள் இருக்கும். ஆனால், ஜாதகர் அவ்வீட்டில் குடியிருப்பது நெடுங்காலம் நீடிக்காது. பெரும்பாலும் உறவினர்களே அவ்வீட்டை அனுபவிப்பர்.

ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டின் அதிபதி 10-ம் வீட்டில் இருப்பின், சுய முயற்சியாலோ, தாய்-தந்தை உதவியாலோ, வாழ்க்கைத் துணைவியின் சம்பாத்தியத்தின் மூலமோ நிச்சயம் வீடு-மனை யோகம் அமையும்.

ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டின் அதிபதி 11-ம் வீட்டில் இருப்பின், ஒன்றை இழந்து ஒன்றைப் பெற வேண்டும். இந்த கிரகத்தின் தசை அல்லது புக்தி நடைபெறும் காலத்தில் வீடு-வாசல் அமையும். ஆனால், தாய் அல்லது தாய்வழி உறவினரை இழக்க நேரிடும்.

ஜனன ஜாதகத்தில் 4-ம் வீட்டின் அதிபதி 12-ம் வீட்டில் இருப்பின் சொத்து விரயம் ஏற்படும். ஆனால் இந்த கிரகத்தின் தசையில் புதிய வீடு கட்டும் யோகமும் உண்டாகும்.

4-ம் வீட்டின் அதிபதி வக்ரம் பெற்று அமைந்து இருப்பின், கட்டிய வீடு நிறைவடையாது; பாதியில் நின்று விடும். பெரும் முயற்சிக்குப் பிறகு அதை கட்டி முடிக்கும் யோகம் உண்டாகும்.

ஜோதிடம் குறிப்பிடும் இந்த விளக்கங்களை மனதில் கொண்டு, நமது ஜாதகத்தை ஆராய்ந்து, கிரக அமைப்புகளின் நிலையறிந்து செயல்பட்டால் இல்லமும் வாழ்க்கையும் சுபிட்சம் அடையும்


No comments:

Post a Comment